"தன் வினைதான் தன்னைச் சுடும்."!!

Author: தோழி / Labels:

"எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.

ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார்.

"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார்
சிந்தை தெளிந்திலரேகுதம்பாய்
சிந்தை அதளிந்திலரே."

- குதம்பைச் சித்தர் -

"பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால்
வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."

- குதம்பைச் சித்தர் -

“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் குதம்பைச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

ஐங்கரன் said...

தோழி,

பதிவிற்கு நன்றி.

இதையே விவேகானந்தரும் கூறி இருக்கிறார்.

பாலா said...

அன்புள்ள தோழி ,

தங்களின் பதிவு மிக அருமை,

அகப்பேய் சித்தரின் பாடலில் ஒன்று

தன்னை யரியவேனும் அகப்பேய்
சாராமற் சாரவேணும்
பின்னை யறிவதெல்லாம் அகப்பேய்
பேயறிவு வாகுமடி ...

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Soundarraju said...

Nalla Pathivu

Elangai Tamilan said...

அன்பு தோழி,
இன்றைய பதிவு நெற்றிபொட்டில் அறைந்தது போல் உள்ளது.ஏனன்றால்,சில சமயங்களில் ,நம்மை
அறியாமலே சில இடர்கள் வரும்பொழுது வினையி பற்றி எண்ண தோன்றுகிறது.ஆனால் ,கலியுகத்தில் ,வினைபயனை ,அவ்வபொழுதே அனுபவிக்க நேரிடும் என்று
பாகவதம் கூறுகிறது.மிக்க நன்றி .சைவ சித்தாந்த கருத்தை மிக எளிமையாக கூறியது குறித்து மீண்டும் ஒரு முறை எனது நன்றிகள்.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா
தன் வினை தன்னைச் சுடும்
உப்பு தின்றவனே தண்ணீர் குடிப்பான்
கண்கூடாகக் காண்கிறோமே......

முகவை மைந்தன் said...

தீதும் நன்றும் பிறர்தர வாரான்னு
சொன்னவருஞ் சித்தர் தாமோ குதம்பாய்
சொன்னவருஞ் சித்தர் தாமோ

எவர்க்கு முன்னே எவரென்று யாரறிவார்
வெந்த சாம்பலைப் பார்த்தா குதம்பாய்
வெந்த சாம்பலைப் பார்த்தா

குருவருள் நிறைந்த குருடரை உலகிற்
கும்பிட்டுத் தொழுவரோ குதம்பாய்
கும்பிட்டுத் தொழுவரோ

chandru2110 said...

good post.

RAVINDRAN said...

தோழியே,

மிகப் பெரிய ஐயத்தை போக்கி விட்டீர்கள்.

மிக்க நன்றி.

raj said...

Raju,
neenda nalaaga oru kuzapamagave irundu vandadu. indru vidai kanden. mikka nandri.
vazga valamudan.

Ravi kumar Karunanithi said...

good post...

Unknown said...

Unmai. Immai perumaikkum aenai sirumaikkum avaravar karymamae kattalaikkal....

Unknown said...

@Elangai Tamilan
Murugappan Guhan sila samayam kali yugathil saitha karma vinaigal udanaeyae anubavikka thevai illai.
Udharanamaga, naam indrum samoogathil pala periya arasiyal pulligalai paarkirom. Pala Kolaigal, aniyayangal... aanaal avargal raja pola vaazhgirargal. Sattamum kannai moodi kondu vidugiradhu. Idharku karanam, avargaludaiya pona jenma nal vinai payan irukkum varai ithagaiya nalla nigazhvugal (nalladha?) thappithal irukkum. Vazh naal mudivil, alladhu adutha jenmathil avargalin nilaimai paavamaga irukkum.

Idhai mudivu saibavar iraivanae andri nammudaiya arivu illai.

Thozhikku ennudaiya vanakkam pala.

Appuvijay said...

Nanri thozhi.......

Inquiring Mind said...

இதில் எனக்கு ரொம்ப நாளாவே குழப்பம் உள்ளது.. பிள்ளை பிறந்தவுடன் பெற்றோருக்கு பாதிப்பும்/ மேன்மையும் வருகிறது என்பது சோதிட சாஸ்திரத்தில் இருக்கிறதலல்வா?

அதோடு, ஒரு தகப்பன் செய்யும் தவறில் குடும்பமே பாதிக்கிறதல்லவா?

பாண்டிய மன்னன் செய்த பாவத்திற்கு மக்கள் ஏன் பலியானார்கள்?

Post a comment