சவிகற்ப சமாதி...

Author: தோழி / Labels:


கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று இரண்டாவது வகையான சவிகற்ப சமாதி நிலை பற்றி பார்ப்போம். இந்த சமாதி நிலை என்பது யோகத்தின் மிக உயர்ந்த நிலையாகும். வெறும் வார்த்தைகளால் இவற்றை விவரித்து உணர்த்துவதும், உணர்வதும் கடினமானது. இவை யாவும் உணர்ந்து அறிந்து அனுபவிக்க வேண்டிய அதி உயர்நிலைகள். எனவே எனது இந்த முயற்சியினை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் கருதிட வேண்டுகிறேன்.

வாருங்கள்!, சவிகற்ப சமாதி பற்றி கொங்கணவர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.


"ஆச்சப்பா சவிகற்பச் சமாதி கேளு
அடுத்தாக்கால் ரெண்டுவகை யதிலேயுண்டு
வாச்சப்பா சத்தானு வித்தையொன்று
வரிசையுடன் திரையவித்தைச் சமாதியொன்று
போச்சப்பா சத்தானு வித்தை மார்க்கம்
பெரியதொரு தத்துவலய சமாதிக்குள்ளே
ஓச்சப்பா சத்தங்கள் பட்சியோசை
வுன்மனத்தே படுகிறது உயிர்ப்புக்கேளே"


- கொங்கணவர் -

"கேளப்பா சத்தானு வித்தையென்றுங்
கெடியான சவிகற்பச் சமாதியென்றும்
வாளப்பா திரிசானு வித்தைமார்க்கம்
வகைசொல்வே னன்றாகக் கேளுமக்காள்
நாளப்பா நின்றநிலை சமாதிக்குள்ளே
நலமாகத் தன்னையனு சந்தானித்துத்
தாளப்பா சஞ்சரிக்கில் திரிசானு வித்தை"


- கொங்கணவர் -

உயர்வான இந்த சவிகற்ப சமாதியானது நேற்றைய பதிவில் நாம் பார்த்த தத்துவலய சமாதி நிலையின் மற்றொரு வடிவாகக் கூறுகிறார். இந்த சுவிகற்பச் சமாதி இரண்டு வகைகளாக கூறப் படுகிறது. அவையாவன “சத்தானு சமாதி”, “திரைய சமாதி” என்கிறார் கொங்கணவர்.

தத்துவலய சமாதி நிலையில் இருக்கும் போது தன்னுள்ளே பட்சியின் ஓசை எழும்புவதை உணர்ந்து அதில் லயப்பட்டிருப்பதே சத்தானு சமாதி எனப்படுமாம்.

தத்துவலய சமாதி நிலையில் தன்னைத் தானே அனுசந்தானம் செய்து நிற்றலே திரைய சமாதி என்கிறார்.

நாளைய பதிவில் அடுத்த இரு சமாதி வகைகளான “நிருவிகற்ப சமாதி” மற்றும் “அகண்டவிர்த்தி சமாதி” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

Guruvadi Saranam said...

Thozi,

Arumai.

Vazthukkal!

Nandri,
S.Rajendran
Bangalore.

tamilvirumbi said...

Dear Thozi,
After a long time,I am coming here to blog my comments.I have gone through your earlier blogs about samathi.The explanation given by you is so wonderful.I am sharing my thoughts with you about SAVVIGARPA SAMATHI.Savvigarpa Samathi(Visualization of spiritual happenings with conscience of the self - Presence of the Psyche): Knowing the greatness of vital spots and exercising the breath practice in the advised manner, one will attain the inner sanctum and see the spiritual light within himself; on such an occasion, if he cares to proceed further in that line, one day, he will overcome the mischievous influence of the mind, the administrator of all sensual organs and experience the lustrous space that is within the head and travel among it, witnessing the incredible happenings therein (like a third person). He will visualize everything like a spectator, because he will have the perception of his astral-self also. But, still this amazing scenario will toll his attraction for quite some times.This stage of dreamy style samadhi is termed as Savigarpa Samaadhi.It is explained well in AGATHIYAR SOWMIYA SAGARAM-1200.It is coming in the verse bearing no:311

Elangai Tamilan said...

தோழி ,
வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.தாங்கள் ,ஒரு எடுத்துகாட்டுடன் புரியவைத்தால் ,எளிதாக இருக்கும்.
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

RAVINDRAN said...

நன்றி

manic said...

ஒரு சிறிய வேண்டுகோள்... உங்களது படைப்பு ஓர் பொக்கிஷம் ....
உங்களது படைப்புகளை Backup எடுத்து வைக்கவும்... திருடர்கள் அதிகம் உலவுவார்கள்... ஜாக்கிரதை ஜாக்கிரதை...

Ramesh said...

வெகு நாட்களாய் இறைவன் சிவன் இன் திருவடிகளை பற்ற ஆசை ,ஆனால் என்னோ இந்த உலக பந்த பாசம் என்னை சிற்றிம்ப உலக ஆசைக்குள் நான் ஏலுந்து வரா வண்ணம் பினைத்து விட்டது. நீங்கள் எழுதும் சதுரகிரி மலை பற்றிய கட்டுரை இறைவன் சிவன் இன் மேல் பற்றை அதிக படுத்துகின்றன
கருணை கொண்டு சதுரகிரி மலைக்கு எப்படி செல்வது என்று சொல்ல வேண்டும் ......

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

Post a Comment