சமாதி நிலை - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: , ,

சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.

இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.

"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"

- திருமந்திரம் -

"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"


- திருமந்திரம் -

இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.

அவையாவன...

தத்துவல்ய சமாதி

சவிகற்ப சமாதி

நிருவிகற்ப சமாதி

அகண்டவிர்த்தி சமாதி

சஞ்சார சமாதி

ஆரூட சமாதி

இனிவரும் பதிவுகளில் இவற்றைத் தனித்தனியாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

சிட்டுக்குருவி said...

arumai!

பாலா said...

அன்புள்ள தோழி ,

அருமையான பதிவு. தங்களின் கருத்து சரியே,

சும்மா கண்ணை மூடிக்கொண்டு இருத்தல் அல்லது திறந்து கொண்டு இருத்தல் இதுவெல்லாம் சமாதி ஆகாது.

எமக்கு தெரிந்த பாடலில் ..

பத்திரகிரியார் மெய்ஞானப்புலம்பலில்...

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து
"தூங்காமற் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்? "

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
"செத்த சவம்போற் றிவதனி எககாலம் ?"

சாவாமல் செத்திருந்து சற்குருவின்பொன்னடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதுமெக்காலம்?"


http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி.ஆனால் சமாதி நிலையை நாம் எப்படி அடைய? நமக்கு ,குருவருள்
கிடைப்பதற்கு திருவருள் துணை புரிய வேண்டும் ,தோழி.கணியன் பூங்குன்றனார் கூறியது நினைவு வருகிறது.தீதும் நன்றும் பிறர்தரவாரா
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

skarthee3 said...

அன்புத் தோழிக்கு, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில், இந்த வலைத்தளம் மூலம் பல்வேறு விதமான அரிய செய்திகளை எங்களுக்கு அளித்துக்கொண்டிருப்பமைக்கு மிக்க நன்றி. எங்கள் வீட்டில் இந்த சித்தர் நூல்கள் இருந்திருந்தால் இந்த அளவிற்கு அழகாக பதிவிடுவோமா என்பது சந்தேகம் தான்.
இதன் மூலம் தங்கள் மருத்துவப்பணியை ஓசையில்லாமல், மறைமுகமாக முன்பே தொடங்கி விட்டீர்கள்!! வாழ்த்துக்கள்!!

Unknown said...

THOLI, PADANCHALI YOGA SUTHRAM IS ONE OF THE
BEST BOOK I HAVE EVER READ AURTHER
MR. SWAMY THE EXPLANACTION ARE VERY
EASY, EVERY ONE MUST READ THIS BOOK.
THANKS TO YOU, K.AMIRSULTAN,RIYADH,KSA

Post a comment