அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும், மின்னூலும்!.

Author: தோழி / Labels: , , ,

6,3,1.

பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு


உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.

6,3,2.

ஆச்சப்பா நல்லகாலம் அப்பனே வருகலாச்சு
தாஷிதானில்லையாறும் தனிமூன்றும்ரெண்டும் வீழ்ந்தால்
போச்சப்பா கவலையெல்லாம் போனெதோர் பொருளும்சேரும்
மாஷியாய் வாழ்வாய் நீதான் மக்களை பெற்றுகந்தே


ஆறும் மூன்றும் இரண்டும் வீழ்ந்திருக்கும் இந்த அமைப்பு உனக்கு நல்ல காலம் வருவதை குறிக்கிறது. பொன்னும் பொருளும் சேர புத்திர பாக்கியத்துடன் நிறைவாய் வாழ்ந்திடுவாய் என்கிறார் அகத்தியர்.

6,3,3.

அந்தோவுன் கிரகமெல்லாம் ஆச்சுதுநீசமாக
சந்தோஷம் மழியாமலாகும் தனித்தாறு மிருமுன்றுமானால்
நிந்தைகள் மிகவுண்டாகும் நிஷ்கடூரக்காரனாகும்
வந்தநோய் வைத்தங்காட்டும் வலிசண்டை பலவுண்டாமே.


பாய்ச்சிகை உருட்டலில் முதலில் ஆறும் அடுத்தடுத்து இரு முறை மூன்றும் விழுந்திருப்பது உனக்கு கெடுதலையே தரும். அவப் பெயரையும், குடும்பத்தினர் ஆதரவை இழக்கவும் வைக்கும். வலுச் சண்டைகளும்,நோயினால் கடுமையாக பாதிக்கப் படும் வாய்ப்புகள் உண்டு என்கிறார்.

6,3,6.

புலவித கவலைவேண்டாம் பகர்ந்தாறும் மூன்றாறானால்
நலமது மிகவேயுண்டு நம்பியதெல்லாம் லாபம்
கலகங் ளொழிந்து போகும் கங்கண ப்ராப்தமாகும்
வலப்பக்க மச்சம்காணும் வர்த்தகம் விர்த்தியாமே.


ஆறும் மூன்றும் ஆறும் விழுந்ததால் இனிக்கஷ்டமென்ற கவலையே வேண்டாம். எண்ணிய எண்ணம் நிறைவேறும். கலகம் ஒழிந்து களிப்பு பெருகிடும். வலது பக்கத்தில் இருக்கும் மச்சத்தினால் உனக்கு அதிர்ஷ்டங்கள் உண்டு என்கிறார் அகத்தியர்.

6,6,1.

விர்த்தியாய் நிலஞ்செழிக்கும் நீரதுசுரக்கும் கேணி
தற்போது ஈராறொன்றால் தழைத்துமே செழித்துவாழ்வாய்
அற்பமாய் நினைத்திடாதே அகஸ்தியா வாக்கியத்தை
சொற்படி யெல்லாம் நடக்கும் சுடடிராளி முருகன்சாக்ஷி.

உனக்கு ஈராறும் ஒன்றும் வந்ததால் உனக்கு விளைச்சல் பெருகி அதனால் செழித்து வாழ்வாய். இந்த வாக்கினை அற்பமாய் நினையாதே இதற்கு முருகப் பெருமானே சாட்சி என்கிறார்.

6,6,2.

சாக்ஷியே சாதிப்பாகும் சங்கடம் மிகவேநேரும்
சூக்ஷியாய் துரோகம் செய்வர் ஈறாதுமிரண்டும் விழ
மாகடஷிசேர் தொழிலும் போகும் மக்கட்கு பீடைகாட்டும்
ஆக்ஷியாய் எல்லாம் நஷ்டம் அகஸ்தியருரைத்தவாக்கே.


ஈராறும் ஓன்றும் விழுந்ததால் துயரமே மேலிடும். துரோகங்களை சந்திக்க நேரிடும். தொழில் சிதையும்.குடும்பத்தினருக்கு நோய் நொடி உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

6,6,3.

வாக்கது தப்பாதப்பா விழுந்த நீராறுமூன்றும்
போக்கிய தொழிலும் செல்வம் ஜீவனும் வந்துசேரும்
பாக்கியம் மிகவும் பெற்று பலவித மேன்மையாவாய்
நோக்குவாய் மூதோர்வாக்கை நம்பி நீ வாழ்குவாயே.

உனக்கு ஈராறும் மூன்றும் விழந்ததால் கைவிட்டுப்போன தொழில், செல்வம் மீள வந்து சேரும். பிரிந்தவர்கள் தேடி வருவர். எல்லா வகையான நன்மைகளையும் பெற்று மேன்மையடைவார் என்கிறார் அகத்தியர்.

6,6,6.


வாழ்வைக் கெடுக்க வேதான் வங்சகர் கூடஞ்சேரும்
தாழ்வுகள் மிகவேநேரும் தனிவுள மூவாறானால்
சூழ்வினையாலே உந்தன் செல்வாக்கு மழிந்துபோகும்
பாழ்பட கிரகமெல்லாம் பகையாச்சு அஞ்சிடாதே.


பாய்ச்சிகை உருட்டிட மூன்று முறையும் ஆறு விழுமாயி அது உனக்கான நல்ல கிரகங்கள் எல்லாம் பகையாகி நிற்கிறது என்பதாகும். உன்னை வீழ்த்த வஞ்சகர் கூட்டம் காத்திருக்கிறது. முன்வினையினால் உனது செல்வம் அழியும். கீழான நிலைக்கு தள்ளப் படுவாய். அஞ்சிடாதே என்கிறார் அகத்தியர். அதனால் தாழ்வுகள் ஏற்படும், செல்வாக்கும் அழியும், பலவித சேதமுண்டாகும் என்கிறார் அகத்தியர்.

கடந்த ஐந்து நாட்களாக வெளியான பதிவுகளை மின் நூலாக்கி இருக்கிறேன். இந்த இணைப்பில் தரவிறக்கி கொள்ளவும்

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

கண்ணதாசதாசன் said...

"
அகத்தியர் செய்துவைத்த
அழகான ஆரூடம்
பாய்ச்சிகை அதில்புத்தி
பாய்ச்சி கை நீரைஅள்ளி
வேய்குழல் கீதமென்றே
வழங்கினீர் உயிர்களுக்கு
வாழ்கஉம் தொண்டுவாழ்க!
வளர்கஉம் மனதைப்போலே!
"

Lakshmanan said...

Thozhi

The song for 3,1,6 missed in your e-book.

Thanks you so much for the e-book compilation.

Regards
T.Lakshmanan

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய பதிவில் தாங்கள் பகிர்ந்து கொண்டது மிக்க நன்றி.எனக்கு விமர்சனம் செய்வதற்கு எந்த
குறைகளும் தோன்றவில்லை.மிக்க நன்றி.



Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

தோழி said...

@Lakshmanan

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி..

தவறைச் சரிசெய்து மீண்டும் இணைத்துள்ளேன்.. நண்பர்கள் சிரமம் பாராது மீண்டும் தரவிறக்கிக் கொள்ளவும்..

RAVINDRAN said...

நன்றி

இன்பம் துன்பம் said...

இவளவு சிறிய வயதில் முதிர்ந்த கருத்துகளை பார்க்கும் பொது நான் என்வாழ் நாள் முழுவதையும் வின்னக்கிவிடோமோ என்று எண்ணுபோது மனது மிகவும் வலிகிறதுவாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்
subburajpiramu

Post a Comment