சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர்பாக பல்வேறு மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன.இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்,கறிக்கு உதவாது என்பது மாதிரியான கருத்துக்களே பரவலாக உள்ளன.எனக்கு தெரிந்த வரையில் இந்த துறையில் முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரியவில்லை.எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவ முன் வருமானால் அரிய பல தகவல்களை நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, விலங்குகள், மரங்களுக்கு என தனித் தனியே சாமுத்ரிகா லக்‌ஷண நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.உதாரணம் சொல்வதானால் வராகமிகிரர் தனது நூலில் குதிரைகளுக்கும், யானைகளுக்குமான சாமுத்ரிகா லக்‌ஷண்ங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

இன்று பெண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர்கள் கூறியதன் தொடர்ச்சியினை பார்ப்போம்.

கண்கள்

 • கண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.

 • கலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.

 • மீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

வாய்

 • நாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.

 • நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.

 • குவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.

காதுகள்

 • அளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.

 • சரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

 • விசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.

 • முகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.

 • கரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.

கூந்தல்

 • சுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.

 • மிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.


 • கரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.

 • கட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.

பற்கள்

 • எண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம்.

கழுத்து

 • குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.

இத்துடன் பெண்களின் முகம் தொடர்பான சாமுத்ரிகா லக்‌ஷண குறிப்புகள் முடிவடைந்தன. நாளைய பதிவில் பெண்களின் பிற பாகங்கள் தொடர்பாக சித்தர் பெருமக்கள் அருளியுள்ள குறிப்புகளை காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய பதிவுகளுக்கு மிக்க நன்றி.சாமுத்ரிகா லக்ஷணம் ,குறித்து சித்தர்களின் பார்வையில் ,நெற்றியில்
பெண்கள் பொட்டு வைப்பதை குறித்தும் ,கூந்தலை பின்னாமல் பறக்க விட்டிருப்பது குறித்தும் ஏதேனும்
விமர்சனங்கள் உண்டா ?. இங்கு,உள்ள உணவு விடுதிகளில் ,வரும் ,தமிழ் பெண்கள் ,நெற்றியில் பொட்டு இல்லாமலும் ,மேற்கண்டவாறு ,கூந்தலை பறக்கவிட்டு கொண்டும் உள்ளனர் .மேலும் ,ஹிந்து பாரம்பரியத்தில் ,நீறில்லா நெற்றி பாழ் என்று ஒரு பழமொழியும் உண்டு.காலம் போகிற போக்கில் ,கலாச்சார சீரழிவு மற்றும் சாமுத்ரிகா லக்ஷணம் என்றால் என்ன என்ற அளவுக்கு எண்ணங்கள் மாறிவிடும் . மிக்க நன்றி ,தோழி.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

வசந்தா நடேசன் said...

நாளை மறக்காமல் வந்துவிடுவேன் :-)

RAVINDRAN said...

no comment

Live Every Moment said...

அன்புடைய தோழிக்கு வணக்கம்,

குருவருளும் திருவருளும் கிடைக்க எல்லாம் வல்ல அம்பலவாணர் அருள் கிடைக்க பெருக...

தமிழ் இது மொழி மட்டுமல்ல தமிழே எல்லாம் என்று ஒருவர் சில காரணம் சொல்ல நான் கேட்க நேர்ந்தது.

அவர் ஒரு சித்த வைத்தியர்... அவர் சொல்லிய சில உதாரணம்

"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு" இதில் ஒளவையார் சொல்லும் பெண்... மனித உடம்பு என்றும் மனித உடம்புக்கு பெண் என்ற பெயர் இருபதாகவும் கூறினார்.
கரு ,உரு இதில் க = 1 ரு= 5 கரு உருவாக 15 நாட்களும் உரு உ = 2 ரு = 5 உரு உருவாக 25 நாட்களும் என்று கூறினார்.

சித்த மருத்துவத்தில் கூறி உள்ள சில மருந்து பரிபாசயாக உள்ளது என்றும் சில மருந்தை எப்படி கலக்க வேண்டும் எண்டு தமிழ் இலக்கணத்தை மேற்கோள் காட்டி உள்ளனர் என்றும், மனிதனது உடம்பானது மெய் எழுத்துக்களால் ஆனது என்றும் கூறக்கேட்டேன்.


நான் தங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி தமிழ் அட்சரம் ஐம்பது + ஒன்று என்று சிவவாக்கியர் பாடலில் நான் கேட்டுள்ளேன்,அந்த 51 அட்சரங்கள் எது? அதை தமிழில் எப்படி பயன் படுத்துவது ? எப்படி எழுதுவது ? என்று சொல்ல முடியுமா?

இராஜராஜேஸ்வரி said...

very interesting.

Post a comment