கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!, உருத்திராட்சம் என்றவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது... சன்னியாசம், சாமியார்கள், ஆன்மீகம், எளிமை, ஜபமாலை, உடல்நலம், மருத்துவம், மந்திரவாதிகள் இத்யாதி இத்யாதி!!.
ருத்திராக்ஷம், உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராட்சம் பற்றி பல்வேறு கருத்தாக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. புராணங்களில் இது பற்றிய மிகைப் படுத்தப் பட்ட பல தகவல்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து உருத்திராட்சம் பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றைப் பற்றியும், சித்தர் பெருமக்களின் பாடல்களில் கூறப் பட்டுள்ள தகவல் பற்றியும் தொகுத்து அளிப்பதே இந்த தொடரின் நோக்கம்.
வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு “ருத்திரனின் கண்கள்” என்பதாக பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. “ganitrus” என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த உருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப் படுகிறது. இமயமலையின் அடிவாரங்களில், கங்கைநதியின் சமவெளிப் பகுதிகளில்,ஆஸ்திரேலியா மற்றும் மலேயா நாடுகளில் மட்டுமே காணப் படுகிறது. இந்த தாவரத்தில் 90 வகை இருப்பதாக தாவரவியல் பகுத்தறிந்திருக்கிறது. இவற்றில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேப்பாள நாடுகளில் கிடைக்கிறது.
இந்த மரம் அதிகபட்சமாய் 80 அடி உயரம் வளரக் கூடியது. உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி, நீலகிரி போன்ற இடங்களிலும், கேரளத்தில் திருவாங்கூர் பகுதியிலும், கர்நாடகத்தில் மைசூர் பகுதிகளில் காணப் படுகிறது. இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய நீல நிறத்தில் கடினமான மேலோட்டுடன் இருக்கும். இந்த மரத்தின் இலைகள் வாத மரத்தின் இலைகளைப் போல ஆறு அங்குல நீளத்தில் இருக்கும். முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில் பூக்கள் தோன்றும். உருத்திராட்ச மரத்தின் பூக்கள் வெண்மை நிறமுடையாக இருக்கும்.
உருத்திராட்ச மரத்தின் பழங்கள் கடுமையான மேலோட்டுடன் இருந்தாலும் உள்பகுதி புளிப்பு சுவையுள்ள சாறு நிறைந்த சதைப் பகுதியாக இருக்கும். இவற்றின் நடுவில் இருக்கும் கொட்டை பகுதியைத்தான் நாம் உருத்திராட்ச மணி என்கிறோம். நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப் படுகிறது. இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசி நகரம்தான் உருட்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.
இயற்கையில் உருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், சாயமேற்றப் பட்டிருக்கும். இதன் பொருட்டே சிவந்தும், பளபளப்பாகவும் இருக்கிறது. சில இடங்களில் அரக்கு, பிளாஸ்டிக் போன்றைவைகளினால் செய்யப் பட்ட போலி மணிகளும் விற்பனைக்கு வருகின்றன. போலிகளை கண்ட்றியும் முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.
நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் அமைப்பு, வகை, பற்றிய விவரங்களைப் பார்ப்போம்..
குறிப்பு :-
சென்னையை சேர்ந்த திரு.எம்.கே.சுகுமாரன் என்னும் அருளாளர் தனது கடின உழைப்பின் பயனாய் போகர் அருளிய போகர் சப்தகாண்டம்-7000 என்கிற நூலை மின்னூலாக்கி இருக்கிறார்.
இந்த அரிய நூலினை பின் வரும் இணைப்பில் இருந்து தரவிரக்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். எனவே ஆர்வமும், தேவையும் உள்ள நண்பர்கள் தரவிரக்கி பயன் படுத்திக் கொள்ளவும். அவரின் மேலான இந்த முயற்சிக்கு எனது நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment



14 comments:
Dear Thozhi,
The book is very nice Bogar_7000... But i could not understand more than 50%... Really I am very much interested to know about Rudraksham.. Please help me with explanation of this book atleast few part which is more important.
Thank you
ருத்ராட்சம் மாலை அணிந்தால் கோபம் கட்டுப்படும் என்பது உண்மையா?
Dear thozi,
I am very much indebted to you to submit this article. I have expected from you a longtime ago.I have recently gone through one article about rudraksham.I am sharing it with you about the salient points
of rudraksham.
It is believed that by wearing rudraksha bead and vibhuthi we can achieve physical and mental purification and thus can live a happy and healthy long life.
APPEARANCE OF RUDRAKSHA
Once Narada found a fruit. He took it to Lord Vishnu and asked “O’Lord, I have never seen this fruit before, please tell me where this came from”. Lord Vishnu started to tell the story of rudraksha. “Once there was a demon named Thripurasura. He was very strong and he defeated all devas. Devas came running to me. I took them to Lord Shiva. Then Shiva adding the strength of all devas, produced a weapon (Aghoram) to destroy the demon. In this attempt Shiva spent many years thinking even without blinking his three eyes. At the end when he blinked his eyes, from each eye a drop of tear ran down to the earth. Those drops became the seeds of Rudraksha tree”. This tree is a family of Elio Corpus category – found in east and west of Asia, Malasia, Australia, Pacific Islands, Nepal, Bihar, Bengal, Assam, Madya Pradesh and Bombay. Nepal is famous for Rudrakshas. These trees grow 60 ft. high, small white flowers grown on stems underneath the leaves. Blooms in the month of January. Fruit colour is purple (mix of red and blue).
There are different types of Rudrakshas ( 1 – 31 faces). Rudraksha with one face and 2 faces are very rare. Malas are made for chanting or wearing. Mala can be made with 108 or 54 beads with a large bead in the middle called Meru. If used for chanting when you reach up to the bead Meru, mala should be rolled backwards. For chanting japas rudraksha mala is the best.
We can wear them 24 hours a day. Only one restriction: When you feel you are doing wrong things, Rudrakshas should not be worn, in other words, always think, speak and do good things only.
As this comment is going at length,remaining things, i will share it with you tomorrow.
தோழி,
ருட்ரக்ஷாம் பற்றி நன்கு தொடக்க உரை ஆற்றி உள்ளீர்கள்.நீண்ட நாட்களாக தங்களின் பதிவை காண இயலவில்லை, உடல் நல குறைவு காரணமாக. மன்னிக்கவும்.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
தோழி,
ருட்ரக்ஷாம் பற்றி நன்கு தொடக்க உரை ஆற்றி உள்ளீர்கள்.நீண்ட நாட்களாக தங்களின் பதிவை காண இயலவில்லை, உடல் நல குறைவு காரணமாக. மன்னிக்கவும்.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
நம்பிக்கையான தகவல்கள். நல்லது.
உருத்திராட்சம் பற்றிய தொடருக்கு நன்றி தோழி. ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு பலன் உண்டு என படித்துள்ளேன். சில தளத்தில் 1 முகம் மிகசிறப்பானது எனவும் சில தளத்தில் 14 முகம் சிறப்பானது எனவும் கூறுகிறார்கள். நம்பகமான தளத்தில் படிப்பது சிறப்பு மற்றும் வேறு சிலருக்கும் நம்பிக்கையுடன் கூறலாம்.
கடையில் ஒரு முகம் கிடைப்பது சுலபம். நான் 1200 ரூபாய்க்கு வாங்கி இருக்கேன்.
14 முகம் கிடைக்குமா என்று கேட்டேன் அது லட்சம் ரூபாய் ஆகும் எனவும் சொல்லி வைத்தால் கிடைக்கும் எனவும் கூறினார்கள். 1 -14 முகம் தான் தற்போது கிடைக்கிறது எனவும் கூறினார்கள்.
nice :)
ருத்ராக்ஷம் அது சிவஸ்வரூபம், அதை அணிந்துகொள்ளும் நேரம் முதல் ஒருவன் சிவன் பக்தனாக மாறுகிறான் . அதுவே இந்த ருட்ரக்ஷதின் சிறப்பு. நானும் எவளவோ முறை கழுத்தில் அணிந்துகொண்டு பார்த்தேன் , அனால் அது என்னவோ தெரியவ்ல்லை எனக்கும் ருட்ராக்ஷதிற்கும் ஒத்தே போகவில்லை . ஒவ்வெரு முறையும் அதாவது ஒரு காரணத்தால் கிழே விழுந்துவிடும்! . இதில இருந்து தெரிவது என்ன என்றால் ருத்ராக்ஷம் அணியவும் ஒரு குடுப்பினை வேண்டும்.
ஓம் நாம சிவாய.....
கொல்லங் கொண்டான் அய்யனார் துணை
மகளே;மிகவும் நல்ல பதிவு. ருத்ராச்ம்பற்றிய பல அறிய தகவல்களை தெரிவித்து இருக்கிறாய்.நீ கூருதகவல்களில் இருந்தே இவற்றை திரட்ட கடின உழைப்பை செல்வளித்துதிருப்பாயி என்பது தெரிகிறது .நல்ல அறியதகவகளை உனது தொண்டு தொடரட்டும் வாழ்க வளமுடன் மென் மேலும் உனது பணியில் சிறப்பாக வளர சிவனார் அருள் புரிய வேண்டுகிறேன் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்
சிவனே போற்றி சிவாசிவாபோற்றி
சிவாய நம்ஹா
The binomial for Urudhiratcham is Elaeocarpus ganitrus
dear friend
i could not download the bogar_7000 book. the website is not opening. pls help me to download the same.
thanks and regards
ezhil
The link is not working any body got it downloaded?
Realy very use full message & site
thanks
Post a Comment