பனித்திரை!, மனத்திரை!

Author: தோழி / Labels: ,

மனித மனம் என்பது எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இவையே நமது ஞாபக இடுக்குகள் எங்கும் பரவி படிந்து நம்மை ஆளுகின்றன. இந்த அனுபவ தொகுப்பானது நன்மை, தீமை என்கின்ற இரண்டு எல்லைகளில் நின்று ஒன்றுக்கு ஒன்று முரணாகி குழம்புவதையே மனசாட்சி என உருவகித்துக் கொள்கிறோம்.இந்த மன சாட்சிதான் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகளை முன்னெடுத்து நடத்துகின்றன.

தெளிவான சிந்தனை உள்ளவன் சிறந்தவனாகவும், குழம்பிய சிந்தனை உடையவன் தோல்வியடைந்தவனாகவும் இருக்கின்றான். ஆக ஒருவனை உயர்த்துவதும், தாழ்வடைய செய்வதும் மனம் என்றாலும், அதன் மூலம் மேலே சொன்ன அனுபவங்களில்தான் அடங்கியிருக்கிறது. இந்த அனுபவத்தைதான் திரு.கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் ஆண்டவன் என்கிறார்.

இந்த தத்துவத்தை இன்னமும் எளிதாய் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சூரியனைக் கணட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!"


- பாம்பாட்டிச் சித்தர் -

பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே பனித்திரை என்பர். ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய பனித் திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.

அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.

இவ்வாறு பனித் திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.


நண்பர்களே!

எனது Google buzz முகவரி - https://profiles.google.com/siththarkal#siththarkal/buzz

இதைத் தவிர தோழி என்ற பெயரில் வரும் மற்ற buzz க்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

இன்பம் துன்பம் said...

மனம் போல் வாழ்வு என்று பழ மொழி உண்டு இதை சித்தர் பாடலும் உருதிபடுத்திவிட்டது.வழக்கம் போல் இந்த பதிவிலும் உனது திறமையை நிருபித்துவிட்டாய் எழுத்துநடை முற்றும் பாடலுக்கன விளக்காம் மிகவும் நன்றாக இருந்தது.வாழ்க வளமுடன் மென் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் subburajpiramu@mail.com

இராஜராஜேஸ்வரி said...

அனுபவமே ஆண்டவன் என்னும் உயரிய சிந்தனையை சித்தர் பாடல் மூலம் விளக்கிய பதிவுக்குப் பாராட்டுக்கள்.

tamilvirumbi said...

Dear thozi,

Thanks a lot for presenting this
subject in a professional way.I have to share
one of the excerpts from the books of Sri kirupananda vaariar for your kind information.

கடவுளை நேராகப் பார்த்தவர்கள் இவ்வுலகில் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். ஒரு ஊருக்குப் போகாதவன், அந்த இடம் கிடையாது என்று சொல்ல முடியாது. கடவுள் என்பது அனுபவித்து உணர வேண்டிய அனுபவம்.
* பம்பரம் தானே ஆடுமா? அல்லது ஆட்டினால் ஆடுமா? பம்பரத்தைச் சாட்டை வைத்தே நாம் ஆட்டுகிறோம். ஆனால், இவ்வுலகமாகிய பம்பரத்தை சாட்டை இல்லாமலே ஆட்டுகிறான் இறைவன்.
* பானை செய்ய முதற்காரணம் மண்; அதை செய்ய காரணம் குயவன்; துணைக்காரணம் தண்டச்சக்கரம். அதுபோல உடலாகிய பானையை, சக்தியாகிய துணைக்காரணம் கொண்டு, பானை செய்ய காரணமாக இருக்கின்ற சிவபெருமான் மாயையைக் கொண்டு பானை செய்கிறார்.
* பானையைக் கண்டதும், அதைச் செய்த குயவனின் நினைவு வருவதைப்போல, உலகத்தைக் கண்டதும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் நினைவுக்கு வர வேண்டும்.


* அணுவை ஆராய்கிறான் மனிதன். வானமண்டலங்களை ஆராய்கிறான். சந்திரனை ஆராய்கிறான். ஆனால், தன்னை ஆராயவும் சிந்திக்கவும் மறுக்கிறான். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நாம் பூமியில் பிறந்ததன் நோக்கம் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் கடவுளைப் பற்றி ஞானம் வந்துவிடும்.

Praveen Kumar said...

புதிய தகவல், நன்றி

RAVINDRAN said...

நன்றி

Kutty Kiin said...

Pagirvuku Nandri, Nalla Thagaval!

Kutty Kiin said...

Pagirvuku Nandri, Nalla Thagaval!

Post a Comment