தமிழனின் புத்தாண்டு தினம்!,வாழ்த்துக்கள் நண்பர்களே!

Author: தோழி / Labels: , ,

தமிழ் கூறும் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் துவங்கி இனிவரும் நாட்கள் அனைத்துமே வளமானதாகவும், உங்களின் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ் புத்தாண்டின் துவக்க நாள் குறித்து சமீப காலமாய் இரண்டு நிலைப்பாடுகள் உண்டாகியிருக்கின்றன. எமக்கு அரசியல் தேவையில்லை,மேலும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் குறித்தும் நாம் விவாதிக்கப் போவதில்லை. இந்த பதிவின் மூலம் தமிழ் புத்தாண்டு குறித்து சித்தர் பெருமக்கள் என்ன கூறியிருக்கின்றனர் என்பதைப் பற்றி மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்து மரபியலில் காலத்தைக் கணிக்க உதவும் பஞ்சாங்கத்திற்கும், சித்தர்களின் கணக்கீட்டு முறைக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. இது பற்றி முன்னரே பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த விவரங்களை அறிய விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். வாருங்கள்!, சித்தர்களின் கால கணக்கீட்டு முறை பற்றி புலிப்பாணி சித்தர் அருளிய பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.இந்த பாடல் “புலிப்பாணி சோதிடம்” என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப் பட்டது.


"சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிகின்ற கதிர்மதி கணக்கன்பாம்பு
அதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் திதியுடனே
மாதமொடு வருடாதிக் கணக்கெல்லாம்
தெளிவுடனே மக்கள்ளுய்ய அயன்தானும்
வாதியென்ற ஞானியரும் பலவாறாக
வையகாத்தில் பூட்டிவைதார் மறைவாக
பரந்திட்டேன் போகருட கடாட்சத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே"

- புலிப்பாணிச் சித்தர் -

ஒன்பது கோள்களையும், வருடம், மாதம், வாரம், நாள், நாழிகை என எல்லா கூறுகளையும் பன்னிரெண்டு ராசிக்குள் அயன் அடக்கி வைத்தார் என்கிறார் புலிப்பாணி சித்தர். இதை ஞானிகள், சித்தர்கள் விளக்கமாக பூமியில் பூட்டி வைத்தார்களாம். அதனை போகரின் அருளால் புலிப்பாணி ஆகிய நான் எல்லோருக்கும் சொல்கிறேன் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

இனி, இந்த வருடத்தின் பிறப்பினை எவ்வாறு கணித்தார்கள் என்பதைப் பற்றி அகத்தியர் அருளிய பாடல்களின் வழியே பார்ப்போம். இந்த பாடல்கள் அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டது.

"புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமாக்காய்
சத்தியமாய் யானுரைத்தே னன்புள்ளானே"


- அகத்தியர் -


"மேடமெனும் ராசியாம் மதனிற் கேளு
மேலான யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருசபுருசன் அவதரிப்பா னென்றே
பரிவுடன் உலகிற்க்கு நீசாற்றே"


- அகத்தியர் -

கலியுகம் பற்றிய விவரங்களையெல்லாம் தான் அசுவினி தேவரிடம் இருந்து தெரிந்து கொண்டதாக கூறும் அகத்தியர், சூரியனானவன் மீன ராசியில் இருந்து மேஷ ராசியின் முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பிரவேசிக்கும் நேரமே வருடத்தின் பிறப்பு ஆகிறது என்கிறார். ஒவ்வொரு வருட சுழற்சிக்குப் பின்னர் புதுவருடம் இந்த குறிப்பிட்ட கணத்தில்தான் உதயமாகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோரால் கணித்துச் சொல்லப் பட்ட இந்த விவரங்களைத்தான் இன்றைய நவீன அறிவியல் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதி செய்திருக்கிறது.

இதன் படி இந்த முறை புது வருடமானது ஆங்கில திகதி 14.04.2011 அன்று இந்திய, இலங்கை நேரமான முற்பகல் 11.39 க்கு உதயமாகிறது. இந்த நேரத்தில் பழையன கழிந்து இனியெல்லாம் சுகமாய் அமைந்திட எல்லாம் வல்ல குருவினை மனதில் தியானித்து புதியவருடத்தின் செயல்களை துவக்குங்கள். நலமே விழையும்.

குருவருளும், திருவருளும் அனைவருக்கும் சித்திக்க மீண்டுமொரு முறை எனது பிரார்த்தனைகளை வைத்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

chandru2110 said...

உங்கள் கருத்து ஏற்று கொள்ளத்தக்கது. தமிழ் எத்தனையோ நூற்றாண்டுகளையும் புத்தாண்டுகளையும் கடந்து வந்துருக்கு. எத்தனையோ மாற்றத்தை ஏற்றிருக்கும், அது மாதிரிதான் இதுவும், . சித்திரை முதல் நாளை புது வருசமா நினைப்பவர்களுக்கு என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்... குருவே...

சி.பி.செந்தில்குமார் said...

புலிப்பாணீ சித்தர் பற்றிய குறிப்புகள் எங்க சொந்த ஊரான சென்னிமலையில் கூட படிச்சேன்.. ம் ம்

Ramani said...

தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறோம்
தங்களுக்கு எங்கள் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Sankar Gurusamy said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Praveen Kumar said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .


- அகத்தியர் துணை

இன்பம் துன்பம் said...

இந்த பதிவு சித்தர்களின் காலத்தில் இருந்தே.சித்திரை மதத்தில் தான்வருடப்பிறப்பு வருகிறது என்பது உறுதிபடுகிறது.நன்றி மகளே வாழ்க வளமுடன் மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் இன்று வழக்கம் போல் கோவிலுக்கு சென்றேன்,ஸ்வீடன பிரசாதம் கிடைத்தது. மனதுக்கு நிறைவக இருந்தது.இது போல் எல்லாரும் மகிழ்ச்சியான வாழ்கையில் எல்லா வளமும் பெற்று,வாழ அன்னை கற்பகாம்பாள் துணையுடன் அன்னை அபிராமி அருள் புரிய வேண்டுகிறேன். எனது மகள் தோழிக்கும் சேர்த்துதான்
subburajpiramu@gmail.com

baskar said...

anbu thozhi avargale
puttru nooikana marundhai
pattri siddharkal sollapatta vazhimurgalai
koorungal ivulagil miga mukkiyamana prichinai idhu

Ganesh said...

எத்தனையோ ஆண்டுகள் இருந்து வந்த முறையை மிகவும் அழகாக விளக்கியமைக்கு நன்றி.

கணேஷ்

எஸ். சேர்மராஜ் said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
- தங்களின் புதிய தோழன்

-கிமூ- said...

INNIYA THAMIZ PUTHANDU VAZTHUKAL SAGOTHARI

THIRUMANAM KAIKUDA / ALLATHU ATHAI ARINTHUKOLLA SITHTHARKAL THANTHIRAM ULLATHA? KONJAM AARAINTHU SOLLAVUM.

இராஜராஜேஸ்வரி said...

இனிய சித்திரை தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

RAVINDRAN said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tamilvirumbi said...

Dear thozi,
'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'
பகைமையை வேரறுத்து நட்புடன் இந்த இனிய புத்தாண்டில் வீடும் நாடும் செழிக்க, தாங்கள் வளமுடன் இன்னும் செழிப்புடன் உயர்வடைய என் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Kanagadhileepan said...

thangalin karuththukku nandri. thangalukkum iniya puththaandu vaazhththukkal.

kanagadhileepan,padmapriya,ilakkia visakan

-கிமூ- said...

sagothari nalama?
2 natkalaka pathivu ethum varavillaey!

sury said...

i am not able to read your blog,for quite some time, since the background colour is dark brown and nothing is visible. Kindly change the background colour of the blog to some light colour so that we could read.
subbu rathinam
http://vazhvuneri.blogspot.com

Praveen Kumar said...

why there is no new post for three days? are you well? i hope so....

*இயற்கை ராஜி* said...

:-) mm..informative:-)
keep it up

agamudali said...

தோழி,
காலந்தாழ்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தங்கள் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அகத்திய பெருமானை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்,
அகமுதலி.

Post a Comment