குழந்தைப்பேறு தரும் தந்திரம்!

Author: தோழி / Labels: , ,

நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கப் படுவது நிதர்சனம். தற்போதைய நவீன மருத்துவம் பலவேறு தீர்வுகளை தந்துவிட்ட சூழலில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் இதற்கான எளிய தந்திரம் ஒன்றினை அருளியிருக்கின்றனர். கொஞ்சம் சுவாரசியமானதுதான், வாருங்கள் தெரிந்து கொள்வோம்..


"அட்சரமாஞ் சிகாரமுதல் சகலபூவாம்
சிறப்புனனே யிருந்துதான் வருணன்மூலை
நிசமான தாமரையின் மணிதானாவல்
நிலையான பலகையது நீலவஸ்த்ரம்
தலையான வருவைந்து நூறுபோடு
சகலபில்லி சூனியங்கள் தெறித்துப்போகும்
மலையாதே பெரும்பாடு முடனேதீரும்
மங்கையர்க்கு மதலையுண்டா மலங்கிடாதே."


- அகத்தியர் -

நாவல் மரத்தின் பலகை ஒன்றை எடுத்து அதில் “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை எழுதிட வேண்டும். பின்னர் அந்த பலகையின் மீது தாமரை மணிகளையும், ஒரு பூவினையும் வைத்திட வேண்டுமாம். நீல நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு, மேற்கு முகமாய் அமர்ந்து நாவல் மரத்தின் பலகையை முன்னர் வைத்துக் கொள்ள வேண்டும். “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை செபித்தவாறே ஒவ்வொரு பூவாக, ஐநூறு முறை அந்த பலகையின் மீது பூக்களை போட வேண்டுமாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களை பீடித்திருக்கும் பில்லி,சூனியம் போன்றவை விலகி, பெரும்பாடு என்ற நோயும் தீர்ந்து போவதுடன் குழந்தை பாக்கியமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். தேவையுள்ளவர்களுக்கு இந்த முறையை பரிந்துரைக்கலாம்.

நண்பர்களே, எது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பதில் தற்போது தமிழ் நாட்டின் அரசாங்கத்துக்கும், தமிழர்களுக்கும் இடையில் குழப்பங்களும் விவாதங்களும் மலிந்திருக்கிற சூழலில், தமிழ் புத்தாண்டு என்பது எப்போது பிறக்கிறது என்பதை நமது சித்தர் பெருமக்கள் தெளிவாக கூறியிருக்கின்றனர். அந்த தகவலுடன் நாளை புதுவருட பதிவில் சந்திக்கிறேன்.... காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

18 comments:

tamilvirumbi said...

Dear Thozi,

Thanks a lot for your worthy message given to your readers.At present,due to deficit of nutrients and also girls' lethargic attitude towards cooking forced them to be childless couples.Most of the IT girls are adapted to the style of consuming liquor along with the boys. In the long run, the liquor will produce less motility semen which will lead to childless.

சி.பி.செந்தில்குமார் said...

சிவாய நம.. சிவய நம .. எது சரி?

சி.பி.செந்தில்குமார் said...

பெரும்பாடு நோய் என்பது என்ன?

-கிமூ- said...

thozi - topic super and very useful.
looking for this topic for a very long time.

where to get NAVAL MARAM / PALAKAI? (those who are in chennai pls help me)
what is THAMARAI MANNIKAL?

திவா said...

பெரும்பாடு = ஆங்கில மருத்துவத்தில் டியூபி, கர்ப்பப்பையில் பைப்ராய்ட் போன்றவை. அதாவது மாதவிலக்கு நேரத்தில் அதிகமாக வெளியேறுதல்.

சின்னப்பயல் said...

தாமரை மணி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தோழி. எந்தப்பூவினைக்கொண்டு அர்ச்சிக்க வேண்டும் என்பதையும் கொஞ்சம் சொன்னால் நலம்.!

தோழி said...

@சின்னப்பயல்

தாமரை செடியின் விதைகளைத்தான் தாமரை மணிகள் என்கின்றனர். பெரும்பாலும் இந்த மணிகளை மாலையாகவே செய்வதுண்டு. பூசைப் பொருட்கள் விற்கும் கடைகளில் இவற்றை வாங்கலாம்..

எந்த வகையான பூவையும் பயன்படுத்தலாம், ஆனால் அத்தனை பூவும் ஒரே வகையாக இருக்க வேண்டும்..

Lakshmanan said...

திரு. தோழி

சிறந்த பதிவு. கணவன் மனைவி இருவரில் யார் இவ்வாறு செய்யவேண்டும்? அல்லது இருவருமே செய்யவேண்டுமா?

இப்படிக்கு
தி. லெட்சுமணன்

RAVINDRAN said...

அரிய தகவல்

தோழி said...

@Lakshmanan

யார் செய்திட வேண்டும் என்பது மாதிரி துல்லியமான விவரங்கள், பாடல்களில் இல்லை. இருப்பினும் சித்தர்களின் மரபியலில் ஆண்,பெண் என்கிற பேதம் எல்லாம் கிடையாது. யாரும் செய்யலாம், என்னுடைய தனிப்பட்ட கருத்தில் தம்பதிகளாய் இணைந்தும் செய்யலாம்.

TTGOPINATHG THANGARAJ said...

naval pazhagai meethu thamarai mani, poo vaithu athu illamal poo thoovi manthiram solla venduma!

Statsfact said...

அன்புள்ள தோழி,

அகத்தியர் அருளிய நாவல் மரம் வைத்து பூஜை செய்து என் சகோதரி ஒருவற்கு பிள்ளை பாக்கியம் கிடைத்து உள்ளது.
ஆகஸ்ட் 31 - (ரம்ஜான) அன்று பூஜை செய்தார்கள் - அக்டோபர் 1 - டாக்டர் உறுதி படுதிள்ளர். அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்.

அகத்தியற்கும் - தோழிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

vt_senthil said...

அன்புள்ள தோழி,

நாவல் மர பலகை எங்கு கிடைக்கும். உதவி தேவை.

vt_senthil said...

அன்புள்ள தோழி,

கழஞ்சு - தமிழ் இல் அளவு என்ன

mayasankar said...

unkal takaval rombavum payan ulatha irukirathu

sankar

mayasankar said...

unkal takaval mikaum paayan ulathaka irukirathu

sankar

smr said...

Dear Statsfact,


Naval mara palagai thangalukku engu kidaithathu endru therindhal mattravargalukkkum udaviyaaga irukkum. dhayavu seidhu pagirdhdhu kollavum.

thayu manavan said...

sivaya nama mattum naval palagail eluthum padi irukathu.palagail naragavum kurukagavum 5 kodukal varainthal 25 araigal kedaikum athil muthal 5 araikalil sivayanama mantharatthi atikavandum varisaikeramamaga athu vayanamase ana eluthai matri matri 25 araigalum porthisaiyavandum.thanjai.kanagu

Post a Comment