ஹோமங்களின் அறிவியல்!

Author: தோழி / Labels: , , ,

ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.

ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.

ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.

யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.

பதிவின் நீளம் கருதி யாகம் தொடர்பான மேலதிக தகவல்களை நாளை தொடர்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

Elangai Tamilan said...

தோழி,
வணக்கம். தங்களின் இன்றைய மிகவும் பொருள் பொதிந்ததாக உள்ளது.இன்னும் நிறைய செய்திகள் தங்களின் பதிவின் மூலம் ,வாசகர்கள் உணரபோகிறர்கள்.மேலும் ,தாங்கள் கூறியதில்
சத்சங்கம் அடங்கும்.ஏனென்றால் , ஒருவர் சொல்லும் மந்த்ரத்தின் சக்தியை விட ,பலருடன் கூடி
மந்திரத்தை உச்சரிக்கும்போது ,கிடைக்கும் சக்தி மிகவும் மகத்துவம் ஆனது.தமிழகத்தில் உள்ள
சிவாலயங்களில் ,திருவாசகம் முற்றோதுதல் இன்றும் நடைபெறுகிறது .இது சத்சங்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.மிக்க நன்றி.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

பாலா said...

அன்புள்ள தோழி ,

தங்களின் பதிவு மிக அருமை. தாங்கள் எப்போதும் எழுதும்போதும் அறிவியல் சான்றுகளுடன் எழுதுகிறீர்கள் . இது சாதாரண விஷயம் இல்லை .

தங்களின் சித்தர் பணி என்றும் தொடர வாழ்த்தும்...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

tamilvirumbi said...

Dear thozi,
The presentation given by you under the caption of "Homams-A science approach" is a thought provoking article,indeed.I have shared my points what I have studied in upanishads recently.Homams are basically offering to the sacrificial fire.The singular goal of vedam is to guide the human beings to go in a correct path.Homams form the essence of karmams prescribed in the vedams.The goal of all the homams is to render prosperity to the people at large by energizing and protecting the environment.
Each homam is performed strictly according to the scriptures.Each homam is performed after praying(shankalpa)for the specific relief/benefit for each individual.I am able to divulge it more.Tomorrow, I will share it at length.Thanks a lot for rendering a nice subject to discuss in this blog.

மதி வேங்கை said...

வணக்கம் தோழி ,
உமக்கும் உமது வலைதளத்திற்கும் புதிய நண்பன் நான் .....உமது பதிவுகள் அனைத்தும் விலைமதிக்க முடியா அறிவுச் செல்வத்தை அனைவருக்கும் தருகின்றன... ..இப்பதிவுகளுக்கான கடும் உழைப்பும் ,எளிமையாக எழுதும் திறனும் ,தான் அறிந்ததை பிறருக்கும் தரும் நல்லெண்ணமும் புகழுக்குரியது ..அதற்கு தலை வணங்குகிறோம் ..

அன்புடன் ,
மதிவேங்கை ,மலேசியா

RAVINDRAN said...

நன்றி

Post a Comment