சித்த நிலை என்பது பிறவா பேரின்ப நிலையே ஆகும். இத்தகைய உயர் நிலையினைப் பற்றியும், அதனை அடைந்திடும் படி நிலைகளைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். பிறவா பேரின்ப நிலை என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது. தன் முனைப்பும்,குருவருளும் ஒருங்கே வாய்க்கப் பட்ட்வர்களுக்கே இந்த அனுபவம் சாத்தியமாகும். பதஞ்சலி முனிவர் அருளிய இந்த யோக நிலைகளைப் பற்றி வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
எல்லாம் சரிதான்!, மாந்திரிகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். சித்த நிலை எய்திட இந்த யோக நிலைகள் ஒரு மார்க்கம் என்றால், மற்றொரு மார்க்கம் மாந்திரிகம். ஆம்!, மாந்திரிகத்தின் மூலம் சித்த நிலையினை அடைந்திட முடியுமென்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
பதஞ்சலி யோகசூத்திரத்தில் பிறவா பேரின்ப நிலையை எய்திட எட்டு படிநிலைகள் இருப்பதைப் போல மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை சித்தர்கள் அருளியிருக்கின்றன. இவற்றை மாந்திரிக அட்டமாசித்து என்கின்றனர்.
அவை...
வசியம்.
மோகனம்.
தம்பனம்.
உச்சாடனம்.
ஆக்ருசணம்.
பேதனம்.
வித்துவேடணம்.
மாரணம்.
இந்த எட்டு நிலைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கங்களை முன் வைக்கின்றன. இவை பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு படி நிலையும் மிகுந்த கவனத்துடன் தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளா வேண்டுமாம். அவ்வாறு செய்வதன் மூலமே இந்த நிலைகளை சித்தியடைய முடியும் என்கிறனர்.
மந்திரங்களை சரியான வகையில் உச்சரிப்பதன் மூலமும், அதன் வாயிலாக கிடைக்கப் பெறும் மந்திர சக்தியைக் கொண்டு யந்திரங்களை சக்தியூட்டுவதன் மூலமாக இந்த கலையின் அடிப்படைகள் முன் வைக்கப் படுகின்றன. இந்த மந்திர, எந்திர சடங்கு முறைமைகளின் தொகுப்பே சித்தர்களின் மாந்திரிகம் எனப் படுகிறது.
சித்தர்களின் மாந்திரிகம் மேலதிக தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
நன்றி
thanks
thanks
Dear thozi,
My exuberant thanks are sent to you as you have exercised more effort to bring out for tamil world.
நீங்கள் குறிப்பிட்டு இருப்பது எட்டு நிலைகள் கிடையாது. மாந்த்ரீகத்தை உபயோக படுத்தும் எட்டு வகைகள். அதுவும் தாமசீக இலக்குகள். பிறவா பேரின்ப நிலைக்கும் நீங்கள் குறிப்பிட்டு இருப்பதர்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாந்த்ரீகத்தில் முகுந்த கவனம் தேவை.
Post a Comment