தத்துவல்ய சமாதி...

Author: தோழி / Labels:


கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” நூலில் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று முதல் வகையான தத்துவல்ய சமாதி நிலை பற்றி பார்ப்போம்.

"தானான சமாதியாறு குணத்தைக் கேளு

தத்துவல்ய சமாதியொன்று சாற்றுவேன்யான்

கானான தத்துவங்காண் முப்பதாறுங்

கலந்தூத பௌதிகத்தைச் சூட்சுமதத் திலடக்கி

நானான சூட்சுமத்தை யழித்து நன்றாய்

நம்பெரிய வரசனைப்போ லாக்கின் மைந்தா

வானான காரணமாஞ் சரீரத்தில டக்கி

மருவியதைப் பிரகிருதி யிலே மருவப் பண்ணே"


- கொங்கணவர் -

"பண்ணினதோர் புருடனையுந் திட்டான்பான
பரவிநின்ற சைதன்ய மாகக் கண்டு

கண்ணினதோர் கர்த்தனிக ரழித் தொன்றேயாகிக்

காற்றசையா வறையினின்ற விளக்குப் போல

ஒண்ணினதோ ரலைச்சலற் றேயகண்டந்தானா

யொன்றாலு மலைச்சலற்றுத் தானே தானாய்

பண்ணினதோர் கரைதனித்து ஒன்றே யாகிப்

பந்தமற்றது தத்துவலய சமாதி யாச்சே
"

- கொங்கணவர் -

இருக்கிற எல்லாவற்றிற்கும் சாட்சியாக நாமே சீவனாகவும், பிரபஞ்சமாகவும், உள்ளாகவும், வெளியாகவும் நிற்கிறோம். மேலும் சங்கற்பம், விகற்பம் போன்றவைகளை கடந்து ஆதிகாரணமாக ஞானமாகவும் நிற்கிறோம். இது போலவே மாயையாகவும், முக்காலமாகவும் ஆகாசம் போல் எங்கும் பரவி நிறைந்து நிற்கிறோம்.

இப்படியான முப்பத்தாறு வகை தத்துவங்களைக் கொண்ட இப்பௌதிக தேகத்தை சூட்சுமத்தில் அடக்கி, அந்த சூட்சமத்தை அழித்து அதனை காரணத்தில் அடக்கி, இந்த காரணத்தை மூலப்பிரகிருதியில் லயப்படுத்தி, அப்பிரகிருதியை சுத்த சைதந்யமாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் உணர்ந்து கொள்வதுடன் எல்லாம் என்று தெளிந்து அனைத்து பந்தங்களையும் அகற்றி நிற்பதே தத்துவல்ய சமாதியாகும்.

கொஞ்சம் சிக்கலான விளக்கம்தான்... இதனை எளிமைப் படுத்தி எழுதினால் நான் என்பதை கரைத்து, தாமே எல்லாவற்றிலும் நிறைந்தும், மறைந்தும் நிற்பதை உணர்ந்த ஒரு உயர் நிலையாக கூறப் படுகிறது.

நாளைய பதிவில் அடுத்த சமாதி நிலையான சவிகற்ப சமாதி பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

RAVINDRAN said...

தோழியே,

எல்லாவற்றிற்கும் சாட்சியாக நாமே சீவனாகவும், பிரபஞ்சமாகவும், உள்ளாகவும், வெளியாகவும் நிற்கிறோம்.

சங்கற்பம், விகற்பம் போன்றவைகளை கடந்து ஆதிகாரணமாக ஞானமாகவும் நிற்கிறோம்.

இது போலவே மாயையாகவும், முக்காலமாகவும் ஆகாசம் போல் எங்கும் பரவி நிறைந்து நிற்கிறோம்.

நன்றி

பாலா said...

அன்புள்ள தோழி ,

அருமையான ஆரம்பம் . 36 வகை தத்துவங்களை கூறினால் ரொம்ப உபயோகமாக இருக்கும்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

jagadeesh said...

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா...

Elangai Tamilan said...

தோழி,
மிக்க நன்றி, தோழி.இக்கருத்து சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது.ஆனால் இதன் சாராம்சம் என்னவென்றால் , மொத்தத்தில் ,அத்வைத கருத்தை ஒத்துள்ளது.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

தோழி,
மிக்க நன்றி, தோழி.இக்கருத்து சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது.ஆனால் இதன் சாராம்சம் என்னவென்றால் , மொத்தத்தில் ,அத்வைத கருத்தை ஒத்துள்ளது.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

very interestingly.

VELU.G said...

நல்ல விளக்கம் தத்துவல்ய சமாதி பற்றி

Post a comment