சித்தர்களின் மாந்திரிகம் ஆகக் கூடிய ஒழுங்குகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றை முறையாக கையாளுவதன் மூலமே தேவையான பலன்களை பெற்றிட முடியும் என சித்தர் பெருமக்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன. அந்த வகையில் தேவையான சில முன் தயாரிப்புகளை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் அந்த வகையில் இன்று மாந்திரிக பயிற்சியின் போது அமர வேண்டிய ஆசனம், பூசைக்கு பயன் படுத்திட வேண்டிய மலர், உடுத்திட வேண்டிய ஆடைகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அமரும் ஆசனம் எந்த மரத்தின் பலகையால் அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்று புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
"தானெனபலா பலகை தம்பனந்தானென்ற
தன்மை பெரும் மாம் பலகை மோகனந்தான்
நானென்ற வில்வமது வசியமாகும்
நல்லபேய்த் தேத்தான் பேதன மதாகும்
கானென்ற எட்டி வித்துவேடணந்தான்
கண்மணியே அத்தியும்மா ரணமதாகும்
வானென்ற அழைப்பு வெண்நாவலாகும்
வளமாம் வெப்பாலை யுச்சாடனமாம் பாரே"
- புலிப்பாணிச் சித்தர் -
பலா பலகை - தம்பனம்
மாம் பலகை - மோகம்
வில்வம் - வசியம்
பேய்த்தேத்தான் - பேதனம்
எட்டிப்பலகை - வித்துவேடணம்
அத்திப்பலகை - மாரணம்
வெண்நாவல் - ஆக்ருசணம்
வெப்பாலை - உச்சாடனம்.
இதே வகையில் மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும் போது பூஜைக்கு பயன் படுத்த வேண்டிய மலர்களைப் பற்றி புலிப்பாணிச்சித்தர் பின் வருமாறு வகைப்படுத்துகிறார்.
"பாரப்பா மல்லிகை தான் வசியமாகும்
பகரரிய முல்லை மோகனமு மாகும்
ஆரப்பா தும்பையதுச் சாடனந் தான்
அப்பனே அரளியா கிருடணந் தான்
வாரப்பா காகணத்தி பிரிவுமாகும்
வளமான பேதனமூ மத்தம்பூ
நாரப்பா கடலைப்பூமாரணந் தான்
நலமான தாமரைதம் பனந் தானாமே"
- புலிப்பாணிச் சித்தர் -
மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ருசணம்
காக்கனமலர் - வித்துவேடணம்
ஊமத்தம் - பேதனம்
கடலைமலர் - மாரணம்
தாமரை - தம்பனம்
இறுதியாக மாந்திரீக பயிற்சியின் போது அதனை செய்பவர்கள் அணிவதுடன் செய்யும் மூலங்களை அலங்கரிக்க வேண்டிய ஆடை வகைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் புலிப்பாணிச்சித்தர்.
அப்பனே மஞ்சளது மோகனந்தான்
நாமப்பா பச்சையுந் தம்பனம தாகும்
நலமான வெள்ளையது பேதனந்தான்
காமப்பா கழுதை நிறம் வேடணந்தான்
கண்மணியுச் சாட னந்தான் பஞ்சவர்ணம்
வாமப்பா ஆந்தை வர்ணம் அழைப்பாகும்
வளமான கறுப்பு மாரணமாங் கேளே"
- புலிப்பாணிச் சித்தர் -
செம்பட்டு - வசியம்
மஞ்சள் பட்டு - மோகனம்
பச்சைப்பட்டு - தம்பனம்
வெள்ளைப் பட்டு - பேதனம்
கழுதைவண்ணப்பட்டு - வித்துவேடணம்
பஞ்சவர்ணபட்டு - உச்சாடனம்
ஆந்தைவண்ணப்பட்டு - ஆக்ருசணம்
கருப்பு வண்ணப்பட்டு - மாரணம்.
இத்துடன் முன் தயாரிப்புகள் நிறைவடைந்தன. இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு மாந்திரிக வகையாக பார்ப்போம்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
Dear thozi,
Thanks a lot.
Dear thozi,
To get eight kinds of siddhis', we have to follow all these things. To get a darshan of God
is an eternal bliss.Thank you very much.
nandi thozhi
அன்பு தோழிக்கு, காலை வணக்கங்கள்.
வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்கள் மிக ரகசியமானவை, அற்புதமானவை, மிக அதீத பலன் தரக்கூடியவை நல்லோர்கள் இதனை கவனமாக பயன்படுத்தினால் நன்மைகள் பெருகும்.
அறிய அபூர்வ தகவல்களை வெளிக்கொணரும் உங்கள் நல்லெண்ணம் செம்மையுற வாழ்த்துகிறேன்.
அன்பன் கருணாகரன்
Dear Thozi,
Thanks a lot.
நல்ல பயனுள்ள பதிவு...நன்றி தோழி
Dear Thozhi
You are 'VERY GREAT THOZHI'
Please send me your contact Number or Mail ID
My Id: naracreative@gmail.com
Thanks a lot
Post a Comment