நன்றி நண்பர்களே!, நாம் இரண்டாம் ஆண்டில்...

Author: தோழி / Labels:

400 பதிவுகள், 6,50,000 த்துக்கும் அதிகமான பார்வையிடல்கள், 786 நண்பர்கள் பின் தொடர, இன்று சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவு தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என் மாதிரி மிகச் சாமான்யமான ஒரு பதிவருக்கு முதலாம் ஆண்டின் முடிவில் இவையெல்லாம் மிக பிரும்மாண்டமான புள்ளிவிவரங்கள். குருவருளின் துணை மற்றும் உங்கள் அனைவரின் மேலான ஆதரவோடுதான் இத்தனையும் சாத்தியமாயிற்று. நன்றி நண்பர்களே!

சினிமா விமர்சனம், அரசியல் வம்புகள், எமது மக்களின் வலியான பக்கங்கள் என சமகால கூறுகள் ஏதும் இல்லாமல், துறை சார்ந்து, ஒரே தலைப்பில் தினமும் தொடர்ந்து எழுதுவதில் நிறையவே நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கல்லூரி படிப்புக்கு பங்கம் வராமல், வார இறுதியில் அடுத்த வாரத்திற்கான பதிவுகளை யோசித்து, முழுமையாக தயார் செய்து பதிவேற்றுவது அநேகமாய் நான் மட்டுமாகத்தான் இருக்கும். இந்த இடத்தில்தான் குருவின் மேலான வழிகாட்டுதல் எனக்கு இருந்ததாக நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் என்னிடமிருந்த் தகவல்கள் அனைத்தையும் வலையேற்றி விடவேண்டும் என்கிற வேகம் மட்டுமே இருந்தது. அதன் பொருட்டே ஒரே நாளில் இரண்டு மூன்று பதிவுகளெல்லாம் வலையேற்றினேன். அப்போது இந்த பதிவுலக சூட்சுமங்கள் ஏதும் தெரியாவளாகவே இருந்தேன். ஆனந்த விகடன் பத்திரிக்கைதான் எனக்கான ஆரம்ப வெளிச்சத்தை காட்டினார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். அதன் பிறகே பலரும் தொடர்ந்து வாசிக்கவும், பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல நிறைய ஹிட்ஸ் வேண்டுமென ஆசைப் பட்டதால், இருக்கிற எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை இனைத்தேன். அதனால் கணிசமாக புதியவர்கள் பலருக்கு எனது பதிவுகள் அறிமுகமானது. ஒரு கட்டத்தில் பதிவுலக அரசியல் மற்றும் அதற்கான சமரசங்கள் எனக்கு சரிவராது என தோன்றிய போது அத்தனை திரட்டிகளில் இருந்தும் விலகிவிட்டேன்.எனது நோக்கமெல்லாம் நம் முன்னோர்களின் அரும்பெரும் தகவல்கள் நிறைய பேருக்கு போய் சேர்ந்திட வேண்டும் என்பதாகவே இருந்தது,இப்போதும் இருக்கிறது.

ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை மெனக் கெட்டு புத்தகங்களுக்கு கொண்டு வந்த பெரியவர்களை நமக்கு இன்று தெரியாது. ஆனால் அவர்கள் செய்த அந்த பணியின் மகத்துவம் எத்தகையது என்பதை இன்றைக்கு நம்மால் உணர முடிகிறது. அவர்கள் வழியில் இந்த தகவல்களை அடுத்த கட்ட ஊடகமான மின்னூடகத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்பதே என்னுடைய முதலும் கடைசியுமான நோக்கம். கடந்த வருடத்தில் சித்தர்களின் பாடல்களை ஒன்பது மின்னூல்களாய் தொகுத்து இங்கே பகிர முடிந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் மேலும் சில மின்னூல்களை பொதுவில் வைத்திட முயற்சிக்கிறேன்.

இலங்கை மண்ணை தாண்டியறியாத எனக்கு இந்த ஓராண்டில் உலகம் முழுவதும் அருமையான பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் என்பதை இந்த கணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த நண்பர்கள் தரும் ஊக்கம், உற்சாகம்தான் தொடர்ந்து எழுதிட வைக்கிறது. இந்த பதிவின் வளர்ச்சியில் அவர்களின் அக்கறையும், ஆலோசனைகளும், கருத்துக்களும் பெரிய அளவில் பங்களித்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

மீண்டும் ஒரு முறை, எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியையும்,வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய தொடர்ச்சியான அன்பு,அக்கறை, ஆலோசனை,ஒத்துழைப்பு ஆகியவையே என்னை தொடர்ந்து எழுதிடச் செய்திடும்.

நட்புடன்,

தோழி.

கடந்த ஒரு வருடத்தில் இந்த வலைப்பூவின் வளர்ச்சியைக் காட்டிடும் வரை படம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

38 comments:

Unknown said...

வாழ்த்துகள்!

chandru2110 said...

பெரும் பிரயத்தினத்தின் பலனால்,
மலை போல் பொழிந்த பாடல்களையும் அதனூடே வீரிட்டு எழுந்த தமிழ் சுவையையும் இதற்குள் சிம்மசனமிட்டுருந்த கருத்தினையையும் கண்டு அளவளாவி மகிழ்ந்து எத்தணிகின்றேன்
இந்த இனிய பயணம் என்றும் தொடர. ..
என் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்.என்னுடை நட்பும் ஆதரவும் என்றும் நிலைக்கும்
மகிழ்ச்சியுடன்.

Unknown said...

தொடர்ந்து எழுதுங்கள்! அனைத்தும் பயனுள்ள அரிய தகவல்கள்! தங்கள் சேவை பதிவுலகிற்குத் தேவை!

சுவாமிநாதன் said...

வாழ்த்துக்கள், உங்கள் பணி மேமேலும் வளர்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து."
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் எழு பிறப்புக்களிலும் அவனைப் பாத்காக்கும் சிறப்புடையது ஆகும்.

என்றும் தோழமையுடன்
சுவாமிநாதன். மோ
மதுரை

Shiva said...

குருவருளும், எடுத்துக்கொண்ட உயர்வான தலைப்பும், உங்களின் அயராத உழைப்பும், இனிமையான தமிழ் நடையும், உற்ற நண்பர்களுமே - உங்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம். பணியை தொடருங்கள் .
வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துகள் தோழி

பாலா said...

அன்புள்ள தோழியே ,

"குருவின் அருளின்றி திருவருள் கிடைக்காது "-
"தோழியின் பதிவின்றி உறக்கம் கிடையாது"

தங்களின் ஓராண்டு பதிவுகளை கண்டு வியக்காதவர்கள் யாரும் இவ்வுலகில் கிடையாது.
எல்லாம் குருமுனியின் ஆசியினால் தான்.

தங்களின் சித்தர் பணி பல ஆண்டுகள் தொடர வாழ்த்தும் ...


சித்தர்களின் பாத கமலங்களில் ....
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

dowsarpaandian said...

வாழ்க வளமுடன்!

குருவருள் மற்றும் திருவருளுடன் உங்கள் சேவை வளர என் வாழ்த்துக்கள்!
உஙகள் பதிவுகளை தவறாமல் படிக்கிறேன்! உண்மையான இராஜ்ஜியம், சித்தர்கள் இராஜ்ஜியம்தான்! வாழ்க! வாழ்க! வாழ்க!

ஓம் சிவ சிவ சிவ ஓம்!

என்றும் அன்புடன்!
சகோதரன்.

சேலம் தேவா said...

சித்தர்களின் அருளால் உங்கள் சீரிய பணி தொடரட்டும்..!!

இராஜராஜேஸ்வரி said...

தாங்கள் எடுத்த பணியை பல சிரமங்களுக்கு மத்தியிலும் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்..!

Ramesh said...

வாழ்த்துக்கள்!. இப்படிப் போட்டு முடக்கம் செய்வதில் தான் தனி சுகமே இருக்கு..

Ramesh said...

இதுவே கடைசி வருசமாகவும் இருக்கட்டும்.

Unknown said...

மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

அருட்சிவஞான சித்தர் said...

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு அரும்பாடுபட்ட அருட்தோழிக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள்.
ஒருமித்த கருத்துடையர்வகள் ஒன்றுசேர்வார்கள் என்பது ஆன்றோர்களின் வாக்கு. அதேபோல் உங்களின் சித்தர்களின் இராச்சியம் வலைப்பதிவில் தாங்கள் பதிவிட்டுவரும் சித்தர்கள் தொடர்பான விடயங்கள் அனைத்தும் தங்களைப்போன்ற கருத்துடைய அனைவருக்கும் மிகத் தேவையான விடயங்கள் ஆகும்.
தங்கள் அருட்பணியை தொடருங்கள்.

அன்புடனும்,ஆசியுடனும்
பா.முருகையன், வடலூர்.

மு.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

Dear Thozhi,

Congradulation and wish you all the best for your future articles.God bless you my friend.Keep it up.

Vazhga Valamudan,

Agamudali.

சின்னப்பயல் said...

வாழ்த்துக்கள் தோழி,,,!

PALANI said...

i like very much SIDHARKAL RAJYAM... thank you for your writing

pls continue.... it's god's gift for us

BY A.PALANI, THOOTHUKUDI

RAVINDRAN said...

தோழியே,

உங்கள் பனி மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துக்கள்.
மிகுந்த நன்றியுடன்

nandhalala said...

வாழ்த்துக்கள் ! குருவருளால் வளர்க மேலும் !

Netrikkan said...

சொல்ல வேறு வார்த்தை தெரியவில்லை.

நீங்களும், உங்கள் தொண்டும்,உங்கள் வாழ்க்கை வளமும்

என்றும்

வாழ்க வளமுடன்

அழகிரி.க

கண்ணதாசதாசன் said...

பெற்றவர் உற்றவர் நற்றவர் போற்றிட!
செற்றவர் குற்றவர் அற்றவர் ஓடிட!
கற்றவர் கொற்றவர் மற்றவர் ஏற்றிட!
வெற்றவர் பெற்றிட விளக்குஉம் தொண்டே!

வாழ்க!

Elangai Tamilan said...

அன்பு அம்மையே,
பல்லாண்டு பல்லாண்டு பல்லா இரமாண்டு பல கோடி ஆண்டுகள் தாங்கள் சித்தர்கள் குறித்து
பதிவுகள் இட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.என் உயிர் இருக்கும் வரை பின்னோட்டம் இடுவேன்.மிக்க நன்றி.தாங்கள் என்னை அவமதித்தாலும்,தாங்கள் ப்ளோக்க்கிற்கு
வருவேன்.எனக்கு ஒரு தமிழ் நண்பரால் தான் ,தங்களின் ப்ளாக் அறிமுகபடுத்தபட்டது.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

அன்பு அம்மையே,
பல்லாண்டு பல்லாண்டு பல்லா இரமாண்டு பல கோடி ஆண்டுகள் தாங்கள் சித்தர்கள் குறித்து
பதிவுகள் இட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்.என் உயிர் இருக்கும் வரை பின்னோட்டம் இடுவேன்.மிக்க நன்றி.தாங்கள் என்னை அவமதித்தாலும்,தாங்கள் ப்ளோக்க்கிற்கு
வருவேன்.எனக்கு ஒரு தமிழ் நண்பரால் தான் ,தங்களின் ப்ளாக் அறிமுகபடுத்தபட்டது.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Guruvadi Saranam said...

தோழி,
தங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் அருள்புரிவானாக.
வாழ்க வளமுடன்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Arunsiva said...

அன்பு தோழி,

வாழ்த்துக்கள்.

போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
எல்லாம் இறைவனுக்கே!

GREAT WELCOME & HAPPY NEW YEAR!
TO (Y)OUR BLOG!

BEST OF LUCK.

வசந்தா நடேசன் said...

காலையிலேயே கருத்திட நினைத்தேன், அலுவலகத்தில் NHM சதி செய்து விட்டது, வரும் ஆண்டும் ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.. நன்றி.

anbe kadavul said...

என் தொழிக்கு இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக அமைய நம் சித்தர்கள் அருள் புரிய பிரார்திக்கின்றேன் ...................

சுந்தரா said...

வாழ்த்துக்கள் தோழி!

பல்லாண்டுகள் உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்!

Unknown said...

அருட் பேராற்றல்...
எப்போதும் உங்களுக்கு துணை இருகின்றது , எதற்கு கவலை ....
உங்களின் இந்த பணி வாழ் நாள் முழுதும் தொடர குருவருளை வேண்டுகிறேன் ....

Sankar Gurusamy said...

All the best... Continue your service as ever...

http://anubhudhi.blogspot.com/

sundar003 said...

Dear sister,

Your Writing hobby is very grateful hobby. In ths grate thinking words Read and youse to my life become i am a greate man. Really i know this. All the best. God bless to you. Take my bless also.

Sasikumar C said...

Simply great...
Keep it up...

Regards,
Sasikumar C

yuvarajappu said...

miga arumayana valaippadhivu lifela marakka maatten aasiriyarukku magizchi kalandha nandri yuvaraj

yuvarajappu said...

tamil la eppadi ezhudhuvadhu please reply me yuvarajappu

Adyaksh Kalajith said...

இந்த வலைத்தளம் ஒரு அரிய சித்தக் களஞ்சியம். அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பது மிகுந்த
மகிழ்ச்சி, ஏனெனில் ஆழ்ந்த ஆராய்ச்சி உடைய பெண்கள் அரிதாகவே இருக்கின்றனர். தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

காலசித்தன், சென்னை.

Sathish said...

இதில் நீங்க்கள் இலைமறைகாயாக கூறவருவது திருமண வாழ்க்கை வேண்டாம் என்பதுபோல உள்ளதே.?

Post a comment