மாந்திரிகமும்!, மந்திர உச்சாடனமும்!!

Author: தோழி / Labels:

இது வரையில் சித்தர்கள் மாந்திரிகம் என்பது பிறவா பேரின்ப நிலைக்கான ஒரு மார்க்கம் என்பதை பார்த்தோம். மேலும் இந்த மாந்திரிகமானது எட்டு பிரிவுகளைக் கொண்டது என்பதையும், அவை முறையே வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் என எட்டு பிரிவுகளை உடையது என்றும் பார்த்தோம்.

மாந்திரிகத்தில் மந்திரமே அடிப்படையானது ஆகும்.இந்த மந்திரத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதே மாந்திரிகத்தின் ஆதாரமாகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மந்திரங்களை உச்சரிக்கும் முறையினையே உச்சாடனம் என்கிறோம். இந்த உச்சாடனங்கள் என்பவை கூட நான்கு வகையானவை என்கின்றனர் சித்தர்கள்.இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கங்களுக்காக பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. அவை உரை, மந்தம், மானதம், சுத்த மானதம் என நான்கு வகையாக கூறப்பட்டிருக்கிறது.

சித்தர் பெருமக்கள் கைக்கொண்ட இந்த நான்கு வகை உச்சாடனங்களைப் பற்றிய அறிமுகத்தினை இன்றைய பதிவில் காண்போம்.

உரை (கூவிச்சொல்லுதல்)

உரத்த குரலில் பலரும் கேட்டிடும் வண்ணம் மந்திரங்களை உச்சரிக்கும் முறையே “உரை” எனப் படுகிறது. இது தன்னளவில் மட்டுமே பயன் தருமாம். அல்லது யாருடைய பெயரை குறிப்பிட்டு சொல்கிறோமோ அவர்களுக்கு பலனளிக்குமாம். கோவில்களில் இறைவனுக்கு நாம் அர்ச்சனை செய்யும் போது அர்ச்சகர் நம்முடைய பெயர் மற்றும் விவரங்களை கேட்பது இந்த அடிப்படையில்தான்.

மந்தம் (உதட்டுக்குள் சொல்லுதல்)

இது உச்சரிப்பவரின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் படி உதடுகளுக்குள் சொல்லும் முறை. இது தன்னளவிலும் தன்னைச் சூழ உள்ளவர்களுக்கும் பலனளிக்கும் விதமாக அமையுமாம். இத்தகைய உச்சாடன முறை “மந்தம்” எனப்படுகிறது.

மானதம் (மனதளவில் நினைத்தல்)

சப்தம் எதுவும் எழுப்பிடாமல், உதடுகளை முடியபடி மனதினால் மந்திரத்தை நினைக்கும் முறையே “மானதம்” எனப்படும். இந்த வகை உச்சாடனத்தினால் மந்திரத்தை நினைப்பவருக்கும், அவரைச் சூழ உள்ளவர்களுக்கும் அதைத் தாண்டிய சகல ஜீவராசிகளுக்கும் பலன் உண்டாகுமாம். இத்தகைய மந்திர உச்சாடனத்தில் கவனக்குவிப்பு பெரும் பங்கு வகிக்கும்.

சுத்த மானதம் (உழ்குதல்)

இந்த வகை உச்சாடனத்தில் மந்திரங்களின் உண்மையான பொருள் மற்றும் அவற்றின் உயிரோட்டம்,தத்துவம் போன்றவற்றின் அருமைகளை உணர்ந்து அவற்றை உயிர்ப்புடன் ஏற்றி உழ்குதல் “சுத்த மானதம்” எனப்படுகிறது. இது மிகவும் உயரிய நிலைக்கான உச்சாடனம் ஆகும். இத்தகைய ஒரு உச்சாடனம் இறவா பெருவாழ்வை அளிக்கும். மேலும் இதன் மூலம் கிடைக்கும் சக்தியானது பிறருக்கு வழங்கக் கூடியதாகவும் இருக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!!

அடுத்த பதிவில் சித்தர்களின் எட்டு வகையான மாந்திரிக முறைகளுகு உரிய மூல மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

-கிமூ- said...

AARUMAIYANA THAKAVALKAL

tamilvirumbi said...

Dear thozi,
The way you are guiding us how to recite manthras is so precise.Thanks.

இராஜராஜேஸ்வரி said...

மிக சுவாரசிமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

Praveen Kumar said...

மிகவும் பயனுள்ள தகவல் தோழி, தாங்கள் கூறுவது பார்த்தல் மனதிற்குள் சொல்லப்படும் மந்திரதிர்கே அதிக பலன் போலும். இது தெரியாமல் நான் இவ்வளவு நாட்கள் உரத்த குரலில் கூரிவந்துளேன் நன்றி ...

குணசேகரன்... said...

நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...தோழி..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையான தகவல்கள் தோழி..

இப்பதிவை பார்க்கும்போது,

திருமூலரின்,

வரும் ஆதீ ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போகமேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

என்னும் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.
நன்றி

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வாய்ப்புளள போது எமது சிவயசிவ
வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள் தோழியே.
http://sivaayasivaa.blogspot.com/

RAVINDRAN said...

நன்றி

Post a Comment