சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - ஆண்களின் முகம்...நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் தொடரில் முகமே பிரதானமாய் கருதப் படுவதால்,அது தொடர்பான தகவல்களை விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.அந்த வகையில் இந்த பதிவு ஆண்களின் முகம் தொடர்பான தகவல்களின் நிறைவுப் பதிவு.

ஆண்மை மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப் படும் மீசையும்,தாடியும் ஒரு மனிதனின் இயல்புகளை கண்டறியும் குறியீடுகளாக இருந்திருக்கின்றன.

மீசை, தாடிகள்

  • மெல்லியதாகவும், மென்மையாகவுமுள்ள மீசை தாடியுடையவர்கள் மெலிந்த தோற்றத்தோடும் பயந்த சுபாபம் உள்ளவர்களாகவும் இருப்பார்களாம.
  • தேவையான அளவு அடர்த்தியுடனும்,நேர்த்தி மிக்கதுமான மீசை தாடியை உடையவர்கள், நல்ல குணமுள்ளவர்களாகவும், நியாயமிக்கவர்களாகவும், தாங்கள் சொல்வதைச் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம்..
  • மீசை தாடியின் ரோமங்கள் கருத்தும் மிகுந்த அடர்த்தியுடன் சிங்கத்தின் பிடரியைப் போன்று அமைந்திருப்பின் அவர்கள் தீர்க்க ஆயுளுடன், புத்தியின் துணைகொண்டு எதிரிகளை வென்றெடுக்கும் ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பார்களாம்.


மோவாய்
  • சிறிய குறுகிய மோவாயை உடையவர்கள் பொறாமை கொண்டவர்களாகவும் எண்ணத்தில் சுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பபார்களாம்.
  • சதுரமான முகவாய்கட்டு அமையப் பெற்றவர்கள் துணிச்சலான மிக்க வலிமையுடையவர்களாக இருப்பார்களாம்.
  • சதைப்பிடித்தமுள்ள மோவாயையுடையவர்கள் செல்வந்தவர்கள் இருப்பார்களாம்.
  • ஒட்டிப்போன முகவாய்கட்டையுடையவர்கள் பொறாமை குணமுடையவர்களாக இருப்பார்களாம்.

நாளைய பதிவில் ஆண்களின் கைகள், விரல்கள்,உள்ளங்கை பற்றி சித்தர்கள் அருளியதை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் கூறியபடி ,மீசை மற்றும் முகவாய் குறித்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.அனைத்தும் எனக்கு
பொருந்துகிறது.

முருகப்பன் குகன்
வளையாத நதிகள் இல்லை வலியாத வாழ்க்கை இல்லை

இராஜராஜேஸ்வரி said...

முகலட்சணம் பகுதி பயனுள்ளதாக இருக்கிறது.

Unknown said...

அட இப்படி கூட இருக்கா. செக் பண்ணி பார்க்கணுமே.

Lingeswaran said...

சாமுத்ரிகா லட்சணமா?....ஆகா...இது வேறயா...!

Lingeswaran said...

கண்டினியு பண்ணுங்க..

குறையொன்றுமில்லை. said...

ஆஹா தோழி இப்படில்லாம் ஒரு விஷயம் இருக்குன்னே உங்க ப்ளாக் பாத்தபிறகுதான் தெரிஞ்சுகிட்டேன். நன்றி.

Post a comment