யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!

Author: தோழி / Labels: ,

இன்று வெளியாவதாக இருந்த “செல்வம் தரும் ஹோமம்” பற்றிய பதிவு நாளை வெளியாகும். இன்றைய பதிவில் புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

முந்தைய மூன்று பதிவுகளிலும் புவனையின் மூல மந்திரங்களை ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில் பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான் மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான். இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தந்து அவளின் அருளைப் பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை என்பவள் குழந்தை வடிவத்தையுடைய தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.

அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
கண்காண இன்னம்வெகு கடாட்சமே"


- அகத்தியர் -

இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.

தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை போட்டுக் கொண்டே புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார். அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

அடுத்த பதிவில் பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

14 comments:

Netrikkan said...

வாழ்க பல்லாண்டு... நீவீர்.

அன்புடன்
அழகிரி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஹோமம் செய்து வைக்கும் வாத்தியார் (சாஸ்திரிகள்) இல்லாமல் செய்யும் ஹோமம் பலனிக்காது என்பது உண்மையா?

பாலா said...

Hi Thozhi,

Today topic is really very interesting. thanks for sharing the puvanai homam.

http://gurumuni.blogspot.com/
Bala -chennai.

குறும்பன் said...

நாம் அடுத்தவர்களுக்காக ஓமம் செய்வதாக இருந்தால் எப்படி செய்வது? ஏதாவது முறை உள்ளதா?

தோழி said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)

சாஸ்திரிகளை வைத்து ஹோமம் செய்திட வேண்டும் என்கிற சம்பிரதாயங்கள் எல்லாம் இந்து மரபியலை சேர்ந்தது. சித்தர்கள் இந்த வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.சித்தரியலில் இடைத் தரகர்கள் இல்லை. உங்கள் பசிக்கு நீங்கள் தான் சாப்பிடவேண்டும்.

தோழி said...

@குறும்பன் இன்னொருவருக்கு உதவிட விரும்பினால் இந்த ஹோம முறையினை அவருக்கு அறிவுறுத்தி அவரே செய்திட உதவலாம்.

tamilvirumbi said...

dear thozi,
It is so exhiliarating to read today's blog.It is so simple to follow after worshipping our family god and guru.With a bouquet of flowers
pouring into your feet,as you have delved into our understanding level.

Praveen Kumar said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி

Adroit Systems said...

hi thozhi,
This blog is invaluable gift for me. thank u very much. i want to know your opinion about paramahamsa nithyananda. his classes and teaching are help me more. but now i m in confusion pls reply me....

aburvarajabhiravi said...

nilavu kadal ellam penn vadivam kuuriyathu pola
vaalai enum kundalaniyaiyum penn entru varniththirukka kuudum atharku aathaaram kura mudiyum ungal kuruththu enna thozhi

♔ம.தி.சுதா♔ said...

உண்மையில் இவர் பேரையே இன்று தான் அறிகிறேன் மிக்க நன்றி....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்

gurrru said...

Dear Thozhi, have you practiced these homa, mantras and experienced the results.

I believe you are giving these information with your guru's blessings.

I feel practicing mantra, homa without proper guru's blessings is not advisable. of course
for information and knowledge this is a great page.

RAVINDRAN said...

நன்றி

aburvarajabhiravi said...

@aburvarajabhiravi

Post a Comment