300 வயதுவரை வாழவைக்கும் ஹோமம்?

Author: தோழி / Labels: ,

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.

ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

"அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"


- அகத்தியர் -

அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.

தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

நம்ம்பிக்கையும், ஆர்வமும், அவசியமும் உள்ளவர்கள் குருவருளை வேண்டி முயற்சித்துப் பார்க்கலாமே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

balaji said...

அருமையான பதிவுகள் தோழி. உங்களால் இன்று பலர் நன்மை அடைகிறார்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு

பாலா said...

அன்புள்ள தோழியே,

பல நூறு ஆண்டுகள் வாழ வகைசெய்த நமது முன்னோர்களை நினைத்து
என்ன கூறுவது.

சத்தியமே அகத்தியம் . அகத்தியமே சத்தியம்.

பாலா

B.பாஸ்கர். said...

வணக்கம்



தோழி , நல்ல உறவு, தங்களது பதிவுகளும் மிக மிக அருமையான பதிவுகள், உண்மையாகவே மிகவும் சிரமப் பட்டு தகவல் சேகரிக்கிறீர்கள், அவைகளை தாங்களே ரகசியம் காக்காமல் வெளியிடுவதே தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது, மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சிறந்த பலன்களைத் தரும் எளிய அனைவரும் செய்யத தகுந்த ஹோமம் பற்றிக் கூறியதற்கு நன்றி தோழி.
http://jaghamani.blogspot.com/2011_03_29_archive.html#3916556524971775813
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி.
தரிசித்து தங்கள் கருத்தை எதிர் நோக்குகிறேன்.

tamilvirumbi said...

Dear thozi,
I convey my abundant thanks to you.You are doing a yeoman service to the Tamils mankind.Nowadays,with the help of medicine,humans are procrastinating their death up to 100 years.The way you have enunciated will make the mankind to live upto 300years in this kaliyuga.I have given out some doubts about homams.Would you be able to clarify it? I did 3 homam with vishnu sahastranaam and have few doubts.

1. I give 108 aahuties with Vishnu sahatranaam, in my daily puja i used to read narayan kavachh so how do i add in my homam - should i give ahuti after each line or simply read as a prayer and give a final aahuti.

2. While giving aahuties I mainly give til ahutii, but for fire management issue
can I offer ghee/coconut pieces as ahuti in between or simply just like that with swaha

3. After poorahuti and one drop of ghee to fire, can we add more ghee later if there is smoke.

jagadeesh said...

இதில் பிரம்மத்தை(ஞானம்) உணர்வதால், காய சித்தி ஏற்படுத்தி 300 வருடங்கள் வாழலாம் என்றிருக்கும் என நினைக்கிறேன். யாரவது ஒரு ஹோமமாவது செஞ்சு உங்க அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்களேன்..

Praveen Kumar said...

நல்ல தகவல் , நன்றி

usha said...

Dear thozhi
Pathivugal arumai.Padithavudan ethai patriya sinthanaiye anru purauum erukkirathu.Please karuvurar patri niraya sollavum.Nanri.

RAVINDRAN said...

நன்றி

Post a Comment