நிலைக்காது நிலையற்ற இன்பம்!

Author: தோழி / Labels:

புற வாழ்க்கை தரும் சுகங்கள் யாவும் நிலையற்றவை என்றும், அத்தகைய இன்பங்கள் நம்மை மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல வைக்கும், எனவே நிலையற்ற இன்பங்களை எதுவென புரிந்து அவற்றை ஒதுக்கி பிறவா பேரின்ப நிலையினை பெற முயற்சிக்க வேண்டும் என்பதை அநேகமாய் எல்லா சித்தர்களும் தங்கள் சீடர்களுக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் பாம்பாட்டி சித்தர் அருளிய பாடலொன்றினை இன்று பார்ப்போம்.

"மணக்கோலம் கண்டுமிக மன மகிழ்ந்து
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலம் கண்டுபின்னும் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே!"

- பாம்பாட்டிச்சித்தர் -

இரு மனம் இணையும் திருமணம் என்பது எப்போதுமே கொண்டாட்டமான ஒரு துவக்கம்தான், ஆனால் அந்த கொண்டாட்டத்தின் தொடர் விளைவுகள் இன்பமயமாகவே இருக்கிற்தா?. பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்வித்து பேரன், பெயர்த்திகளைப் பார்த்து வீடு கட்டி, வாகனம் வாங்கி தோட்டம் துரவுகளின் மூலம் செல்வம் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன், வேறென்ன வேண்டும் எனச் சொல்லும் மனிதர்களே!

இறந்து போனவனின் பிணத்தைக் கண்டு, நாமும் ஒரு நாள் இது போலாவோம் என்பதை உணர்ந்து, நிலையற்ற இந்த இன்பங்களை துறந்து பேரின்ப பெருவாழ்வினை தேடாடதவர்கள் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல்வதற்கான அமைப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.

இவர்களின் நிலை இதுதான் என்பதை தெரிந்து தெளிந்து விட்டோமென்று ஆடு பாம்பே என முடிக்கிறார்.

நாளைய பதிவு இந்த வலைப்பூவின் மிக முக்கியமான பதிவு!! :)

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

jagadeesh said...

Excellent :))

ந.ராஜசேகர். said...

Nalaiya pathivu enna Guruvin thiruvarul petravare :(

ந.ராஜசேகர். said...
This comment has been removed by the author.
Anonymous said...

மிக சரி . மனிதன் எவ்வளுதான் ஆடினாலும் இறுதியில் போய்சேரும் இடம் சுடுகாடு , அகவே மனிதன் இதனை உணர்ந்து இந்த பூவுலகில் இருக்கும்வரை தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து இறைவன் அருளை பெற வேண்டும் .

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் இன்று பகிர்ந்து கொண்ட பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி. இப்பூவுலகில் பிறந்தால் ,இறப்பது உறுதி என்பதை எல்லோரும் அறிவார்கள் .ஆனால்,மனப்பக்குவம் என்பது எல்லோருக்கும் வரவேண்டும்.
மேலும் ,பாச தொடர் நம்மை போட்டு ஆட்டுகிறது.எனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ,அனைவரும் இலங்கை யுத்தத்தில் மாண்டுவிட்டனர்.மிஞ்சியது நான் மட்டும் தான்.
நான் கத்தாரில் இருந்ததால் ,உயிர் வாழ்கிறேன்.சில நேரங்களில் ,ஏன் பயனற்ற வாழ்க்கை வாழ்கிறேன் என்று தெரியவில்லை.எல்லாம் ஈசன் செயல் என்று விட்டுவிட்டேன் .யாராவது என்னுடைய பின்னூட்டத்தை பார்த்து ,அறிவுரை கூறுங்கள் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட.
மிக்க நன்றி.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் இன்று பகிர்ந்து கொண்ட பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி. இப்பூவுலகில் பிறந்தால் ,இறப்பது உறுதி என்பதை எல்லோரும் அறிவார்கள் .ஆனால்,மனப்பக்குவம் என்பது எல்லோருக்கும் வரவேண்டும்.
மேலும் ,பாச தொடர் நம்மை போட்டு ஆட்டுகிறது.எனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ,அனைவரும் இலங்கை யுத்தத்தில் மாண்டுவிட்டனர்.மிஞ்சியது நான் மட்டும் தான்.
நான் கத்தாரில் இருந்ததால் ,உயிர் வாழ்கிறேன்.சில நேரங்களில் ,ஏன் பயனற்ற வாழ்க்கை வாழ்கிறேன் என்று தெரியவில்லை.எல்லாம் ஈசன் செயல் என்று விட்டுவிட்டேன் .யாராவது என்னுடைய பின்னூட்டத்தை பார்த்து ,அறிவுரை கூறுங்கள் ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட.
மிக்க நன்றி.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் நாநூருவது பதிவிற்கு எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள்

வசந்தா நடேசன் said...

என்ன சொல்ல வர்ராய்ங்கண்ணே புரீலபா?? எல்லோரும் பாம்பாட்டி சொன்னதுபோல் பேரின்ப பெருவாழ்வுக்குப்போனால் யார் தான் வாழ்வது இந்த பூமியில்??

பாலா said...

அன்புள்ள தோழி,

தங்களின் இன்றைய பதிவு மிக அருமை.

சங்கிலி சித்தரின் பாடலில் யாம் கண்ட பாடல் இதோ.

"மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்னோடுபின்
மக்களைப் பெற்று வளர்த்து எடுத்துப்
பிணக்கோலம் ஆவது அறியாமல் வீணே
பிதற்றுவது ஏதுக்கு ஆனந்த்ப் பெண்ணே!

http://gurumuni.blogspot.com
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

சுவாமிநாதன் said...

ஆழமான கருத்து, எதையும் மாத்தி யோசித்துதானே மனிதனுக்குப் பழக்கம் துன்பம் வரும்போதுதான் இப்படி செய்யாமல் இருத்திருக்கலாமே என்று யோசிக்கத் தோன்றும்.

Ganesan Rajaiyan said...

Thiruman enbathe ethargku enbathai thelivaga sonna ungalukku Nandri....

Post a comment