சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களுக்கான நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

பத்து முதல் பதினைந்து பதிவுகளுக்குள் சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரை முடித்து விடுகிற திட்டத்தோடுதான் துவங்கினேன்.ஆனால், சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தேடத் தேட அதன் எல்லைகள் விரிவாகிக் கொண்டே போகின்றது.

ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவிலான தகவல்களை பத்திருபது பக்கங்களில் முடித்து விடுவதில் நிறையவே சிரமங்கள் இருக்கின்றன. எனினும் தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி இன்றுடன் ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷண விரவங்களை நிறைவு செய்திட இருக்கிறேன்.

இன்றைய பதிவில் ஆண்களின் நகங்கள், மார்பகங்கள்,தொப்புள், முதுகு பற்றி சித்தர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

நகங்கள்

 • விகாரமாகவும் நிறமற்ற நகங்களைக் கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களிடத்தில் அடிமைத்தொழில் செய்வார்களாம். கரடுமுரடான உடைந்த நகங்களையுடையவர்கள் ஏழையாக இருப்பார்களாம்.
 • பெருவிரல் நகத்தின் மேல் பாகத்தில் கோதுமை போன்ற அடையாளத்தை உடையவர்கள் பெரும் செல்வந்தராக இருப்பார்களாம்.அகண்ட நகங்களையுடையவர்கள் கூச்சமுடையவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • நகங்களின் முனைப்பாகத்தில் வெள்ளைப் புள்ளியிருந்தால் அவர்கள் கண்ணியமுடையவர்களாகவும் நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • நகங்களின் ஆரம்பத்தில் சிவப்பு கலந்த பலவித வர்ணமான புள்ளிகள் இருந்தால் அவர்கள் அதிக கோபமுடையவர்களாகவும், சண்டை கோழிகளாய் இருப்பார்களாம்.
 • நகங்களில் முனையில் கருப்பு நிறமிருந்தால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களாம்.கோணலான நகங்களையுடையவர்கள் மோசக்காரர்களாக இருப்பார்களாம்.சிறியதாகவும், உருண்டை வடிவமாகவும் உள்ள நகங்களை உடையவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம்.

மார்பு

 • சந்திரனுடைய பிறையை போல் எடுப்பான மார்பை உடையவர்ன் வசீகரிப்பவனாய் இருப்பானாம்.அத்தனை எடுப்பான மார்பு இல்லாது இருப்பவன் எடுத்ததெல்லாம் வெற்றி பெருமாம்.
 • உன்னதமாகவும் ,சதை பிடிப்போடும், சுருக்கமோ,அதிர்வோ இல்லாத மார்பை உடையவர்கள் அரசாள்வார்களாம்.மேலும் அவர்கள் நரம்பு மயமான சதைபிடிப்புள்ள பலமான மயிர்கள் கீழ்நோக்கி அமையப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • தட்டையான சமமான மார்பினை உடையவன் தனவந்தனாக இருப்பானான். இலந்தைப் பழத்தைப் போல மார்பை உடையவன் அதிக சக்தியுடைய்வனாக இருப்பானாம். சமமில்லாத மார்பினை உடையவர்கள் தரித்திரர்களாகவும்,ஆயுதங்களால் கொல்லப் படுபவர்களாகவும் இருப்பார்களாம்.

தொப்புள்

 • தொப்புள் பெரியதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டமுடையவனாக இருப்பானாம்.மீனை போன்ற தொப்புள் உடையவர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்களாம்.
 • தாழ்ந்த தொப்புள் உடையவன் அகால மரணமடைவான் .ஒரு பக்க மடிப்பு இருக்குமானால் நீண்ட ஆயுளை உடையவன். இரு மடிப்புகள் காணப்பட்டால் பெரும் செல்வந்தர்களாகவும், எப்போதும் மன நிறைவோடும் காணப்படுவார்கள்.
 • தொப்புளில் காணப்படும் ஒற்றை மடிப்பு நடுவில் அமையாமல் பிறிதொரு பக்கத்தில் அமைந்திருந்தால் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.
 • தாமரை உள்ளிருக்கும் விதையின் மேல் தோலை போலிருந்தால் அவன் அரசனாவான்.மூன்று மடிப்புகள் இருந்தால் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஆசானாக வருவான்.
 • விரிவாகவும் உன்னதமாகவும் தொப்புள் ஏழைகளுக்குண்டு, உன்னதமான தொப்புளை உடையவர்கள் அற்ப ஆயுளை உடையாவர்கள்.
 • தொப்புளில் இருக்கும் மடிப்பு நேராயிருக்குமாயின் அவன் மகிழ்ச்சி அடைவான். மடிப்பு விலகியிருக்குமாயின் அவன் பெண்களுக்கு பிரோஜனமற்றவனாக இருப்பான். தாம்பத்திய சுகம் அனுபவிக்க லாயிக்கற்றவன்.

முதுகு

 • மயிர் முளைக்கப் பெற்ற முதுகையுடையவன் சிற்றின்ப பிரியனாக இருப்பான். ஆமையின் முதுகை போல் இருந்தால் அரசனாவான்.
 • குதிரையின் முதுகை போல் இருப்பின் பெண்ணாசை அதிகமாயிருக்கும். முடி இல்லாமல் பளிங்கு போன்ற வழுவழுப்பான முதுகையுடையவர்கள் சுகவாசியாக இருப்பார்கள்.

இத்துடன் ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷணம் நிறைவு செய்து நாளையபதிவில் பெண்களுக்கான தகவல்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் ,ஆண்களை பற்றி இறுதி பதிவாக ,இன்றைய பதிவை அமைத்து உள்ள்ளீர்கள்.மிக்க நன்றி.
எனது உள்ளத்தில் ஒரு ஐயப்பாடு உள்ளது.அது யாதெனில் ,சில ஆண்கள் ,வடிவாக இருக்கும் பொருட்டு ,பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ,செய்து கொள்கிறார்கள் .அப்பொழுது ,சாமுத்ரிக லக்ஷணங்கள் மாறுபடும் ? மேலும் ,மார்ற்று திறநாளிகள் ,ஆஉடிசம் குறை உடையோர் ,இவர்களுக்கு
சாமுத்ரிக லக்ஷணங்கள் ,எவ்வாறு வரையறுக்க பட்டுள்ளன என்பது பற்றி ,தாங்கள் ஒரு குறிப்பு
வெளி இட்டால் ,நலம் பயக்கும் . மிக்க நன்றி,தோழி.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

RAVINDRAN said...

தோழீ,
நன்றி.

Chittoor Murugesan said...

ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

EDUEXP said...

ஆண்களின் கண் புருவங்கள் இணைத்து இருந்தால் என்ன பலன்?

saravanan said...

தோழி அவர்களே இதை தவறாக எண்ணாமல் இதற்கான பகிர்வை நீங்கள் போடவேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். ஆண்களின் குறி கலை பற்றி எதாவது உண்ட.....சித்தர்களின் தகவல்களில்

Post a comment