மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார்.
ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன் பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.
"ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"
- அகத்தியர் -
முக்கோணம் வடிவத்தை உடைய ஓம குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.
நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம்.
இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும் இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்.
நாளைய பதிவில் அளவிலா செல்வத்தை தரும் ஹோமம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
உபயோகமான பதிவு நன்றி.
அன்புள்ள தோழி ,
தங்களின் பதிவு அருமை,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
என் அன்பான தோழியே ,
வணக்கம் .தாங்கள் அய்சு ஹோமம் பற்றி அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி .
சித்தர்கள் போல் இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் ,பயன் பெறும்.ஆனால் ,என்னை போன்றோர் ,அதிக ஆண்டுகள் வாழ்வதனால் என்ன பயன் ?.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
மனிதன் இந்த உலகில் நூறு வருடங்கள் வாழ்ந்து எதனை சாதிக்கபோகிறான், ஒருவன் பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை, எல்லாம் இறைவன் செயல் . இந்த வாழ்க்கை நிரந்தரமில்லை என ஒரு மனிதன் எப்போது நினைகிரானோ அப்போதே அவனிடத்தில் இருக்கும் தீய குணங்கள் மறைந்து அனைவர்க்கும் நன்மையே செய்வான். ஆகவே நான் நீண்ட நாள் வாழும் ஆசையை விட்டுவிட்டு இறைவன் அருளை பெற முயற்சிக்க வேண்டும் .
வாழ்க வளமுடன்!
அன்புடையீர்! நாம் வாழ வேண்டும்! அவன் நாமத்தை சொல்ல வேண்டும்! இறைபணி புரியுங்கள்! இதை எழுதுவதற்க்கு சற்று முன் நாம் என்ன சாதித்தோம்! வாழ்க்கை தேவையில்லை! என தோனியது! ஏன் படைத்தான் என்னை இந்த பூவுலகில் என நினைத்தேன்! திடீரென மனதில் ஒரு எண்ணம்! நீண்ட ஆயுளை கேட்டு இறைவனை நினைத்து வாழழாமே என தோன்றியது!
நமக்கு தேவை என்று நினைப்போம்! வாழ்வோம்! நீண்ட ஆயுளுடன் வாழ்வோம், இறை நாமத்தை சொல்லி வாழ்வோம்! கடைசியில் மரணம் நிச்சயம்தான்!
Dear thozi,
In present kaliyuga,had the person got a sheer
longevity,he would have to meet dire consequences.In this era, nothing can be done peacefully.Every activity carries a suspicious activity.If the longevity has been utilised for
spiritual development,it would have weeded out bad effects.Thanks a lot for your presentation.
நன்றி
excuse me everyone , for write in english instead of tamil. i practice and learn mantras since last one year. our site helps me immensely. thank u guruji
Nic
Post a Comment