”தசதீட்சை” - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

இந்த வலைப் பதிவினை புதிதாக வாசிக்க துவங்கியுள்ள நண்பர்கள் இந்த இனைப்பை வாசித்த பின்னர் இந்த பதிவுகளை அணுகினால் புரிதல் எளிதாக இருக்கும்.பிறவா பேரின்ப நிலையை நோக்கிய நெடிய பயணம் அத்தனை எளிதானதில்லை.ஆனால் குருவருளின் வழி காட்டுதல் இந்த பாதையில் தடையின்றி பயணித்து இலக்கினை அடைந்திட உதவும்.

ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில் நடைபெறுதல் அவசியம் என்கின்றனர் சித்தர்கள். இதனையே பொதுவில் தீட்சைகள் என கூறியிருக்கின்றனர்.இது தொடர்பாக முன்னர் பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் இனி வரும் பதிவுகளில் மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர்.இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.

தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..

திரமான தீட்சை செப்புவேன் கேளு
கரமான நெல்லிக்கனி யதுபோல
சரமான வாசி சங்கர கெவுரி
வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.

இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.

இன்றைய பதிவில் முதலாவது தீட்சையைப் பற்றி பார்ப்போம்.

கேளு அம்மென்று கெடியாக மண்டலம்
நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்
சேலுடன் தேகந் திரமது வாகும்
மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

நாளைய பதிவில் அடுத்தடுத்த தீட்சை வகைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

Narasimmarin Naalaayiram said...

நன்றி:

balaji said...

உங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது . உங்களால் பலர் நன்மை அடைகிறார்கள் . நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்

Elangai Tamilan said...

தோழி,
மிக்க நன்றி

Ramesh said...

http://velicham007.blogspot.com/

RAVINDRAN said...

அடுத்த பதிவை எதிர்பார்த்து

காத்திருக்கிறேன்
நன்றி

சுவாமிநாதன் said...

அருமையான பதிவு
சுவாமிநாதன்.மோ

Sankar Gurusamy said...

Very Good Information. Thanks for sharing.

http://anubhudhi.blogspot.com/

இன்பம் துன்பம் said...

இந்த வயது வரை நான் தெரிந்துகொள்ளததை கூறினாய் தோழி.மிக்க நன்றி வாழ்க வளமுடன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.இவளவு நாளும் இதை தெரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோமே என்று வேதனை படுகிறேன்.எனி காவு,
ரெம்ப நன்றி.

sundar003 said...

Allredy I am told 21 times in daily. Now i understud for this. I will do it. Thank you very much...Realy grate job...

Post a Comment