சாமுத்ரிகா லக்ஷணம்-ஆண்களின் கைகள் - விரல்கள் - உள்ளங்கை...!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணத்தில் ஆண்களின் கைகள்,விரல்கள்,உள்ளங்கை ஆகியவற்றின் அமைப்புகளை வைத்து அவர்தம் இயல்பினை சித்தர்கள் எவ்வாறு வரையறுத்து கூறியிருக்கின்றனர் என்பதைப் இன்று பார்ப்போம். இந்த தகவல்கள் அனைத்தும் அகத்தியர்,போகர் மற்றும் தேரையர் அருளிய நூல்களில் இருந்து திரட்டப் பெற்றவை.

கைகள் - விரல்கள் - உள்ளங்கை

  • கைகள் தடித்தும் சதைப்பிடிப்போடும், முழங்கால் வரை நீண்டு இருந்தால் அவர்கள் அரசர்களாக ஆவார்களாம்.
  • கட்டையான மயிர் முளைத்த கைகளையுடையவர்கள் தரித்திரகளாக இருப்பார்களாம்.
  • மணிக்கட்டில் உண்டான ரேகை நடுவிரலோடு கலந்தாக அமைந்திருப்பவர்கள்ஏராளமான நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்களாம்.
  • கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடம்புக்குச் சிறப்பையும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
  • குழியான உள்ளங்கையும், மிக நெருக்கமான விரல்கள் இருந்தால் ஏராளமான பொருள்களுக்கு சொந்தகாரனாக இருப்பானாம்.
  • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஐந்து விரல்களையும் அளந்து அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அது துல்லியமாய் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால் அவன் நூறாண்டுக்கு மேல் வாழ்வானாம்.
  • அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நின்றால் அவன் நல்ல புத்திரர்களையும் சிறந்த செல்வத்தையும் கொண்டவனாக இருப்பானாம்.
  • கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவன் ரகசிய சாஸ்திரங்களை கற்றறிந்தவனாக இருப்பானாம்.
  • விரலின் நுனிப்பகுதி மெத்தமாயும் பருத்தும் இருந்தால் அவன் திருடனாக இருப்பானாம்.
  • விரல்களைப் பார்த்த மாத்திரத்தில் புலியின் விரல்களைப் போன்ற விரல்களைக் கொண்டவர்கள் மிகுந்த பலசாலிகளாக இருப்பார்களாம்.

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர்பான மேலதிக தகவலுடன் நாளைய பதிவில் சந்திப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Unknown said...

நன்றி:-)

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி .தங்களின் பதிவை பார்த்தால் ,முகம் பார்த்து குறி சொல்ல இயலும்
என்று எண்ணுகிறேன் .

--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Guruvadi Saranam said...

தோழி,

தங்களின் பதிப்பு நல்லவர்களை அறிந்து பழக ஒரு வழி என கருதுகிறேன்.
அருமை.வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

RAVINDRAN said...

அருமை

இராஜராஜேஸ்வரி said...

un vaazkkai un kaiyil

வசந்தா நடேசன் said...

//கைகள் தடித்தும், சதைப்பிடிப்போடும், முழங்கால் வரை தடித்திருந்தால் அரசர்கள்???// ஒரு வேளை ராஜபக்ஷே அதனால் தானோ? இந்த எண்ணம் வந்தபின்பு மேலும் படிக்க தோன்றவில்லை.. மன்னிக்கவும். ஒருவேளை தவறாயிருந்தால் பிரசுரிக்க வேண்டாம்.

காப்பி/பேஸ்ட் சரி பண்ணுங்களேன், கையை வலிக்கறது..

வசந்தா நடேசன் said...

//முருகப்பன் குகன்// வாங்கண்ணா,செளாக்யமாண்ணா??

Unknown said...

தும்பைச் செடியின் தற்போதைய பெயர் என்ன?பிறகு, தும்பைச் செடியின் சாபம் நீங்க மந்திரம் என்ன தோழி? அன்புடன் மோகேஸ்வரன்

இராஜராஜேஸ்வரி said...

Kama Raj -our Ex Prime minister have longer hands.

Anonymous said...

கல்வி கண்திறந்த காமராஜர் கை முழங்கால் வரை இருக்கும்

நன்றி - விவேகன்

Anonymous said...

@இராஜராஜேஸ்வரி He was Chief minister

Post a comment