அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை”ஆரூடம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: , ,சித்தர்கள் அருளிய சோதிடம் தொடர்பாக முன்பே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இனி வரும் நாட்களில் அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் பற்றி பார்ப்போம். பாய்ச்சிகை என்பது மரத்தில் தயாரிக்கப் பட்ட நான்கு முகங்களைக் கொண்ட கட்டை ஆகும். இதில் முதன் மூன்று முகங்களில் முறையே 1,2,3 என்ற எண்ணும் நான்காவது முகத்தில் 6 என்ற எண்ணையும் இட வேண்டும்.

பாய்ச்சிகை ஆரூடத்தில் நுழைவதற்கு முன்னர் ஒரு சில தெளிவுகளை பார்ப்போம். பழந்தமிழர் வாழ்வில் எதிர்வு கூறல் எனப்படும் கலையானது பல வடிவங்களில் இருந்திருக்கிறது. அவை முறையே சோதிடம், நிமித்தம், ஆரூடம், ப்ரசன்னம் என்பனவாய் கூறப் பட்டிருக்கிறது.

சோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்கள் மற்றும் வின்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும். சோதியம் கூறுதல் என்கிற தமிழ்ச் சொல்லே திரிந்து மருவி சோதிடமானது.

நிமித்தம் என்பது காரணத்தினால் ஆகிற காரியங்கள் என்பதன் அடிப்படையில் கூறப்படுவது. இடி இடித்தால் மழை வருமென சொல்வதும், பசித்தான் உணவு தேவை என்பதான காரண காரியங்களின் நீட்சியே நிமித்தமாக சொல்லப் பட்டது. இதை மற்றொரு முறையில் சொல்வதானால் செயல் கணங்களின் அடிப்படையில் கூறுவது என்பர். இந்த செயல் கணங்கள் என்பதே காலப் போக்கில் திரிந்து செய்கணம், செகுனம் என மருவி சகுனமானது. சகுனம் பார்த்து காரியமாற்றுவதும், பலன் கூறுவதும் நிமித்தமேயாகும்.

ஆரூடம் என்பது ஒருவர் தனது பிரச்சினைகளைப் பற்றி கேட்க வரும் நேரம், அவர் அமர்ந்திருக்கும் திசை, அவரது உடல்மொழி, அந்த நிலையில் இருக்கும் கோள்களின் அமைப்புகளை வைத்து பலன் கூறுவதாகும். இதைத் தவிர சோழிகளை எறிந்து அவற்றை கணக்கிட்டும், பாய்ச்சிகளை உருட்டி அவற்றின் எண்களை வைத்து பலன் கூறுவதும் உண்டு. இந்த வகையில் அகத்திய மாமுனி அருளிய பாய்ச்சிகை ஆரூடத்தினைத்தான் இனி வரும் பதிவுகளில் காண இருக்கிறோம்.

பாய்ச்சிகை முறையில் மூன்று முறை பாய்ச்சிகையானது உருட்டப் பட்டு முன்று தடவையும் வரும் எண்களின் அடிப்படையில் பலன்கள் கூறப் படுகின்றன. பலன் கேட்க வருபவரை அமர வைத்து இந்த கட்டையினை மூன்று முறை உருட்டுவதன் மூலம் வரும் எண்களை குறித்து வைத்துக் கொண்டு அதற்கான பாடலைப் படித்து பலன் கூறிட வேண்டும். இந்த 62 பலன்கள் யாவும் நிலையானவை. கேட்பவரைப் பொறுத்தும், பலன் கூறுபவர் பாய்ச்சிகையை உருட்டும் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கான பலன் அமைகிறது. இந்த முறை “நிகழ்தகவின்”அடிப்படையிலாகிறது. இந்த நிகழ்தகவு முறை கணிதவியலில் தனியொரு பெரும் பிரிவாக இருக்கிறது.

இத்தகைய எதிர்வு கூறல் முறைகளின் நம்பகத் தன்மை மற்றும் சிறப்புகளை நிறுவுவதோ அல்லது விவாதிப்பதோ இந்த பதிவுகளின் நோக்கமில்லை. நமது முன்னோர்களின் சுவாரசியமான படைப்புகளை மீட்டெடுத்து சமகாலத்தவருக்கு பகிர்வதும் அதன் மீதான மேலதிக ஆய்வுகளுக்கு வாய்ப்பளிப்பதுமே இந்த பதிவுகளின் நோக்கம்.

இனி வரும் பதிவுகளில் அகத்தியர் அருளிய பாய்ச்சிகை முறைக்கான பலன்களைப் பார்ப்போம். இந்த முறையினை எவரும் பயன் படுத்திடலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இன்றைய பதிவு மிகவும் விறுவிறுப்பான பதிவு.தாங்கள் கூறும் பாய்ச்சிகை மகாபாரதத்தில் இடம் பெற்றது.சகுனி வைத்து விளையாடும் தாயக்கட்டை தான் என்று எண்ணுகிறேன்.ஆருடத்தில் நிறைய வகைகள் உள்ளன.இன்னும்,தமிழகத்தில் முகம் பார்த்து சொல்லும் ஆருடம் பிரபலமாக உள்ளது.தங்களது கட்டுரைகள் நிறைய கற்று தரும் என்று எண்ணுகிறேன்.


Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

பாலா said...

அன்புள்ள தோழி ,

அகத்திய மாமுனியின் படைப்புகள் அத்தனையும் உண்மை. தாங்கள் கூறும் பாய்ச்சிகையும் அப்படி தான்.

கடந்த ஆண்டு ,அகத்திய மாமுனியின் ஆருடம் புத்தகம் ஒன்று வாங்கி , விளையாட்டுக்காக தெரிந்தவர்களுக்கு ஆருடம் பார்த்தபோது வியந்து போனேன்.

வந்த முடிவுகள் அத்தனையும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

இராஜராஜேஸ்வரி said...

interesting.

RAVINDRAN said...

நன்றி

ip said...

Really mindboggling thozhi

yoghi said...

நல்ல பதிவு
தொடருங்கள்

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

VERY NICE THOZHI......

IM VERY PROUD THAT I FOUND UR BLOG TO READ SUCH EXTRAORDINARY ARTICLES......

DYENA
wisdomblabla.blogspot.com

Dr.Arul Amuthan said...

I found your blog today. Whether it is scientific or not, all those things are secondary. I appreciate your view about this. It is our ancient practice, has to be preserved.

Unknown said...

I am impressed on Aarudam and Agathiyar.
"Arukkanukkum Erukkanukkum minjiya mooli illai
" enru kooriyavar agathiar.
Why is other combinations involving numbers 4 and 5 are not there.
I could not fine it in the books as well.
Please reply to ramanan1949@gmail.com

Vel said...

I tried this first time but the combination is not matching in the book. so we have do till the combination match or how? please suggest

Post a Comment