மாந்திரிகம் என்பது !!

Author: தோழி / Labels:


உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் மாந்திரிக முறை புழக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் தனித் தன்மையுடையவை. இவற்றின் உண்மைத் தன்மைகள் அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப் படாவிட்டாலும், இதன் செயல்பாடுகள் மற்றும் அதன் பாதிப்புகளைக் குறித்து நிறையவே ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.

இங்கே இணையத்தில் கூட பல்வேறு நாடுகள் மற்றும் அங்கு நிலவும் மத நம்பிக்கைகளை ஒட்டிய மாந்திரிகம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை வாசிக்க கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அவற்றை தேடி வாசித்து அறியலாம். இங்கே நமது தொடரில் இந்து மத நம்பிக்கைகளை ஒட்டிய மாந்திரிகம் பற்றிய அறிமுகத்துடன் துவங்கி சித்தர்களின் மாந்திரிகம் என்ன சொல்கிறது என்பதைச் தொடர்ந்து சொல்லிச் செல்ல உத்தேசித்திருக்கிறேன்.

இந்து மரபியலில் மாந்திரிகம் பல்வேறு பிரிவுகளாய் பிரிந்திருந்தாலும், அவற்றின் அடிப்படை கட்டமைப்புகள் அநேகமாய் ஒன்றாகவே இருக்கின்றன. மந்திரம் பற்றி முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.

“மந்திரம் கால் மதி முக்கால்!”, இந்த பழமொழியினை நம்மில் அநேகர் அறிந்திருக்கக் கூடும். இந்த மதிதான் நாம் பார்க்கப் போகும் மாந்திரிகம் என்றால் ஆச்சர்யப் படுவீர்கள். மந்திரம் என்பது நிலையான ஒரு சக்தி, அதை பயன்படுத்தும் வகை அறியாத வரையில் அதனால் பயனேதும் விளையப் போவதில்லை.

வெறும் நிலத்தில் பயிர் விளையாது,அங்கே பயிர் விளைவதற்கு தேவையான சூழலை உருவாக்கி உழைத்தால் மட்டுமே பயிர் விளையும். இது போலத்தான் மாந்திரிகமும், மந்திரம் என்கிற நிலை சக்தியை முறையே பயன் படுத்தினால் மட்டுமே அதற்கான பலனைப் பெறமுடியும். இதனையே “தந்திரம்” என்கின்றனர் சித்தர்கள்.வினைத் திட்பமும், மன உறுதியும் உள்ள ஒருவனால் எந்த ஒரு செயலையும் நேர்த்தியாக செய்திட முடியும்.அது நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம்.

மத நம்பிக்கை உள்ள எல்லோருமே ஏதேனும் ஒரு மந்திரத்தைப் பற்றி அறிந்திருப்போம், தினமும் அதை உச்சரிப்பவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த மந்திரம் தரும் பலன் எல்லாருக்கும் கிடைத்திருக்கிறதா என்றால் பெரும்பாலானவர்கள் பலன் ஏதுமில்லை என்றே சொல்வார்கள். ஆக மந்திரங்கள் என்னும் நிலை சக்தியை இயங்கு சக்தியாக்கும் உத்தி தெரியாத வரையில் அவற்றால் பலன் ஏதுமிருக்கப் போவதில்லை. இங்கேதான் மாந்திரிகம் வருகிறது. மாந்திரிகம் என்பது சக்தி மூலங்களை முறையே ஒருங்கினைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு ஒரு வினையை செய்து முடிப்பதாகும்.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி மாந்திரிக முறையில் பில்லி, சூனியம், ஏவல், வசியம், செய்வினை, வைப்பு போன்ற முறைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. இவை பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

-கிமூ- said...

மாந்திரிகம் - விளக்கம் அருமை.
மாந்திரிகம் என்பதை ஒரு பயமுறுத்தும் சொல்லாகவே இதுவரையில் கருதினோம்!

Ramani said...

தொடர் சிறப்பாகத் தொடர்கிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot.It will come out dexterously from your hand.I hope so.

இன்பம் துன்பம் said...

நல்ல பதிவு உனது கருத்தை எடுத்து வைக்கும் பாங்கு ரெம்ப நன்றாக இருந்துச்சு தொடரட்டும் பணி வாழ்க வளமுடன்

subbu p said...

How to incress the weight

S.Puvi said...

நன்றி. இந்த விளக்கத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. காரணம் அவர்களின் தொழில் ரகசியம்!

Post a Comment