பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

"காணவே யின்னமொரு சூட்சங்கேளு
கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"


- அகத்தியர் -

வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.

"ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"


- அகத்தியர் -

மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம்

தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

"நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
மெய்யடா பிரமையொடு சகலரோகம்
விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
மகத்தான கற்பூர தீபந்தன்னால்
அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"


- அகத்தியர் -

இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன் மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம். இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும் செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

திவா said...

பெண் வதை என்று இருக்க வேண்டுமா?
ஐங்கோணம் என்பது எங்கே குறிக்கப்படுகிறது? 1008?
சித்தர் மொழிக்கு புதியவன். அதனால் நிறைய சந்தேகம் இருக்கும். மன்னிக்க.

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

tamilvirumbi said...

Dear thozi,
The homam rendering wealth is depicted by you clearly.At the same time, we have to expiate the intolerable sins committed by us in our present and previous life.You have given out a crystal clear explanation to the
laymen level.Thanks a lot.

குறும்பன் said...

ஐயம்.
எனக்கு தெரிந்த ஒருவர் சரியாக பேச முடியாதவர். மேலும் அவரால் ஒரே இடத்தில் அதிக நேரமும் உட்கார்ந்திருக்க முடியாது.

இக்காரணங்களால் அவரால் ஓமம் செய்ய இயலாது. அவருக்காக மற்றவர்கள் செய்தால் தான் உண்டு. நாம் மற்றவர்களுக்காக செய்வதற்கு என்று ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?

Praveen Kumar said...

ஓம் தத்புருஷாய வித்மஹே
சிவா புதராய தீமஹீ
தன்னோ அகத்தீச பிரதோடயாட்

-- அகத்தியர் துணை

-கிமூ- said...

தோழி,

அருமையான பதிவு,
மந்தரத்தை 1008 முறை எழுதி வந்தால்
அல்லது சொல்லி வந்தால் பலன் உண்டா?
அதுமாதிரி வழிமுறை சித்தரியலில் உள்ளதா?

-கிமூ-

sonofcoimbatore2011 said...

அன்பு நண்பருக்கு உங்கள் மூலம் ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டேன்

ப்ளாக் வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லவும் எனது ப்லோகை பார்க்கவும் எனக்கு ப்ளாக் வடிவமைப்பு தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும் எனது ஈமெயில் sonofcoimbatore@ஜிமெயில்;.com

RAVINDRAN said...

நன்றி

இன்பம் துன்பம் said...

நன்று மகளே; நல்ல விளக்கம்வாழ்க வளமுடன்

Post a Comment