சித்தர்களின் மாந்திரிகம் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

மாந்திரிகம் என்பது தேவைகளின் அடிப்படையில் ஆன ஒரு நுட்பம் மட்டுமே. அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே அவற்றை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் தங்களை ஒருபோதும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.

பழந்தமிழகத்தில் மாந்திரிகம் என்பது ஒரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. விலங்குகள், எதிரிகள், உடலை வாட்டும் நோய்கள் போன்றவற்றில் இருந்து காத்துக் கொள்ளும் உபாயமாகவே இருந்திருக்கிறது. காலப் போக்கில் மனிதர்களின் பேராசை இவற்றின் பயன்பாடுகளை இந்த கலையினை நிழலான காரியங்களின் பக்கம் திருப்பி விட்டிருக்க வேண்டும்.

கடந்த மூன்று பதிவுகளில் மாந்திரிகம் பற்றிய சில அடிப்படை தெளிவுகளை மட்டுமே பார்த்தோம்.இந்த அளவிளான அறிமுகங்களுடன் இந்த தொடரின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திடமாமென கருதுகிறேன். இந்து மரபியலின் அடிப்படையிலான மாந்திரிகம் பற்றி விவரிப்பதோ, விவாதிப்பதோ இந்த தொடரின் நோக்கமில்லை.

ஆம், சித்தகளின் மாந்திரிகம் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். மாந்திரிகம் என்பது சித்தரியலில் நன்கு வரையறுக்கப் பட்ட கருத்து வடிவமாக இருந்திருக்கிறது. அகத்தியர் துவங்கி பலரும் மாந்திரிகம் குறித்து விரிவாகவே அருளியிருக்கின்றனர்.

இந்த வகையில் அகதியர் பூஜாவிதி, அகதியர் மாந்திரீகம், அகத்தியர் அட்டமாசித்து, திருமூலர் திருமந்திரம், கருவூரார் பூஜாவிதி, கருவூரார் மாந்திரீகம், போகர் 12 000, போகர் பூஜாவிதி, புலிப்பாணி பூஜாவிதி போன்ற நூல்கள் முக்கியமானவை. இனி வரும் நாட்களில் இந்த நூல்களில் இருந்து திரட்டப் பட்ட தகவல்களையே இங்கே பகிர இருக்கிறேன்.

எல்லாம் சரிதான்!, சித்தர்களின் மாந்திரிகம் என்பது எந்த வகையில் இந்து மரபியல் மாந்திரிக முறையில் இருந்து மாறுபட்டது?, இந்த மாந்திரிக முறையின் நோக்கம் என்ன?, எதற்காக இத்தகைய ஒரு மாந்திரிக முறையினை சித்தர்கள் வடித்தெடுத்தார்கள்?

இந்த கேள்விகளுக்கான பதில்கள் இனி வரும் பதிவுகளில் தொடரும்...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

tamilvirumbi said...

Dear thozi,
I convey my thanks profusely.

சி.பி.செந்தில்குமார் said...

எந்த திரட்டியிலும் இணைக்காமல்,தினசரி சராசரி ஹிட்ஸ் பேஜ் 3000 மேலும் விசிட்டர்ஸ் தினமும் எவ்வளவு பேர் வருகிறார்களோ அதை விட 5 மடங்கு பேஜ் வியூஸ் பெறும் ஒரே பதிவர் என்ற பெருமையும் உடைய பதிவர்க்கு வாழ்த்துக்கள்

மு.சரவணக்குமார் said...

1000 ஃபாலோயர்களை எட்டிய முதல் தமிழ் பெண் பதிவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்.அந்த வகையில் தமிழ் வலையுலக வரலாற்றில் உங்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

RAVINDRAN said...

நன்றி

Unknown said...

அன்புத் தோழிக்கு வணக்கம் ...
பதிவுகளை தொடர்ந்து படித்து , ஒரு சிலவற்றை நடைமுறை படுத்தியும் வருகிறேன் ...இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நிறைய நல்ல விசயங்களை கடைபிடிக்க முடியாமல் போகிறது .

உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்..
ஓம் நமசிவாய முதல் ஒரு சில முக்கியமான (காயத்ரி ), சித்தர்களின் மூல மந்திரங்களை எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை நீங்கள் பதிவிட வேண்டும் .

Unknown said...

1000 உள்ளங்கள் உங்கள் செயலை அனுதினமும் பாராட்டுகிறது ,வரும் காலத்தில் இது லக்சத்தை தாண்டினாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை , தொடரட்டும் இந்த மகத்தான சேவை . குருவருளால் இந்த அணைத்து உள்ளங்களும் தூய்மை அடைந்து, என்னும் எண்ணங்கள் யாவும் தெளிவுடனே பெற்று ,அவர்கள் வாழ்க்கை வளம் பெற இறைவனை வேண்டுகிறேன் .

தாமரை மணாளன் said...

இன்னும் எதிர்பார்கிறோம்.....,

Post a comment