முக்திக்கு நாலு வழி!, அவை....

Author: தோழி / Labels:

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப் படுகிறது.இந்த முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள் இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும் முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் நூலில் பின் வருமாறு கூறுகிறார்.

"தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்த நற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல் யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே"

- சிவவாக்கியர் -

"சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே"

- சிவவாக்கியர் -

சரியை

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

யோகம்

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.

ஞானம்

நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Unknown said...

அருமை! நன்றி!

Vijayasankar Ramasamy said...

hi first thank you for your service.I appreciate your work at this age particularly from EELAM.

Keep continue to the journey of wisdom.

Thanks
sankar,chennai

பாலா said...

அன்புள்ள தோழி ,

அருமையான விளக்கத்துடன் உங்கள் பதிவு அமைந்துள்ளது.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

VELU.G said...

நல்ல விளக்கம்


ஆழ்ந்த கருத்துக்கள்

Elangai Tamilan said...

தோழி,
வணக்கம் .தங்களின் இன்றைய பதிவு மிகவும் நுட்பங்களை கொண்டது.சனகாதி முனிவர்களுக்கு
சமிகையலே ,இந்த சரியை ,கிரியை ,யோகம் ,ஞானம் போதித்தவர் சிவபெருமான். நாமும் இந்த நால் வகை முக்தியை பெற ,எல்லாம் வல்ல வேதபூஜயனே வணங்குவோம் .மிக்க நன்றி
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

வசந்தா நடேசன் said...

ம்ம்ம், தொடர்கிறேன்..

ஐங்கரன் said...

தோழி,

நான் தற்போது புதிதாக உங்கள் வலைத்தளத்திற்கு வருவதால், முன்னைய பதிவு தொடர்பான ஒரு ஐயம்.
"தலையில் முடி வளர்தல் " தொடர்பான பதிவில் வரும் கையாகந்தகரை, குன்றிமணி என்பவற்றின் ஆங்கிலப் பெயர்களை தயவு செய்து அறியத் தரவும் ?

ஐங்கரன்
அவுஸ்ரேலியா.

ஐங்கரன் said...

Thank you for doing this wonderful job ...

RAVINDRAN said...

நன்றி

sakthi said...

நல்ல பதிவு தோழி

Unknown said...

in short very nicely explained. While Reading this there is an attitudinal submissive santhi pervaded. Om Sadhars To guide us to immortality Saujyam.

Unknown said...

EVERY ONE BORN IS born for understanding that he is PURE SUPER CONSCIOUSNESS and failure to unearth it within the body and wasting life time is a waste similar to goast in its intelligence ( ADVAIDA saying) In Tamil: Thannai than arivadhey ARIVU; matradhellam PAYIARIVU.

Post a comment