பகைவர்கள் இல்லாத சமரச வாழ்வியலையே சித்தர் பெருமக்கள் வலியுறுத்துகின்றன. பிறர் தமக்கு தீமை செய்தாலும் அவருக்கு நன்மை செய்வதன் அவசியத்தை பல பாடல்களில் காணமுடிகிறது. அந்த வகையில் எத்தனை கொடிய பகைவரானாலும் அவரை நண்பராக்கிக் கொள்ளும் உத்தி ஒன்றினை அகத்தியர் தனது பாடல் ஒன்றில் அருளியிருக்கிறார்.
அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் இடம்பெற்றிருக்கும் அந்த பாடல் பின்வருமாறு...
"யெட்டான நகாரமுதை யகாரமான
இனிதான யிலைகளோ வில்வமாகும்
நலமான செந்துகிலுடன் கிழக்குமூலை
முளகுசிவ மாம்பலகை முன்னூற்றெட்டு
தட்டாதே யுருவேற்றி யெதிரிபேரை
தானெழுதி யுன்பேரை மேலாகமாற்றி
கட்டாகத் தகடெழுதி கையிற்கொண்டால்
கடும்பகைவன் கேள்வானாம் கண்ணிற்காணே"
- அகத்தியர் -
2"x2" அளவிலான செப்புத் தகடு ஒன்றினை எடுத்து அதில் நமது பேரை எழுதிக் கொள்ள வேண்டும். அதன் கீழே நண்பராக்க வேண்டிய நமது எதிரியின் பெயரை எழுதிட வேண்டுமாம். சிவப்பு நிறத்திலான உடையணிந்து கொண்டு, மாம் பலகை ஒன்றின் மீது கிழக்கு முகமாய் உட்கார்ந்து நமக்கு முன்னால் அந்த தகட்டினை வைத்திட சொல்கிறார் அகத்தியர்.
“நமசிவய” என்கிற மந்திரத்தை சொல்லிக் கொண்டே ஒரு மிளகு மற்றும் வில்வ இலையினை அந்த செப்புத் தகட்டின் மீது போடவேண்டுமாம். இந்த முறையில் 308 தடவை மந்திரம் சொல்லி மிளகையும், வில்வ இலையையும் போட வேண்டும் என்கிறார். இப்படி செய்த பின்னர் இந்த செப்புத் தகட்டினை கைகளில் வைத்துக் கொண்டால் எத்தனை கொடுமையான எதிரியாக இருந்தாலும் அவன் நமக்கு நண்பனாவான் என்கிறார் அகத்தியர்.
வேறொரு தகவலுடன் நாளை சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



13 comments:
தோழி அவர்களுக்கு தாங்கள் கூறியது மிகவும் பயனுள்ள தகவல் , ஆயினும் எனக்கு ஒரு சந்தேகம் , தாங்கள் கூறிய தகட்டினை எந்நேரமும் கையிலே வைத்து இருக்க வேண்டுமா? இல்லை விட்டில் பூஜை அறையில் வைக்கலாமா ?
super :)
எனக்கு ஒரு பெண் எதிரி இருக்காங்க.. ஆனா அவங்க உண்மையான பெயர் தெரியாது.. நான் என்ன பண்ணறது? ஹி ஹி
>>Your comment will be visible after approval.
அய்யோ.. பிரபல பதிவர் போல...
மிகவும் அருமை தோழி!! ஆனால் சரியாக 308 தடவைகள் தான் செய்ய வேண்டுமா? இந்த சந்தேகம் எனக்கு எல்லா பதிவுகளிலும் இருக்குறது! உதாரணமாக 1008 தடவைகள் என்றால் சரியாக 1008 தடவைகள தான் செய்ய வேண்டுமா ??
Please tell us about "Panchatchara Mantra"
Thank you
நல்ல பதிவு.பலருக்கும் பயன்படுவதாக இருக்கும்.
Dear thozi,
This trick is not only essential for us but
for inter-terrestial nations also.Thanks a lot
for your timely presentation.
நன்றி
ஏராளமான, தேவையான தகவல்கள் கொட்டிக்கிடக்கும் களஞ்சியமாகத்தான் உங்கள் தளத்தைப்பார்க்கிறேன்.
நன்றி - இப்படிப்பட்ட புனிதமான சேவைக்கு!
வாழ்த்துக்கள் - இந்தச் சேவை தொடர!
hai friend.am new visitor to this webpage of two days before ..those who want to be a good knowledge of sidha medicine .surely visit this website..even though am not try any medicine in this website ..but the beautiful thing of conveying the message is so nice..hats of sitharkal .com
செப்பு தகட்டில் பேரை எப்படி எழுதுவது பேனா கொண்டா அல்லது ஆணியை கொண்டு கீறி எழுதலாமா
simply suupppppppppppppppper...........
Post a Comment