சித்தர் பாடல்களில் ஹோமம்!

Author: தோழி / Labels:

தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர்.நான் பார்த்த வரையில் அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது.

அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.

- அகத்தியர் -

ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

"ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"

"வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"

"நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"

"நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"

பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, அவற்றின் வகைகள் யாவை?, என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் விளக்கம் அழகான ஒன்று.வயல் வரப்பை எரிப்பது என்ன காரணம் என்றால் ,களை செடிகளை வளரவிடாமல் தடுக்கும் பொருட்டே . இது நான் அறிந்த உண்மை.ஆனால் ,தாங்கள் கூறிய பின் தான் ,இதில்ருந்து தான் ஓமகுண்டங்கள் வளர்வதற்கு காரணம் என்று அறிந்து கொண்டேன் . மிக்க நன்றி .

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

பாலா said...

அன்புள்ள தோழி ,

அருமையான பதிவு, சித்தர்களின் யாகம் மிகவும் அருமையாக இருக்கும். அவர்களின் பரிபாஷைகள் கேட்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும் ஆனால் புரிந்து கொள்ளமுடியாது.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

அகோரி said...

நல்ல தகவல் நன்றி தோழி

RAVINDRAN said...

நன்றி

m.g. bala said...

பதிணென்சித்தர்கள் அருளிய சத்தி காயந்திரி மந்தரத்திற்கு
முதன்முறையாக இசை அமைத்துள்ளேன். சித்தர் அடியார்கள்
வாங்கி பயனடையவும். MG பாலா 9345342424

Post a Comment