சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் முகம்!

Author: தோழி / Labels:

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார்கள்,இன்று அந்த முகத்தின் அங்கங்களைப் பற்றி சித்தர்களின் பாடல்களில் எவ்வாறு கூறப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். இன்றைய தகவல்கள் அனைத்தும் ஆண்களுக்கானவை.

இந்த பதிவுகளின் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன். சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கும் சாமுத்ரிகா லக்‌ஷணத்தின் தகவல்களை ஒரு புள்ளியில் குவிப்பதே இந்த தொடரின் நோக்கம்.இந்த தகவல்கள் அனைத்துமே மேலதிக விவாதம் மற்றும் ஆய்வுகளுக்கானவை.

நெற்றி

 • அகலமான பரந்த நெற்றியை கொண்டர்கள் மன்னர்களும் பணிந்து வணங்கிடக் கூடிய திறமைபெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • அரைச் சந்திரனைப் போல நெற்றி யிருந்தால் செல்வந்தனாகவும், உயரமாகவும், சங்கு போன்ற கரடு முரடான நெற்றியுடைவர்கள் தரித்திரர்களாகவும், தசைப்பிடிப்பான நெற்றியுடையவர்கள் பாவிகளாவும் இருப்பார்களாம்.
 • உயர்ந்த, முக்கோண வடிவமுள்ள நெற்றியுடையவர்களிடத்தில் செல்வம் எப்போதும் குடிகொண்டிருக்குமாம். மேலும் உருண்டை வடிவமான நெற்றி உடையவர்கள் பிறக்கு ஈயாதவர்களாக இருப்பார்களாம்.
 • வியர்வை இல்லாமலும், உலர்ந்துள்ள நெற்றி உடையவர்கள் மிகுந்த துர்பாக்கிய சாலிகள் எனவும், போதுமான வியர்வையுடன், கொஞ்சம் மேடு பள்ளமும் உள்ள நெற்றியுடையவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பார்களாம்.
 • கீழ்நோக்கிய நெற்றியுடையவர்கள் அரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். சதுரமான நெற்றியை உடையவர்கள் வீரதீரச் செயல் செய்யக்கூடியவர்களாக திகழ்வார்களாம்.
 • சுருக்கம் நிறைந்த நெற்றியை உடையவர்கள் கவனக் குறைவுடன் கீழ்த்தர எண்ணமும் உடையவர்களாகவும், ரேகை ஓடிய நெற்றிக்குச் சொந்தக்காரர்கள் அற்ப ஆயுளைக் கொண்டவர்கள் என்பதையும் பார்த்தவுடன் அறிந்துகொள்ள வேண்டுமாம்.
 • நெற்றியில் இரு ரேகைகள் மட்டும் இருப்பின் அவனது ஆயுட்காலம் அறுபதிலிருந்து எழுபது வரை மதிப்பிடலாமாம். அத்துடன் நெற்றியில் நான்கு ரெகைகள் மட்டும் ஓடுமாயின் அவன் அரசனாவானாம்.
 • நெற்றியில் ஐந்து ரெகைகள் மட்டும் ஓடுமாயின் மிகக்குறைந்த வயதே(45 முதல் 55 வருடம் வரை) உயிர்வாழ்வான் என்றும் அறிந்துகொள்ளலாமாம். மெலும் பல ரேகைகள் நெற்றியில் ஒடிக்கொண்டிருந்தால் அவன் மிகுந்த செல்வத்தொடும், 60 வயதுக்குமேல் சுகமாக வாழ்வானாம்.

புருவங்கள்

 • கண் புருவத்தின் முடிகளானது நீண்டதாக இருப்பின் சாதாரண மனிதர்களாகவும், தீமை பயக்கும் எண்ணத்தை உடையவர்களாகவும் இருப்பார்களாம்..
 • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்..
 • புருவங்களில் இயற்கையாகவே மடிப்புகள் விழுந்திருந்தால் அவன் மரியாதையில்லாதவனாகவும், பொறாமை உடையவனாகவும் இருப்பானாம்.
 • எவனொருவன் கண்களின் மேல் முடிகள் குட்டையாகவும்,சிறியதாகவும் அமையப் பெற்றிருக்கிறானோ, அவன் சிறந்த அறிவாளியாகவும், இரகசியம் காப்பவனாகவும் இருப்பானாம்.
 • கண்களின் இமைகளில் நீளமாக இருந்தால் அவன் சட்ட வல்லுநராக இருப்பானாம். இமைகளில் அதிக ரோமம் இருப்பின் புத்தி மந்தமாக இருக்குமாம்.
 • விசாலமாகவும், விரிவாகவும் உள்ள புருவங்களை உடையவன் ஏழையாக இருப்பானாம்.
 • இமைகள்நீளமாகவும், ஒன்றோடொன்று பொருந்தாமலும் இருப்பவன் செல்வந்தனாக இருப்பானாம்.அரைச் சந்திரனைப் போன்ற புருவங்களையுடையவர்களும் செல்வர்கள் போல் வாழ்வார்களாம். இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் வெட்டுடையவர்கள் வறியவர்களாக இருப்பார்களாம்.
 • புருவங்கள் கீழ் நோக்கிச் சரிந்திருந்தாலும், அமுக்கப்பட்ட புருவங்களை உடையவர்களும் பெண் சுகத்தை அனுபவிக்கத் தகுதியில்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களால் பெண்ணைத் திருப்தி செய்ய இயலாதென்றும், ஆண்மை குன்றியிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்களாம்.

கண்கள்

 • பெரிய கண்களை உடையவர்கள் இயல்பில் சோம்பேறிகளாகவும், சிறந்த மதியுகம் உடையவர்களாகவும், செயல்வீரர்களாகவும், தீரர்களாகவும், நடத்தை கெட்டவர்களாகவும், கடவுள் பக்தி இல்லாதவர்களாகவும் இருப்பார்களாம்.
 • ஆழமான கண்களை உடையவர்கள் பெரிய மனதை உடையவர்களாகவும், சந்தேக எண்ணங் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
 • கூர்மையும், தீர்மான கண்களையும், சாய்வான கண் இமைகளையுடையவர்கள் போக்கிரிகளாகவும், அநியாயம் செய்யும் எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • கோவெறு கழுமையைப் போன்ற சிறிய கண்களை உடையவர்கள் மந்தப் புத்தி உடையவர்களாகவும், பிறர் சொல்வதை உடனே நம்பிவிடக் கூடிய மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
 • தாமரை இதழ் பொன்ற கண்களையுடையவர்கள் அறிவு ஜீவிகளாக, ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். சிறிய கண்களை உடையவர்கள் யானையைப் போன்ற பலசாலியாகவும் போர் வீரனாகவும் இருப்பார்களாம். பூனையின் கண்களைப் போன்று உடையவர்கள் பாவம் உடையவராவார்களாம்.
 • வெண்மை கலந்த கண்களையுடையவர்கள் கலை, இலக்கிய ஈடுபாடும், சமூக மாற்றத்திற்குப் போராடும் குணங்களைக் கொண்டவர்கள் என்பதை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டுமாம்.சித்திரத்தை நினைவூட்டும் கண்களை உடையவர்கள் அரசராகத் தகுதிப்பெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • உருண்டை வடிவமான கண்களையுடையவர்கள் பாவச்செயல்களைச் செய்வதில் தேர்ச்சி பெற்றிருப்பார்களாம். இவர்களிடம் பழகுதல் கூடாதாம்.
 • செங்கழுநீர்ப் பூ போன்ற கண்களை உடையவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவராகவும், நீதிக்கம் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவார்களாம்.
 • கலைமானின் கண்களைப் போன்ற கண்களையுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், தந்திரம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.

நாளைய பதிவில் ஆண்களின் மூக்கு, வாய், பற்கள் தொடர்பாக சித்தர்கள் கூறியுள்ள தகவல்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவுகள் ,இன்று ஆண்களின் அங்க உறுப்புகள் பற்றி குறிப்பிட்டுடது மிக்க நன்றி.ஆனால் இது
முகம் பார்த்து சோதிடம் சொல்பவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பது உண்மை.தாங்கள் கூறியதில் ,எனக்கு நெற்றி ,கண்கள் போன்றவற்றிக்கு சரியாக பொருந்துகிறது .ஆனால்,புருவத்திற்க்கு
பொருந்தவில்லை.ஆதலால் ,நாம் முழுமையாக நம்ப இயலாது என்று எண்ணுகிறேன்.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

வசந்தா நடேசன் said...

சித்தர்கள் பாடல்களும் வந்தால் இன்னும் இந்த பதிவின் அழகு கூடும் என நினைக்கிறேன். சற்று சிரமம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். முயற்ச்சிக்கவும். என்னை நினைவிருக்கிறதா?? சில மாதங்களுக்கு முன் தங்களின் மின்னூல் கேட்டு வாங்கினேன்.. பலர் வாங்கியிருக்கக்கூடும்!! தங்களின் இந்த செயற்க்கறிய முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Siva chakra said...

வணக்கம் தோழி,

"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம்போற்றி"
அருமையான ஆய்வின் தெளிவான பதிவு .
நன்றி ... .
தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......

என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com

பாலா said...

அன்புள்ள தோழியே ,

தாங்கள் விளக்கமுடன் தரும் இந்த பதிவுகள் மிக அருமை.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

இராஜராஜேஸ்வரி said...

விரிவான விளக்கங்கள்-அருமை
சுந்தரகாண்டத்தில் இராமனது சாமுத்திரிகா
லடசணத்தை அசோக வனத்தில் அனுமன் விரிவாக
விளக்கி சீதாதேவியிடம் கூறுவது -வால்மீகி
ராமாயணத்தில் -மூலநூலில் அற்புதமாக இருக்கும்
வாசித்துப் பாருங்கள்-ஒவ்வொரு அங்கலட்சனத்தையும் ஆழ்ந்துவர்ணித்திருக்கிறார்.

RAVINDRAN said...

தோழியே,

அருமையான விளக்கம்.
தொடரட்டும் உமது சேவை.

வந்தனம், வாழ்த்துகள்.

சுவாமிநாதன் said...

அருமையான விளக்கம் தங்களுடன் பழகும் நண்பர்களை பற்றி அறிந்க்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சுவாமிநாதன்.மோ - மதுரை

Rudras Breeders said...

Guys, I have uploaded bogar 7000 pdf file. Sorry that I couldnt make out most of it.If any truly sweet,frank and pure hearted souls happened to read my entry, please do explain the master piece with day to day herbs names and saaba nivarthi mantras too. I have downloaded multiple part of this file from usetamil.forumation.com and binded them into a sigle file for easy reading. Below is the link....

http://rapidshare.com/files/446151049/bogar7000.pdf

Unknown said...

@sathy file not found in rapid share..

Unknown said...

அதிகம் சம்பதுல்லவன் என்றால் என்ன?

Post a comment