அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதுகாரும் அகத்தியர் அருளிய சில அரிய ஹோம முறைகளைப் பகிர்ந்து கொண்டேன். தொடரின் சுவாரசியம் கருதி இன்றுடன் ஹோமங்கள் பற்றிய பதிவுகளை நிறைவு செய்கிறேன். கடந்த பதின்மூன்று பதிவுகளின் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நண்பர்கள் சிலர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு என்னாலான தெளிவுகளை இன்றைய பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன்.
இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது.
இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.
ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.
ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.
என் வரையில் ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் நானறிந்த தெளிவுகளை பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
ஹோமங்கள் பற்றிய தங்கள் பதிவு அருமை , அனைவர்க்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாகவும் இருந்தது மேலும் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அதில் கூறுகிறது " ஒருவன் ஹோம குண்டதில்ருந்து வரும் புகையை சுவசித்தாலே அவர்களுக்கு எந்த நோயும் வராது என்று" ஆகவே நாம் அனைவரும் ஹோமதின் பலனை உணர்ந்து செய்ய வேண்டும் . நன்றி
கடவுள் எடுத்துக்கொண்ட என் குழந்தையை நான் திரும்ப பெற சித்தர்கள் ஏதானும் வழி சொல்லியிருக்கிறார்களா ?
Dear thozi,
I have run through your complementary part.Whatever you have poured
about homams,it is worthwhile to contemplate.
In the midst of everyone's personal bickering,it should be practiced.I oblige for your strenuous effort to make out this blog for entire tamil population.
With a plenty of thanks,
@SanSiv
உங்களின் வலைத்தளம் பார்த்தேன், என்ன சொல்வதென்று தெரியவில்லை. உங்களுக்கு துணை நிற்க எல்லாம் வல்ல குருவருளை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நிச்சயமாய் நல்வழி காட்டிடுவார்.
i would like to share this details in indusladies.com and i want to copy the content but iam unable to do that.The information is really excellent and indusladies is a ladies forum so that many people will know abt SIDDHARGHAL.i cannot post this link becoz external links are not allowed in the forum.Can u help me in this regard.Thanks in advance.
piriya thozhi homakunda vadivam kovil kalil amaiththa murai photo ithi idappattal nalam enpathu en eliya karuththu athe poola karkal ennikkai kavanaththil kolvathum nadaimurai unmaiyaakum . virivaana thaval nanparkal moolam peravum muyalalaam muyalvoom. nanri thozhi
உங்க குரு யாரு? உங்கப்பாவா? ஹி ஹி
நன்றி
Homam is part and parcel of Hindus, will you please try to find out is there any thing equal to in other religions like Muslim, Christian etc. in any part of the world. I hope this will be useful all community and all walks of life in the world.
Post a Comment