மாந்திரிகம்!

Author: தோழி / Labels: ,

மாந்திரிகம்!, சித்தரியலில் மாந்திரிகம் என்பது தனியொரு பெரும் பிரிவாக உள்ளது. இயன்ற வரையில் மிகையில்லாமல் அந்த தகவல்களை இங்கே தொகுத்து பகிர்ந்திட முயற்சிக்கிறேன்.தொடரின் நெடுகில் ஏதேனும் தகவல் பிழைகள் இருக்குமாயின் சுட்டிக் காட்டி திருத்திடுமாறு வேண்டுகிறேன். இந்த துவக்க பதிவில் மாந்திரிகம் பற்றிய பொதுவான சமூக கருத்தாக்கங்களைப் பார்ப்போம்.

மாந்திரிகம் என்றாலே நம்மில் பலருக்கு அச்சம் கலந்த பயவுணர்வுதான் உண்டாகும். ஏனெனில் சிறு வயது முதலே அத்தகைய ஒரு எண்ணப் போக்கில்தான் நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம். மேலும் மாந்திரிகம் என்பது தவறானது, தவறானவர்கள் கைகொள்ளுவது எனவே அத்தகைய ஒன்றோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதான கருத்தாக்கமே சமூகத்தில் வேரூன்றியிருக்கிறது. மாந்திரிகத்தைப் பயன் படுத்தும் மந்திரவாதிகளைக் கோரமான தோற்றத்தை உடையவர்களாகவும், பிறருக்கு தீமை செய்யும் கொடியவர்களாகவும் உருவகித்து வைத்திருக்கிறோம்.

மாந்திரிகம் என்பது செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் போன்ற வினைகளின் அங்கமாகவே நம் சமூகத்தில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இந்த வினைகள் யாவும் சக மனிதனை அடிமை செய்து அவனை தன் இஷ்டப் படி கஷ்டப் படுத்தும் செயல்களாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். தற்போது அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் இவையெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகள் என நிராகரித்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி முற்றிலும் நிராகரிக்கப் பட்டிருக்கும் ஒரு கருத்தாக்கம் குறித்து யாரும் வெளிப்படையாக விவாதிக்கவோ அல்லது ஆராயவோ தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியே முன் வந்தாலும் கூட, சக மனிதர்களினால் கேலிக்குரியவர்களாகவோ அல்லது அருவெருப்பா னவர்களாகவோ கருதி ஒதுக்கப் படும் சங்கடங்கள் இருக்கின்றன.

மாந்திரிகத்தின் சாத்திய, அசாத்தியங்களை நிறுவுவது இந்த தொடரின் நோக்கமில்லை. மாந்திரிகம் என்கிற கலை மாறுபட்ட பரிணாமங்களை உள்ளடக்கியது, அதன் கூறுகள் எவ்வாறெல்லாம் பயன் தருகின்றன என்பதை அறியத் தருவதே இந்த தொடரின் நோக்கம். இந்த தொடரின் முடிவில் மாந்திரிகம் என்பது வதைத்தலும், வதைக்கப்படுதலுமே என்கிற அடிப்படை எண்ணப் போக்கில் மாறுதல் உங்களுக்குள் உருவாகுமானால் அதையே இந்த தொடரின் வெற்றியாக கருதுவேன்.

எல்லாம் சரிதான்!, அதென்ன மாந்திரிகம்?

விவரங்கள் நாளைய பதிவில்...


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

jagadeesh said...

very nice. Interesting

இராஜராஜேஸ்வரி said...

interesting.

அகோரி said...

ஆவலுடன் காத்திருக்கிறான் தோழி

tamilvirumbi said...

Dear thozi,
You have started a new topic to share.At first, I thank you for your hard effort.I don't have sufficient knowledge about maanthareekam.From inception onwards,
I am not at all interested to go through the books containing maanthareekam.It is coming under the part of atharvana vedam.Anyhow,I will come to know day by day from siththars' perspective.Thank you once again.

Yaathoramani.blogspot.com said...

எதிர்பார்ப்பை அதிகம் தூண்டிப்போகிறது
உங்கள் முன்னுரை
தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழியே,

இவ்வளவு அற்புதமான வலைத்தளத்தை இன்றுதான் படிக்க முடிந்தது
மிக்க மகிழ்ச்சி...

இதை யாவரும் பெற்றுய்வதற்கு தங்களது தளத்தில்
FEED BUNER EMAIL SUBSCRIPTION என்ற வசதியை இணைக்கவும் .

வாய்ப்பிருக்கும் போது எமது ஆன்மிக வலைத்தளமாகிய

http://sivaayasivaa.blogspot.com

விற்க வாருங்கள்,

நன்றி.

dowsarpaandian said...

hello Mr. J. Raman,

please say hi everybody here. don't want to go your site and read simple word "hi". Don't do it nexttime at anywhere. Thanx

dowsarpaandian said...

Oh! Really very sorry Mr. Raman, instead of "http://sivaayasivaa.blogspot.com" i mistyped "http://sivaayasiva.blogspot.com". It's my misteke. Really very sorry. Please forgive me...........

kimu said...

மிகவும் எதிர்பாத்து காத்திருக்கிறோம்

RAVINDRAN said...

அருமை

gnanamoorthy.A. said...

good morning

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

@dowsarpaandian
பரவாயில்லை டவுசர் பாண்டியன் அவர்களே,

தங்கள் வருகைக்கும் இணைப்பிற்கும் நன்றி ...

SEKAR said...

DEAR SIR,
PERMISSION IS DENIED FOR ENTERING SIVAAYASIVAA BLOGSPOT.WHAT TO DO

Unknown said...

Anbulla Thozhiku,
Sitthi adaintha pinbu antha enthirathai enna seiya vendum.Pls Sollungal

Unknown said...

Anbulla Thozi,
oru Mandalam kazhithu antha enthirathai enna seiya vendum.Aavaludan Kathirukiren


Post a comment