பிறந்த கணத்தில் இருந்து துவங்கும் மனித வாழ்வின் பயணம் இறுதி மூச்சு வரையில் தொடர்கிறது. இந்த பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நமக்கான வினைகளையும் அதன் எதிர்வினைகளையும் தீர்மானிக்கிறது. இந்த பாதையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு கூறுகிறார்.
"தசநாடி தசவாயு சத்த தாது
சார்ந்த மரக்கப்பல் அதுதத்தி வீழுமே
இசைவான கப்பலினை ஏக வெள்ளத்தில்
என்னாளும் ஓட்டத் துணிந்து ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
அலைகள் அதிகமான கடலில் செலுத்தப் படும் கப்பலானது நிலை குலைந்து மூழ்கிப் போகும். அதே நேரத்தில் அலைகளற்ற அமைதியான கடலில் செலுத்தப் படும் கப்பலானது பாதுகாப்பாய் சேர வேண்டிய இடத்தினை சேரும்.
அது போல, பத்து நாடிகளாலும், பத்து வாயுக்களாலும், ஏழுவகை தாதுக்களாலும் உருவான இந்த உடலானது எல்லாம் வல்ல பரம்பொருளை நோக்கி செலுத்தப்படா விட்டால் அலைகடலில் கவிழ்ந்த கப்பல் போல் இந்த மண்ணிலேயே வீழுமாம்.
அலையில்லா நிலைகடலில் செலுத்தப்படும் கப்பல் போல் இந்த உடலும், மனமும் பரம்பொருளை நோக்கிச் செலுத்தப்பட்டால் பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பதை உணர்ந்து கொண்டோம் என்று துணிந்து ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
பத்து நாடிகள்(தசநாடி) -
இடகலை, பிங்கலை, சுழிமுனை, பூடா, காந்தாரி, அத்திசிங்குவை, அலம்புடை, சங்கினி, குரு, கன்னி ஆகிவையாகும்.
பத்து வாயுக்கள் (தசவாயு) -
அபாணன், பிராணன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிவையாகும்.
ஏழு தாதுக்கள் (சத்த தாது) -
இரசம், உதிரம், எலும்பு, தோல், தசை, மூளை, சுக்கிலம் ஆகிவையாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

5 comments:
உங்கப்பா அல்லது தாத்தா வழிகாட்டுதலில் எழுதறீங்களா? அல்லது எல்லாம் உங்க சொந்த முயற்சியில் எழுதுவதா? ஆச்சரியம் தான்..
அருமை , மிக அருமை ! இன்று நான் உங்கள் முலமாக இந்த பத்து வகையான நாடிகளும் , ஏழு வகையான வாயுக்களும் , ஏழு வகையான தாதுக்களும் என்ன என்று தெரிந்து கொண்டேன் , நன்றி , தங்கள் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் .
dear Thozi,
Practically,you are rendering this
subject in an understandable way.You also have portrayed well about all of our body constituents.Thanks a lot.
நன்றி
very very nice thozhi !
Post a Comment