வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன. இணையத்தில் கூட இம்மாதிரியான அறிக்கைகளை நாம் காண இயலும். அவற்றை விரித்து விவரிப்பது இந்த தொடரின் நோக்கமன்று.

எனினும் இத்தகைய ஒரு சடங்கினைப் பற்றி சித்தர் பெருமக்கள் கூறியிருப்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம். மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் இன்று புதியதாக எடுத்திருக்கும் தலைப்பு மிகவும் தெரிய வேண்டிய ஒன்று.நான் ,எனது அறிவுக்கு எட்டிய வரை ,வீட்டில் ,புதுமனை புகுவிழாவிற்கு,வளர்க்கும் ,கணபதி ஹோமம் ,
லக்ஷ்மி ஹோமம் ,சுதர்சன ஹோமம் போன்றவை.இதில் ,ஆயுசு ஹோமம் ,பிறந்த நாளுக்காக
வளர்ப்பது .மேலும் ,மகா மிர்துன்ஜய மந்திரம் நூற்றுட்டு தடவை உரு போட்டால்,ஆயிரம் தடவை
அசுவமேத யாகம் பண்ணிய பலம் உண்டு என்பது நான் அறிந்தது .தாங்கள் சித்தர்கள் யாகம் குறித்து சொல்வதை அறிய ஆவலை உள்ளேன்.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Narasimmarin Naalaayiram said...

: Thank

வசந்தா நடேசன் said...

//வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன..// கொஞ்சம் விளக்கியிருக்கலாம்?? ஒருவேளை சிங்களமா?? எனக்கு இது புது செய்தி. பகிர்வுக்கு நன்றி.

அகோரி said...

நல்ல தகவல் நன்றி தோழி

RAVINDRAN said...

வாழ்த்துக்கள்

shanthi said...

SHANTHI VATHANI said...

Your information is very very interesting and informative. Thank you.

17 March 2011 22:32

சிவன் அருள் said...

This is one important for everyone in this Kaliyug. everyone must know about this.
Thanks

By
Sivanarulbloger

http://sivanarul-sivamayam.blogspot.com/

Sri Muralidhara Swamigal said...

please visit sri danvantri arogya peedam coming chitra pournami day with all 63 dities and 468 siddhargal ifyou want to more detail please visit www.danvantri.org

yogi said...

tholi avargaluku.vanakam. ennidan korakur in nool ullathau. athai parkum pothu palya kalathu nool aga therigiathu. padal ay padika iyalukirathu vilalum theriyavillai. udavu virgal enral mail il inathu amupugiren.

SESHYA URPFR.ORG said...

Yagam articles are really nice and wonderful with best informations,
Thanks a lot,
Holy fire
Holy sound
Holy light are the only origin of ALL,
May I correct ?
Your universal soul loving friend,
Seshya urpfr. Org

Post a Comment