சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் வகையும், தலை முடியும்!

Author: தோழி / Labels:

ஆண்களின் உடல் அமைப்பினை வைத்து அவர்களை நான்கு வகையாக அகத்தியர் அருளியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இவர்களை இனம் காண்பதைப் பற்றியும் அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கின்றார். பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு பாடல்களை தவிர்த்து பாடலின் கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

விதவஸ்தசுபசாதி

இந்த வகை ஆண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் வாகுடன் நேர்த்தியான அங்கங்களை கொண்டு, அழகிய உடற்கட்டினை கொண்டிருப்பார்கள் என்றும்,எப்பொழுதும் சூடான உணவையே விரும்பி உண்பவர்களாக இருப்பர் என்கிறார். பொதுவில் தூய்மையான நல்லொழுக்கமும் எப்போதும் உண்மையையே பேசும் இயல்பினராக இருப்பர் என்கிறார் அகத்தியர்.

பயிரபதி சாதி

இந்த வகை ஆண்களின் தலையானது உயர்ந்தும்,அகன்ற தடித்த நெற்றியினை கொண்டிருப்பர் என்கிறார்.மேலும் இவர்களின் காதுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்குமாம். இத்தகையவர்கள் சூடான உணவை வெறுப்பவர்களாக இருப்பர். பொதுவில் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

சாமசாதி

இந்த வகையான ஆண்கள் தோற்றத்தில் முரட்டுத் தனமாக தென் பட்டாலும் மனதளவில் மென்மையானவர்களாகவும், நல்ல இயல்பினராகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என்கிறார். மேலும் சூடான உணவினை சிறிது சிறிதாய் ரசித்து உண்ணும் தன்மையுடைவர்கள் என்கிறார்.

பிரகாசாதி

இந்த வகையான ஆண்கள் செம்மையான முகமும் நீண்ட வெண்மையான பற்களும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும். பொதுவில் இத்தகையவர்கள் கபடத்தனம் நிறைந்தவர்களாக, பொய் பேசும் இயல்பினராகவும் இருப்பர் என்கிறார்.

இது தவிர சித்தர்கள் மனிதர்களின் அவயங்களின் அமைப்பினை வைத்து அவர்தம் இயல்பினை கணித்தும் கூறியிருக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரையில் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மீசை, தாடிகள், மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பு, தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், விந்து, பீஜங்கள், ஆண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து பலன் கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் சில அவயங்களைப் பற்றிய குறிப்புகளை இனி பார்ப்போம்.

தலை முடி

  • தொடுவதற்கு மிருதுவாகவும்,அதே நேரத்தில் உறுதியான முடியையுடையவர்கள் மிகுந்த ஆண்மையுடையவர்களாம், இத்தகையவர்கள் குளிர்ச்சியுள்ள சரீரத்தையுடையவர்களாக இருப்பார்களாம்.
  • தொடுவதற்கு மிருதுவாகவும்,கீழே தொங்கிக் கொண்டிருக்கும் முடியுள்ளவர்கள் இரத்த பிடிப்புயுடையவர்களாயும்,உஷ்ண உடம்பை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
  • அதிக அளவில் அடர்த்தியுடன், விரைந்து வளரும் இயல்புடைய முடியுடையவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படுவார்களாக இருப்பார்களாம்.
  • அடர் கருப்பு நிறமாகவும், அதே நேரத்தில் சுருள் சுருளாயுமிருக்கிற முடி உடையவர்கள் அதிக உஷ்ணமுடையவர்களாக இருப்பார்களாம்.
  • நேராகவும், முடிவில் முள்ளம்பன்றியின் சிறு முள்ளைப் போலும் உள்ள முடியையுடையவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்களாம்.
  • வழவழப்பானதும், வளைந்த முடி உள்ளவர்கள், நேர்மையானவர்களாயும், விஷய விவகாரங்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடைவர்களாக இருப்பார்களாம்.
  • பளிச்சென பஞ்சு போல மிருதுவான முடி உடையவர்கள் பலவீனமானவர்களாகவும், நோயாளிகளாயுமிருப்பார்களாம்.

ஆச்சர்யம்தானே!, பதிவின் நீளம் கருதி மிகுதியை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Soundarraju said...

Arputhamaana Pathivu

Vaalthukkal Tholi

Soundar

வசந்தா நடேசன் said...

கண்டுபுடிச்சிட்டேன், நான் விதவஸ்தசுபசாதிங்கோவ்,,அருமை, நன்றிகள்.

Sankar Gurusamy said...

Very Informative. Keep continuing.

http://anubhudhi.blogspot.com/

பாலா said...

அன்புள்ள தோழியே ,

எங்களைய குழப்பிவிட்டிங்க போங்க ..

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

siva said...

hi
correct match ya
thanks

http://tv-actors.blogspot.com/

ப்ரியமுடன் வசந்த் said...

;-)

Siva chakra said...

வணக்கம் தோழி,

"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி"

தங்களின் பதிவு அருமையான ஆய்வின் தெளிவான வெளிப்பாடு ,

நன்றி ... .


தங்களின் சித்தர் பணி என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......
என்றும்..நட்புடன்
chakra....
http://shivasiddhargal.blogspot.com

RAVINDRAN said...

தோழியே,
வாழ்த்துக்கள்.

கயல் said...

இதெல்லாம் ஆச்சர்யமாத்தான் இருக்கு!

சுவாமிநாதன் said...

வணக்கம் தோழி, ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுடைய படைப்புகள் அனைத்தையும் ஒரு pdf வடிவில் தொகுத்து வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

நன்றி,
சுவாமிநாதன். மோ - மதுரை

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் அழகாக ஆண்களை பற்றி பதிவு இட்டு இருக்கிறார்கள் .சில ஆண்கள் குள்ளமான உருவத்துடனும் ,சொட்டைதலையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள் .இது அகத்தியரின் அனுபவப்படி
எந்த வகையில் சேரும் ,நண்பர்களே விளக்கம் தாருங்கள்.

vinnoli said...

சித்தர்களைப் பற்றி பேச,எழுத இன்னும் உங்களிடம் நிறைய உள்ளது.மனமது செம்மையானால் உருவங்கள் பொய்களாகும்.வேறு எதாவது எழுதவும் தோழி.....மா.சா.கவிராஜன்

Unknown said...

எனது மீசை முடி மற்றவர்களை போல் அல்லாமல் நேராக நிற்கிறது காரணம் என்ன.இதை நீக்க முடியுமா

Unknown said...

Oru blog potta adha muzhumaiya podunga please,... Nalaiku aduththa varamnu bitu, bita TV serial mari potu verupaethathinga,... Padikra virupamaey poirum

Post a comment