உருத்திராட்ச மணி - சில அபூர்வ தகவல்கள்!

Author: தோழி / Labels:

நம் உடலில் அணிந்து கொள்வதற்கு, பிரார்த்தனைகள் அல்லது மந்திரங்களை செபிக்கும் போது ஜபமாலையாக பாவிக்க, இறைவனின் திருமார்பில் ஆபரணமாய் சூடுவதற்கு என மூன்று விதமான பயன் பாட்டிற்கென உருத்திராட்ச மாலைகள் உருவாக்கப் படுகின்றன. ஒரே முகமுடைய மணிகளால் மட்டுமே இந்த மாலைகள் அமைக்கப் பட வேண்டும். பெரும்பாலான உருத்திராட்ச மணிகளின் நடுவில் இயற்கையாகவே துளையிருக்கும். அப்படி துளைகள் இல்லாத காய்களில் மட்டுமே துளைகளை இடுகின்றனர். இந்த தகவல் அநேக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு சில குறிப்பிட்ட முகங்களை உடைய உருத்திராட்ச மணிகளை அவற்றின் மகத்துவம் கருதி அனைவரும் விரும்பி வாங்குவதால், அவை மிக அதிகமான விலைக்கு விற்கப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி கொண்டு சில வியாபாரிகள் அரிய வகை மணிகளை போலியாக தயாரித்து விற்கின்றனர். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் அல்லது அரக்கினால் செய்யப் படுகின்றன. இவை பார்ப்பதர்கு அசலான மணிகள் போலவே தோற்றமளிக்கும். எளிதில் இனங்காண முடியாத அளவில் இருக்கும். எனவே அசலான உருத்திராட்சங்களைப் பார்த்து வாங்கிட வேண்டும்.

அசலான மணிகளை இனம் பிரித்தறிய சில எளிய சோதனை முறைகள் உள்ளன. இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையே உருத்திராட்ச மணியை வைத்தால் அவை சுழலுமாம். அதே போல ஏகமுக மணியை நீரோட்டத்தில் விட்டால் அது எதிர்த்து ஓடுமாம். நான்கு முக உருத்திராட்ச மணியைத் தவிர மற்ற அனைத்து முகமுடைய உருத்திராட்ச மணிகளும் நீரில் மிதக்கும் தன்மையுடையதாம். இது போல வேறு சில முறைகளும் இருக்கின்றன.

ஒவ்வொரு உருத்திராட்ச மணியும் தனித்துவமான சக்தி மண்டலமாக கருதப் படுகிறது. இந்த் மணிகளின் மகத்துவம் பற்றி தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன். இதன் பொருட்டே அவைகளை மாலைகளாய் கட்டும் போது ஒவ்வொரு மணிக்கும் இடையே இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளியாது ஒரு மணி மற்றொரு மணியை தொட்டு விடாதபடி நேர்த்தியான முடிச்சுகளால் அமைக்கப் படுகிறது. பொதுவில் மூன்று வகையான முடிச்சுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றை கவனித்துப் பார்த்து வாங்கிட வேண்டும்.

இந்த முடிச்சு வகைகள் நாகபாசம், சாவித்திரி, பிரமகிரந்தி என அழைக்கப் படுகின்றன. மாலையின் பயன்பாட்டினைப் பொறுத்து இந்த முடிச்சுக்கள் மாறுபடும். இப்படி மாலைகளாய் கோர்க்கும் போது கடைசியில் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடும் இடத்தில் தனியே ஒரு மணியை அமைக்கின்றனர். இதனை “நாயக மணி” அல்லது “மேரு மணி” என அழைக்கின்றனர்.

இப்படி கோர்க்கப் பட்ட ஜெப மாலைகளை வைத்து செபிக்கும் போது அந்த மந்திரம் கூடுதல் பலனை தருகிறது. காலை வேளைகளில் நாபிக்கு சமமாகவும், மதிய நேரத்தில் மார்புக்கு சமனாகவும், அந்தி வேளையில் நாசிக்கு சமனாகவும் வைத்து செபித்திட வேண்டும். அவ்வாறு செய்வதால் மட்டுமே சரியான பலனை அடைந்திட முடியும். மேலும் உருத்திராட்ச மணியால் ஆன செபமாலையை வைத்துக் கொண்டு மலை உச்சி, நதிக்கரை, காடுகள், குகைகள், ஞானிகள், சித்தர்களின் ஜீவசமாதி இருக்கும் இடங்கள் போன்றவற்றில் இருந்து செய்வது அதி உன்னத பலனைக் கொடுக்குமாம். இந்த உருத்திராட்ச மாலைகளை ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் அணியலாமாம்.

இந்த உருத்திராட்ச மணிகளைப் பற்றி சித்தர் பெருமக்கள் கூறியுள்ள தகவல்களை நாளைய பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

20 comments:

பாலா said...

அன்புள்ள தோழி ,

தங்களின் பதிவுகளை கடந்த இரண்டு வாரங்களாக என்னால் பார்க்கமுடியவில்லை.

சிவனின் கண்கள் என்று ருத்ராட்சத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்,

தங்களின் பதிவுகள் என்றும் எளிமையாக அனைவருக்கும் புரியும்படியாகவும் அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன் ,வளர்க உங்கள் தொண்டு .

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

# கவிதை வீதி # சௌந்தர் said...

உருத்திராட்ச மணியைப்பற்றி அறிந்தேன்...

வலைசரத்தில் அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள்..

tamilvirumbi said...

Dear Thozi,
Still more rare information, you have shared with us.Thanks a lot.I am pleased to share with you each face rudraksham along with its mantra.

One Faced Rudraksha Bead

The Ek Mukhi Rudraksha (one faced rudraksha) is the symbol of Godhood, Supreme Truth and Attainment of Eternity. The One Mukhi Rudraksha is itself Lord Shiva and it is the main among all Rudrakshas of all faces. It is ruled by the Sun and enlightens the Super Consciousness. It brings the power of Dharana to the wearer meaning the power to concentrate the mind on an object.

According to the mythological books peace and pleasure abide in the house where one faced Rudraksha is worshipped. There is no fear of untimely death. Its wearer himself is fortunate by himself. One who gets it and worships it obtains not only all the worldly pleasures during his life – span but also remains unaffected by them. It is an ideal thing for the doctors. It helps them to diagnose the disease and gives them success in surgery too.

Other Details

Symbol of : Lord Shiva
Ruling Planet : Sun
Day of wearing : Monday
Recommended for : Headache, Heart Disease and Right Eye Defect.

Mantras

“Om Namah Shivaya” and “Om Hreem Namah”

Way of Wearing

Ek mukhi Rudraksha should be capped with gold or silver and should be worn round the neck or be placed at the worshipping place, chanting the mantra. Getting up in the morning the devotee should salute the one faced Rudraksha first, pronouncing mantra.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இன்றைய பதிவிற்கு நன்றி.உருதிர்ராக்கம் பற்றி எனக்கு அவ்வளவாக விவரம் தெரியாது.ஆதலால் ,தங்களின் எளிமையான பதிவின் மூலம் அறிந்துகொள்கிறேன்

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

சி.பி.செந்தில்குமார் said...

950.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விரைவில் 1000 ஃபாலோயர்ஸ் பெற வாழ்த்துக்கள். ( அப்பத்தானே பார்ட்டி கேட்க முடியும்?)

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? இன்னைக்கு 3000 ஹிட்ஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குறும்பன் said...

அரக்கு அல்லது பிளாசுடிக்கில் செய்த போலி உருத்திராட்ச மணிகளாக இருந்தால் அவை நீரில் மிதக்கும் என்றும் அசல் உருத்திராட்ச மணி நீரில் மூழ்கும் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் 4 முகம் மணி மட்டும் நீரில் மூழ்கும் மற்ற முகங்கள் மூழ்காது என்கிறீர்கள். நீரில் மூழ்கினால் அசல் என்ற கணக்கின் படி நான் ஏகமுக மணியை வாங்கியுள்ளேன் :-(. எப்படி போலி மணிகளை கண்டறிவது என விளக்கமாக கூறுங்கள்.

RAVINDRAN said...

நன்றி

RAVINDRAN said...

நன்றி

gopala said...

good comments and i request the person should tell in tamil mr tamil virumbi.some times i am not able to understand the meanings of rudraksha.
the details u have given is useful for us but please sent in tamil.will u please send it to me all the deatils of rudra.my id is gopalrajangam@gmail.com as soon as possible sent me the result.

கோவிந்தராஜு.மா said...

தகவலுக்கு நன்றி மேலும் காத்திருக்கிறேன் மற்றும் புதியவர் படிக்கும் போது நாபிக்கும், நாசிக்கும், என்று எலுதிஉள்ளீர்கள் அம்மாதிரியான இடங்களில் அடைப்புக்குறிக்குள் புரியும்படி எழுதினால் நன்றாக இருக்கும்.

Nataraj said...

nan 5 muga ruthiratcham aninthu irukkiren enakku 1 muga ruthiracham aniya vendum endru aval.oru muga ruthiratcham aniya vendumanal eathenum murai ullatha matruym engu vanguvathu. en mail id ku thagaval anuppumaru vendikkolgiren thanks..

knataraj88@gmail.com

Ramme said...

nandri

Muruga said...

Eaga mugam enbathin porul enna ?

Muruga said...

Eaga mugam enbathin porul enna?

Rockee said...

I have a doubt kindly briefe me anyone ....
If I have wear the Ruthirachi , can I ate Non Vegitarian ...
so fa I have a doubt about this....

Thanks,
Chandru

giri said...

Ramdhrasan

sundar said...

I NEED MORE INFORMATION CAN U PLEASE SEND ME.
nsmartsundar@gmail.com

sundar said...

i need more information. please send me

Post a Comment