உருத்திராட்சமும்!, செபமும்!, சிவ வேடமும்!

Author: தோழி / Labels: ,

செபம் செய்வதன் அர்த்தத்தையும், அதன் மகிமையினைப் பற்றி அகத்தியர் அருளிய விவரங்களை நேற்றைய பதிவில் பார்த்தோம். மேலும் அந்த செபத்தினை உருத்திராட்சம் கொண்டு செய்வதே மிகச் சிறந்த பலனைத் தரும் என்பதையும் பார்த்தோம். இப்படி செய்யப் படும் செபத்தினை நாள் தவறாது, கவனக் குவிப்புடன் செய்து வந்தால் இலகுவாக சித்தி கிடைத்திடும் என்ற விவரத்தையும் பார்த்தோம்.

இப்படியான செபத்தினை எவ்வாறு செய்திட வேண்டும் எனவும் அகத்தியர் தனது “வாத சௌமியம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார். அதன் படி செபம் செய்பவர்கள் தனிமையான், சுத்தமான சூழலில் செய்திட வேண்டுமாம். கோவில், மலை உச்சி, குகைகள் போன்ற ஆளரவம் குறைந்த இடங்கள் உத்தமம் என்கிறார். இடத்தினை தேர்ந்தெடுப்பதைப் போலவே செபிக்கும் போது அணிய வேண்டிய உடைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அகத்தியர் “சிவவேடம்” என்கிறார். மேலான சிவனின் வடிவில் அமர்ந்து செபிப்பதையே இப்படி கூறுகிறார்.

இந்த சிவவேடத்தை எவ்வாறு தரிக்க வேண்டும் என்பதை பின்வருமாறு விளக்குகிறார்.


"ஊணடாசிவவேட மார்க்கந் தன்னை
உறுதியாய் சொல்லுகிறேன் உனக்காய் மைந்தா
காணடா ஜெபமதலை அன்பத்தொன்று
கணக்காக ருத்ராட்சங் கையிலேந்து
தானடா யோகதெண்டு அளவை கேளு
தனதான அணிவிரல் முப்பத்திரண்டு
பேணடா அளவாகச் செய்துகொண்டு
பேணியே கைதனிலே எடுத்துக் கொள்ளே."

- அகத்தியர் -

"கொள்ளடா விபூதி உத்தளமாய்ப்பூசி
கொண்ட பின்பு வேட்டியுட அளவைக் கேளு
நல்லடா அகலமது மூன்று முழமாகும்
நலமான நீளமது ஆறு முழமாகும்
உள்ளடா பீனஞ்சாண் அகலங் கூட்டி
உத்தமனே நீளமது நால் சாணாகும்
அள்ளடா காவியிலே நீர்க்காவியாகும்
அரகரா சிவவேட மகிமைதானே."


- அகத்தியர் -

ஒருவகையான நீர்க் காவி நிறத்தில் ஆன ஆறு முழ நீளமும் மூன்று முழ அகலமும் கொண்ட வேட்டியும், அதே நிறத்திலேயே நான்கு சாண் நீளமும் ஒரு சாண் அகலமும் உள்ள பீனமும் எடுத்து அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் ஐம்பதியொரு உருத்திராட்ச மணிகளைக் கொண்ட செபமாலையும், முப்பதியிரண்டு விரல் கடை நீளமுள்ள யோக தண்டமும் தயாரித்துக் கையில் வைத்துக் கொள்ள வேண்டுமாம். உடலெங்கும் வீபூதியையும் நன்கு பூசிக் கொண்டால் இந்த கோலமே “சிவ வேடம்” என்கிறார் அகத்தியர்.

இந்த சிவவேடமே அனைத்து வகையான செபங்களுக்கும் சிறப்பானது என்கிறார். இந்த கோலத்தில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்யப் படும் எந்த ஒரு செபமும் சித்திக்கும் என்றும், இத்தகைய செபங்கள் மகிமை வாய்ந்தது என்றும் கூறுகிறார்.

நாளைய பதிவில் உருத்திராட்ச மணி மாலையைக் கொண்டு செய்தொழில் வெற்றியடையவும், எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றவும் கூடிய வசிய முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

-கிமூ- said...

ஒவ்வொரு நாளும் இனிமையான பதிவுகள்...

மகேஷ் said...

பீனம் என்றால் என்ன தோழி

tamilvirumbi said...

Dear thozi,
As usual,you have rightly pointed out what one must need before starting japams.Thanks a
lot.I have given out seven face and eight face rudraksham mantras for those who are practising sincerly.


Seven Faced Rudraksha Bead

The seven mukhi helps in building finances and amassing wealth. 7 mukhi can help attain prosperity and peace of mind. 7 mukhi is considered very auspicious because it helps ward off fatal diseases and death and achieve longevity. Wearer of this gets wealth, fame and spiritual knowledge. 7 mukhi rudraksha is the symbol of Mahalaxmi. Seven mukhi Rudraksha blesses with wealth & prosperity.It is said that poverty and wants never touch its wearer. 7 mukhi Rudraksha also symbolises the seven great rishis.
In Numerology, people governed by Number 8 are recommended to wear this Rudraksha. The Seven Mukhi Rudraksha is said to please Kamdev (Cupid) and is also referred to as ‘Kamdev rudraksha’.

The Mantra for Seven Mukhi Rudraksha bead is ‘Aum Hum Namah’.

Eight Faced Rudraksha Bead

Eight Mukhi Rudraksh Ruling planet is Rahu hence helpful in sublimating it’s malefic effects. It’s malefic effects are similar to that of Shani or Saturn. 8 mukhi Rudraksha bead increases the strength of character and mind and help achieve happiness, fame, good health and increase confidence.
Eight Faced Rudraksh is said to represent lord Ganesha. The elephant headed benign god, the son of lord Shiva and Parvati has special grace on the wearer of this Rudraksh. By wearing it on one’s person all the pleasures increase and all the difficulties diminish.
Wearers of this get long life and they become truthful. Such a person is born free of diseases, wise and knowledgeable any obstacle in his tasks. Such persons have special ability and talent in studies. They shall remain away from sin.
8 mukhi Rudraksha provides mental concentration. It specially useful for the business community. 8 mukhi Rudraksha is also helpful in betting, horse racing and lotteries etc.

The mantra’s for eight mukhi rudraksha bead is ‘Aum Hum Namah’ and ‘Om Ganeshaya Namah’

mobileshoping said...

அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்து இருக்கிறோம் பயனுள்ள பல பதிவுகளை தந்தமைக்கு நன்றி

ஜீவா said...

தோழியிடம் ஒரு கேள்வி, சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருப்பதாக மருத்துவர் திரு.தெய்வநாயகம் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் சொல்லி கேட்டிருக்கிறேன்.ஆனால் புற்று நோய்யிக்கும், சோரியாசிஸ் என்று சொல்லப்படும் காலாஞ்சி படைக்கும் இது வரை நிரந்தமாக குணப்படுத்த எந்த மருந்தும் இல்லை என்பது உண்மையா? இதற்கு சித்த மருத்துவத்தில் மருந்து உண்டா? தயவுசெய்து பதில் கூறவும்.
அன்புடன் ஜீவா

karthik vaigai said...

///மிகவும் புலமையுடன் எழுதப்பட்ட பாடல், மிகவும் அருமையாக இருந்தது. புதிய விசயம் அறிந்தேன்.
kadavul4u.blogspot.com

Elangai Tamilan said...

அன்புள்ள தோழி ,
தங்களின் இந்த பதிவிற்கு மிக்க நன்றி. தாங்கள் ,சிவ வேடம் அணிந்து ஜெபம் செய்ய வேண்டும் என்று சொல்லுகுறீர்கள் . ஆனால் ,இல்லறத்தான் எப்படி ஜெபம் செய்ய இயலும்?. ஏனென்றால் ,
ஒரு முறை காவி உடை அணிந்து ஜெபம் செய்ய முற்பட்டால் ,பின் இல்லற வாழ்க்கைக்கு திரும்புதல் கூடாது . ஆதலால் இல்லறத்தில் ஈடுபடுபவர்கள் ,எவ்வாறு ஜெபம் செய்ய இயலும் என்று வழி கூறினால் நன்மை பயக்கும் என்று கேட்டு கொள்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

very useful post,Thank you for sharing.

Balaji said...

Eppati ungaluku nandri kooruvathu endre theriyavillai.... Great job...

Post a Comment