மாந்திரிகமும் முன் தயாரிப்பும்!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய மாந்திரிகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும், அதன் மூல மந்திரங்களைப் பற்றியும், அந்த மந்திர உபாசனைகளை துவங்கிட வேண்டிய நாள் பற்றியும் முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அமர வேண்டிய திசை, உடலில் அணிய வேண்டிய மாலைகள், செபிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய மாலைகள் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

இந்த தகவல்கள் யாவும் புலிப்பாணி சித்தரின் பாடல்களில் இருந்து திரட்டப் பெற்றவை. மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது செய்பவர்கள் நோக்கி இருக்க வேண்டிய திசைகளையும் அதன் அதி தேவதைகளைப் பற்றியும் புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"நாமேதான் ஈசான்யம் வசியமாகும்
நலமான அக்கினிமோ கனமாம்பாரு
தாமே தான் நிருதியிலுச் சாடனந்தான்
தலமை பெரும் இந்திரன்தம் பனமதாகும்
வாமே தான் எமன் மாரண மதாகும்
வளமான வருணனது அழைப்பாம் பாரு
காமே தான் வாயு விடத்து வேடணந்தான்
கனமான குபேரன் பேதனமாம் செய்ய"


- புலிப்பாணிச் சித்தர் -

கிழக்கு - இந்திரன் - தம்பனம்
தென்கிழக்கு - அக்கினி - மோகனம்
தெற்கு - எமன் - மாரணம்
தென்மேற்கு - நிருதி - உச்சாடனம்
மேற்கு - வருணன் - ஆக்ருசணம்
வடமேற்கு - வாயுதேவன் - வித்வேடணம்
வடக்கு - குபேரன் - பேதனம்
வடகிழக்கு - ஈசன் - வசியம்

இதைப் போலவே மாந்திரீகத்தின் அடடமா சித்திகளையும் பெற விரும்புபவர்கள் அவற்றை செய்யும்போது அணிய வேணிய மாலைகளையே ஜெபம் செய்யும் போது பயப்படுத்த வேண்டுமாம். மாந்திரிக நிலைகளுக்கு ஏற்ப இவை மாறுபடும் என்றும் அது பற்றிய தகவல்களை புலிபாணி சித்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"செய்யவே ருத்திராட்சம் வசியமாகும்
செயலான மிளகுமணி மோகனந்தான்
அய்யவே துளசிமணி உச்சாடனம்
அப்பனே தாமரை தம்பனமாம் பாரு
நையவே நாகமணி மாரணந்தான்
நலமான சங்குமணி மாரணந்தான்
வையவே யெட்டிமணி வித்துவேடணம்
வளமான பேதனம் வெண்முத்து தானே"


- புலிப்பாணிச் சித்தர் -

உருத்திராட்சம் - வசியமாகும்
மிளகுமணி - மோகனந்தான்
துளசிமணி - உச்சாடனம்
தாமரைமணி - தம்பனம்
நாகமணி - மாரணம்
சங்குமணி - ஆக்ருசணம்
எட்டிமணி - வித்துவேடணம்
வெண்முத்து - பேதனம்.

மாந்திரிக பயிற்சியின் போது அமர வேண்டிய ஆசனங்கள், பூசைக்கு பயன் படுத்திட வேண்டிய மலர்கள் மற்றும் ஆடை வகைகளைப் பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

Saravanan.V said...

Thozhi.
One day this website will be huge library for all aged people forever.

Thanks
saravanan.V

Malar said...

Hi Thozhi.. I am regularly reading your blog. I am so much interested in knowing about siththargal. You are doing a very useful work. But... You are just giving a brief summary of the books you have.Not fully right? You have started this blog that these books are valuble treasure and want to share it with this world. My kind advice is why don't you share the books to Government Organizations which are involed in converting such books into digital format... So that those ever who browse (like me) such websites will be benefitted all over the world. My concern is after you those books should not die... Please consider this advice.

Malar said...

I have a wish thozhi...I want to meet atleast 1 Siththar in my life time.. I am ready to pray... to meet them.. But how? Can you plz tell me... Is it told in any of the books? Am i qualified for that? I feel if i meet them its like meeting 'GOD' himself... People tell if you have the real intension they will come to meet you.. Is that true?

kirumi said...

அருமையான தளம். சிறந்த சேவைக்கு பாராட்டுகள். தொடர்க.

Post a Comment