சாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் உடலும், முகமும்

Author: தோழி / Labels:

அங்க இலக்கணம் என்பது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் கலைகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் இது அழகியல் சார்ந்த ஒன்றாக மாறியிருக்கலாம்.ஒருவரின் புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டு அவர்தம் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த இயல்புகளை அவதானித்து அறிவது எளிதானதல்ல. வாருங்கள் இன்றைய பதிவில் பெண்களின் உடலியல் மொழியினை சித்தர்கள் எவ்வாறு வகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

உடல்

 • பெண்களின் உடலானது பூவினைப் போன்று மென்மையாக இருக்குமானால் அவள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்களாம். எல்லா வளங்களுட்ம் நிறைந்திருக்குமாம்.இங்கே வளங்கள் என்பது உடல் நலமாக இருக்கக் கூடும்.
 • பெண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு சிறப்பையும் மேன்மையையும் அடைவாளாம்.
 • பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, எலுமிச்சை வாசனை, தாமரைப்பூ வாசனை உடம்பில் வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம் செய்வாராம்.
 • பெண்ணின் முகம் தங்கத்தைப் போல பொலிந்து சிவந்து முகத்தினை உடையவளிடம் எப்போதும் தர்ம சிந்தை மேலோங்கி இருக்குமாம்.
 • பூரண சந்திரனைப் போல் முகவசீகரமும், சூரியன் உதிக்கும் காலத்தில் உள்ளதைப் போல பிரகாசமான தேஜஸும், பெரிய கண்களையும் உடையவள் எப்போதும் மகிழ்வாக இருப்பதுடன் அவளை சூழ இருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருப்பாளாம்.

புருவம்

 • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்.
 • வளைந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவர்களின் கன்ன கதுப்பு மலர்களைப் போல பளபளப்புடன் இருக்குமாம்.

நெற்றி

 • ஒரு பெண்ணின் நெற்றியில் ஐந்து ரேகைகள் இருந்தால் அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், சிறப்பான சிந்தனை வளமும் கொண்டவளாக இருப்பாளாம்.

உதடுகள்

 • பொதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.என்ன மாதிரி நன்மைகள் என்பது பற்றி தகவல்கள் இல்லை.தேடிப் பார்க்க வேண்டும்.
 • உருண்டை வடிவமாகவம் சதைப்பிடிப்புடன் கூடிய உதடுகளைக் கொண்ட பெண்களின் வாழுவு சிறப்பாக அமையுமாம்.
 • ஒரு மங்கையின் மேல்உதடு பெரிதாயிருப்பின் அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், சண்டைக் கோழிகளாகவும் இருப்பார்களாம்.
 • உதடுகள் சிவந்து தாமரை இதழ் போல இருக்கும் பெண்கள் அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், பிறரை வழிநடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

பெண்களின் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

Unknown said...

Great
...:

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி.சித்தர்கள் குறிப்பிட்டுள்ள சாமுத்ரிக லக்ஷணம் ,தற்காலத்தில் ,விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு பொருந்துமா ?.ஏனென்றால் ,விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு உடல் முரட்டுத்தனம் ஏறிடும் . மிக்க நன்றி. மேலும் ,தோழி ,ராஜராஜேஸ்வரி ,எனது ப்ளாக் இல் கருத்துரைகள் இட்டுசென்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை ,சிரம் தாழ்த்தி ,தெரிவித்து கொள்கிறேன் .

--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

jagadeesh said...

பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா இல்லையா? அதை சொல்லுங்க.

வசந்தா நடேசன் said...

மன்னிக்கவும் தோழியே, தங்கள் கட்டுரையின் மேலான ஆவல் இப்போது இல்லாவிட்டாலும் தங்கள் தமிழுக்காக தினமும் வாசிக்கிறேன். நன்றி, நல்ல தமிழ் நடை, தொடரவும்.. வாழ்த்துக்கள்.

RAVINDRAN said...

நண்றி

Rathnavel Natarajan said...

அருமை

Bharathi said...

தோழி எனக்கு இதுலே ரொம்ப பிடிச்சது நீங்க குறைகளை சொல்லாமல் நிறைகளை சொன்னது! நன்றி தோழி!

pothigaimurugan kalakad said...

we know a lot of matters from siddhar
thanks you
1.6.13 P.Murugan, kalakd

pothigaimurugan kalakad said...

We know a lot of matter from siddhar.
Thanks.1.06.13

pothigaimurugan kalakad said...

We know a lot of matters

Post a comment