சாமுத்ரிகா லக்ஷணம் என்பது உடற்கூறியல் சார்ந்த கலை என்பதை முந்தைய பதிவுகளில் ஓரளவு பார்த்து விட்டாலும், பெண்களுக்கான மிக முக்கியமான உடல் நல கவனிப்பு தொடர்பான தகவல் ஒன்றினையே இன்று பார்க்க இருக்கிறோம். பெண்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல் இது.
பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.
சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
- மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
- பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
- மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
- பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
- மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
- பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
- மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
- பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.
மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...
இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.
சாமுத்ரிகா லக்ஷ்ணம் குறித்த மேலதிக விவரங்களுடன் நாளை சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
7 comments:
very interesting.
தோழி,
இன்றைய பதிவில் ,தாங்கள் அறிய வேண்டிய தகவல் குறித்து மேலும் சில செய்திகளை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . சாதரணமாக,பொய் கர்ப்பம் என்பதை ,தமிழகத்தில் ,முத்து பிள்ளை என்று கூறுகிறார்கள் , மெய் கர்ப்பம் ஏற்பட்டால் எப்படி மசக்கை இருக்குமோ ,அதே போன்று ,முத்து பிள்ளைக்கும்
இருக்குமாம்.இதனை ,செயற்கை பட கருவி மூலம் அறிந்து ,சிகிச்சை செய்ய வேண்டும்.மேலும்,ஆண் குழந்தை உண்டானால் ,பெண்ணின் தேகம் மெலிந்தும் ,பெண் குழந்தை உண்டானால் ,பெண்ணின் தேகம்
அழகு கூடியும் ,பருத்தும் காணப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. மிக்க நன்றி,தோழி.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
தோழியே,
மூதாதயர் சிறப்பை கூறும் உமக்கு கோடி வந்தனம்.
அருமையான பதிவு.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.
Pseudo-pregnancy என்பார்களே.....அதுதானே இது?
Sir,
As u said in comments 4, paragraph 3, I have all the symptoms as u said sir. please prescribe medicines and help me. Thanks.
சித்தாஇப்போதூதான் மக்களின்மருத்துவமாகதெரியவருகிறது
Post a Comment