இந்து மரபியலில் மாந்திரிகம் பற்றிய பழைய நூல்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அதர்வண வேதத்திலும் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் “உத்திர காலாமிர்தம்” என்ற நூல் முக்கியமானதாக கருதப் படுகிறது. மாந்திரிக முறைகள் காலம்காலமாய் குருமுகமாகவே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் படுகிறது. மாந்திரிகத்தின் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டும், அவற்றின் ரகசியங்களை பேணவேண்டியும் இதனை கையாளுவோர் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர்.
இந்து மரபியலில் மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன. இவை பற்றிய சுருக்கமான தெளிவுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பில்லி
மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது.
சூனியம்
சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஒரு நிலை .அதாவது ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப் படுகிறது.
வசியம்
தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப் படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!
ஏவல்
ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம். இந்த வகையில் நன்மையும் செய்யலாம், தீமையும் செய்ய முடியும்.
செய்வினை
தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப் படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று.
வைப்பு
இதுவும் செய்வினையைப் போன்றதே. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும். பூசிக்கப் பட்ட யந்திர தகடுகள், மருந்துகள் போன்றவை இவ்வாறு வைக்கப் படுகின்றன.
இவை தவிர இறந்து போனவர்களின் ஆவிகளைக் கொண்டு செய்யப் படும் மாந்திரிக முறைகளும் இருக்கின்றன.
இது வரை பார்த்த மாந்திரிக முறைகளின் தெளிவுகளை வாசிக்கும் போது மாந்திரிகம் என்பது தீமை செய்யும் ஒரு கலை என்பதான எண்ணப் போக்கு உருவாவது தவிர்க்க இயலாது. இந்த தொடர் நிறைவடையும் போது இந்த எண்ணப் போக்கில் நிச்சயம் மாறுதல் உண்டாகும் என எதிர்பார்க்கிறேன்.
மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



8 comments:
கிரகங்கள் பலவீனமடையும் போது இதுபோன்ற பில்லி, சூனியம், மந்திரம் என்பதை மறுக்க இயலாது.
ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைக்க வேண்டும் என்றால் அவருடைய புகைப்படமோ, வியர்வை நனைந்த அல்லது ரத்தம் நனைந்த துணியோ, தலை முடி, காலடி மண்ணோ, விந்தணு பட்ட துணியோ தேவைப்படும். இது இல்லாமல் பில்லி, சூன்யம் வைக்க முடியாது
நல்ல சக்தி வாய்ந்த தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு பில்லி, சூன்யம் வைத்தால் அது வேலை செய்யாது. ஏனெனில் அவரது தசா புக்தி பலம் வாய்ந்தததாக இருக்கிறது. ஆனால் அவருக்கு பலவீனமான தசா புக்தி நடக்கும்போது அந்த பில்லி, சூன்யமும் சேர்ந்து தொல்லை கொடுக்கும்.
ஒரே வழி - இறைவன் திருவடியைவிடாமல் பற்றி கொள்ளவேண்டும்!
Dear Thozi,
Your unfazed exposition of Maanthareegam will reveal facts.Thanks a lot.
ஓ.. இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா..
தங்களிடம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் போல...
நீங்க மாந்திரீக முறைகளை வைச்சு ஏதாவது நன்மை செய்திருக்கீங்களா? செய்வீங்களா?
நன்றி தோழி
சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்திரத்திற்கு
முதன்முறையாக இசை அமைத்துள்ளேன் அன்பர்கள்
வாங்கி பயன் பெறவும். M G பாலா 9345342424
செய்வினை போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்ள ஏதாவது மந்திரம் உள்ளதா? ஏனென்றால் செய்வினை எடுப்பதற்காக மக்கள் நிறைய செலவு செய்கின்றனர் மேலும் பணம் கறக்கும் போலிகளிடம் சென்றும் ஏமாறுகின்றனர்.
v.v good
also see
http://manthreekam.blogspot.in/
Post a Comment