தன்னிலை உணர்ந்து, முன் வினை தீர்த்து, மேலான பிறவா பேரின்ப நிலையினை அடைய உதவும் இரண்டு மார்க்கங்களில் ஒன்றுதான் சித்தர்களின் மாந்திரிகம் என்பதை பார்த்தோம். இந்த மாந்திரிகத்தின் எட்டு படி நிலைகளைப் பற்றியும், அதன் அடிப்படையான மந்திரங்களை உச்சரிக்கும் வகையினைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
தவிர்க்க இயலாத காரணங்களின் பொருட்டு கடந்த இரு வாரங்களாய் பதிவுகளை தினமும் பதிவேற்ற இயலவில்லை. இதன் பொருட்டே பழைய பதிவுகளைப் பற்றிய நினைவூட்டலுடன் ஒவ்வொரு புதிய பதிவினை துவங்கிட வேண்டியிருக்கிறது. இந்த நிலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடரும். அனைவரும் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இன்று மாந்திரிகத்தின் எட்டு நிலைகளான வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் ஆகிய எட்டு வகையான மாந்திரிக முறைகளுக்கு உரிய மூல மந்திரங்களை பற்றி பார்ப்போம். இந்த மந்திரங்கள் எப்போதும் குரு முகமாகவே பெறப் படுதல் வேண்டும்.
வெறும் தகவல்களை வைத்துக் கொண்டு எல்லோராலும் இந்த மாந்திரிக முறைகளில் தேர்ச்சி அடைந்து விட முடியாது. ஒருவரின் உடல் நிலை, மன நிலை, மன பக்குவம், கவனகுவிப்பு போன்றவைகளைப் பொறுத்தே இதனை கைகொள்ள முடியும். அத்தகைய ஒரு வழிநடத்துதல் மேன்மையான ஒரு குருவினால் மட்டுமே சாத்தியமாகும். அதன் பொருட்டே இந்த மூல மந்திரங்களையும், அவற்றை உச்சாடனம் செய்திடும் முறைகளும் குரு வழியாக பெற்றிட வேண்டுமென வலியுறுத்தப் படுகிறது. இப்படி பெறப் பட்டு சாதகம் செய்தால் மட்டுமே மந்திரம் சித்திக்கும் என சித்தர்கள் கூறியிருக்கின்றன.
இந்த பதிவில் எட்டு வகை மாந்திரிக வகைகளுக்கான மூல மந்திரங்களை தெரிந்து கொள்வோம்.
வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.
மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.
தம்பனம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.
உச்சாடனம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.
ஆக்ருசணம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.
பேதனம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.
வித்துவேடணம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.
மாரணம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.
இப்படி பெறப்பட்ட இந்த மூல மந்திரங்களை குறிப்பிட்ட நாளில்தான் உச்சாடனம் செய்திட துவங்க வேண்டுமாம். இதைப் பற்றி புலிப்பாணி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
"காணப்பா ஞாயிறதில் வசியமாகும்
கண்மணியே செவ்வாய்மோ கனமுமாகும்
தாணப்பா வியாழனுமுச் சாடனந்தான்
தகமைபெரும் திங்கள் தம்பனமாம் பாரு
வாணப்பா புதனில் மாரண மதாகும்
வண்மைவெள்ளி வாரமதி லழைப்பதாகும்.
நாணப்பா சனியில் வித்து வேஷணந்தான்
நலமான ஞாயிறுபே தனந்தானாமே"
- புலிப்பாணிச் சித்தர் -
ஞாயிறு - வசியம் மற்றும் பேதனம்
திங்கள் - தம்பனம்
செவ்வாய் - மோகனம்
புதன் - மாரணம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி - ஆக்ருசணம்
சனி - வித்துவேடணம்
ஆச்சர்யமான தகவல்கள்தானே!!
மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்..
Post a Comment



5 comments:
இந்த பதிவில் நீங்க கொடுத்த தகவல் நல்ல தகவல், ஆன்மிக நாட்டம் உள்ள அனைவருக்கும் உபயோகம்உள்ள தகவல் தான் என்றாலும்குருமுலம் தான் உபயோகபடுத்தண்டும்கூறியுள்ளீர்கள்.எனக்கு தன எப்படி ஒரு குருவை தேடுவது என்று தெரியவில்லை தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
அற்புதம்
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்களின் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!
Dear thozi,
The mantras depicted by you will be highly useful to anyone whos is going to practise maanthareekam.Thanks.
Very good posting. I have certain doubts. What are the meanings of the 8 mantriga vazhigal, like thambanam etc. I have really enjoyed reading such a great posting.
Post a Comment