விமர்சனங்களுக்கு அப்பாற் பட்டவர்களென இன்று எவரும் இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு வகையில் விமர்சனங்களுக்கும், கண்டணங்களுக்கும் ஆளாகிறோம். இதனால் ஏற்படும் மன உளைச்சல்கள், உடல் ரீதியான தாக்கங்கள் என விளைவுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதனை தூய நற் சிந்தனையாளர்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பதை பாம்பாட்டி சித்தர் பின் வரும் தனது பாடலில் விவரிக்கிறார்.
கன்மவினை கொண்டகாயம் தண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
"காய்த்த மரத்துக்கு கல்லடி படும்" என்பர். இங்கு காய்த்த மரம் என்பது செழித்து வளர்ந்து, பூத்துக் குலுங்கி காய்கள் காய்த்து, பழங்கள் நிறைந்திருக்கும் மரம். அந்த காய்களையும், பழங்களையும் வேண்டிக் கல்லெறியும் பொழுது மிக நிச்சயமாக பல கற்கள் அந்த மரத்தின் மீது படும்.
அதேபோன்று குருவருளின் துணையோடு தன்னையறியும் தேடலில் தெளிவுகளை கண்ட தவசீலர்களும் கூட முன் வினைப் பயன் காரணமாய் கண்டனங்களையும், தண்டனைகளையும் எதிர் கொள்ள நேரிடும். தூய மனதோடு சமூகத் தொண்டு மற்றும் இறைத் தொண்டாற்றுவோர் கூட இதற்கு விதிவிலக்காய் அமைய முடியாது. இத்தகையோரை சோதனைகள் எதுவும் செய்து விடமுடியாது. அவர்கள் இதையெல்லாம் கடந்த ஓர் உயர்ந்த தெளிந்த மன நிலையில் இருப்பார்கள் என்கின்றார்.
எப்படிப் பழத்தை வேண்டி எறியப் படும் கல் மரத்தில் பட்டாலும் மரம் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னிடமிருந்து காய், கனிகளைத் தந்துகொண்டே இருக்கிறதோ, அதைப்போல சித்தர்களும், ஞானிகளும் எத்தனைதான் சோதனைகளுக்கு ஆட்பட்டாலும் தங்கள் அருள் பிரகாசத்தை தொடர்ந்துவெளிப்படுத்திக் கொண்டே இருப்பர். இத்தகைய நிலையைத் தருகின்ற பரம்பொருளைத் தொழுது ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
நல்ல பதிவு , அருமையான விளக்கம், நன்றி
கூகுள் பஸ்ஸில் தோழி என்ற பெயரில் வருபவர் நீங்க தானா?
மகளே; மிகவும் நல்ல பிரம்மாதமான விளக்கம். ரெம்ப நல்லாவே இறுக்கும்மா .வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்
உங்கள் பெயர் மூலம் கூகுள் பஸ்ஸில் பெரிய பஞ்சாயத்தே நடக்கின்றது. ஏதோ ஒரு தவறு எங்கேயோ இருக்கிறது. கவனிக்கவும். பலரும் நீங்க தான் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
Dear Thozi,
You have explained well the greatest
philosophy in simple words.If you ponder over what you have narrated to us,it will reverberate in everyone's mind.In this life, in one way or the other,the excruciating pain one experiences,your exposition will melt everyone's hearts.
With a great love,
நன்றி
நன்றி
Post a Comment