சாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் வகைகள்!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் இனி வரும் பதிவுகளில் பெண்கள் குறித்து சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை பார்ப்போம்.ஆண்களைப் போலவே பெண்களிலும் நான்கு வகையினர் இருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார்.அந்த பெண்களைப் பற்றியும் அவர்களை அடையாளம் காணும் வகையினை பின் வருமாறு விளக்குகிறார்.

பெருகுவதற்குப் பெண்ணிடச் சாதி நாலும்
பிறித்து நாம் ஒவ்வொன்றாய்ப் பேசக்கேளு
வருவதற்கு வத்தினிதான் பிற்குலமாகும்
யடவானிச் சங்கினிதான் சத்திரிய குலமாகும்
வறுவதற்கு வசியாளே சித்தினிதானாகும்
வசனித்தோம் பத்மினிதான் சூத்திர குலமாகும்
நறுவதற்கு நால்சாதி குலமே சொன்னோம்

- அகத்தியர் -

காணப்பா புலத்தியனே பெண்சாதி நாலும்
கருவறிந்து சொல்லுகிறோம் வரணங்கேளீர்
பேணப்பா அத்தினி ஸ்தான்கேரும்
பேணிப்பார் வெளுமை வரணம் பேதமில்லை
நாணப்பா சங்கினி தான் மஞ்சள் நிறமாகும்
நலமான சித்தினி தான் செழுமை நிறமாகும்
ஆணப்பா பத்மினிதான் கருப்பு வாரணமாகும்
அருளினோம் நால்சாதி வரணம் இதுவாமே.

- அகத்தியர் -

பெண்களில் நான்கு வகையினர் இருப்பதாகவும், அவர்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அழைக்கிறார் அகத்தியர்.இந்த வகை பெண்களை பின் வருமாறு இனம் காணலாம் என்கிறார்.

அத்தினி

பெண்களில் இவர்களை உயர்ந்த வகையினர் என்கிறார்.வெளிர்மையான நிறத்தை உடையவர்களாம். அழகியகண்களும், மென்மையான தலை முடியையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

சங்கினி

நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உடைய இந்த வகை பெண்களுக்கு சங்கு போன்ற கழுத்து அமைந்திருக்குமாம்.அழகான மற்றும் அளவான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்களாம் சங்கினி வகைப் பெண்கள்.

சித்தினி

மெலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர உடலமைப்பைக் கொண்ட இந்த வகைப் பெண்டிர் செழுமை நிறமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் மேனி கதகதப்பாக இருக்குமாம்.

பத்மினி

இந்த வகைப் பெண்கள் தடித்து உயர்ந்த உதடுகளையும், செம்பட்டை நிற கூந்தலையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் கரிய நிறம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பகங்கள், தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், தொடை, பெண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து சித்தர்கள் பலன் கூறியிருக்கின்றனர்.

இனி வரும் பதிவுகளில் ஆண்களைப் போல பெண்களின் அங்கங்களை தனித் தனியே விரித்து விவரிக்காமல், பொதுவில் பகிரக் கூடிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Sri Kamalakkanni Amman Temple said...

நன்றி:
_)

Guruvadi Saranam said...

Thozi,

Arumai.....................!

Nandri
Rajendran

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் தற்சமயம் விளக்கம் அளிக்கும் தலைப்பு மிகவும் பொருத்தமானது .சாமுத்திரிக லக்ஷணம் என்றோலே அது ஆண்களைவிட பெண்களுக்குத்தான் பொருந்தும்.சாதாரனமாகவே ,ஏதாவது ,திருமணவீட்டில் ,திருமணதம்பதிகளை பார்த்தாலே ,முதலில் ,ஜோடி பொருத்தம் பற்றி பேசுவார்கள் .
பின் ,பெண்ணிடம் சாமுத்திரிக லக்ஷணம் குடி கொண்டுள்ளது என்று கூறுவார்கள்.தற்காலத்தில் ,பெண்
சம்பாதிகிரளா,அதுவே போதும் என்ற எண்ணம் தான் மக்கள் மத்தீயில் அமைகிறது.எல்லாம் காலத்தின்
கோலம் . மிக்க நன்றி .

--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பாக்கியராஜ் சின்னவீடு படத்திலும், ரஜினி படையப்பா படத்திலும் தேவையான அளவு விவரித்து விட்டதால் பதிவு சுலபமாகப் புரிகிறது

RAVINDRAN said...

தோழியே,
தற் காலங்களில் எந்த நடைமுறை எவ்வளவு ஒத்து வரும் என்று தெரியவில்லை.

Suriyaa said...

Nandri Thozhi..,

Valga Valarga un thondu.

Thanks
LVS.

கிள் னாமம் said...

Nanri
- Saalai Kumaravel

vijay said...

Thanks for the information it is very useful i am searching for a long time,thanks to facebook to bring the messae to me-Govindarajan Vijayakumar,Thanjai.

Sivaramakrishnan Balakrishnamoorthy said...

பெண்களை பற்றிய சித்தர்களின் முழு சாமுத்திரிக்கா விவரம் எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா தோழியே?

Post a Comment