சாமுத்ரிகா லக்‌ஷணம் -ஆண்களின் வகைகள்!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பழமையான நூல்கள் இருந்தாலும் காலத்தால் சித்தர்களின் பாடல்களில் காணப் படும் தகவல்களே மிகப் பழமையானதாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளில் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி தனி நூல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் தமிழில் இம்மாதிரி தனி நூல்கள் ஏதும் நமக்கு கிடைக்க வில்லை. சித்தர்களின் பாடல்களின் ஊடே சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றிய தகவல்கள் விரவியிருக்கிறது. இந்த பதிவுகளில் நான் பகிர இருக்கும் தகவல்கள் அனைத்தும் அகத்தியர், போகர், தேரையர் ஆகியோரின் நூல்களில் இருந்து திரட்டப் பட்டவை. அந்த நூல்களின் பெயர்கள் பின் வருமாறு...

அகத்தியர் அருளிய “அகத்தியரின் ஏம தத்துவம்”

அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000”

போகர் அருளிய “போகர் 12000”,

தேரையர் அருளிய “தேரையர் நயனவிதி”


ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பெரும் பிரிவாக வைத்து சாமுத்ரிகா லக்‌ஷணம் கூறப்பட்டிருக்கிறது. இரு பாலினத்தவரிலும் வெவ்வேறு வகைகள் இருப்பதாக துவங்கி அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கான இயல்புகளை பட்டியலிட்டிருக்கின்றனர்.இந்த வகையில் துவக்கத்தில் ஆண்களைப் பற்றி பார்ப்போம்.அகத்தியர் ஆண்களை பின் வருமாறு வகைப் படுத்துகிறார்.


"சித்தியென்ற ஆண்சாதி நாலுண்டுகேளு
செப்புகிறேன் பாலகா புலத்தியனேகேள்
வித்தியென்னும் விதவஸ்தசுபசாதி யென்றுபேரு
விவேகமுள்ள பயிரபதி சாதியென்றும்பேரு
சுத்தியெனும் சாமசாதி யென்றும்பேரு
சைதன்ய பிரகாசாதி யென்றும்பேரு
முத்தியெனு ஆண்சாதி நான்கின்பேர்கள்
முக்கியமாய்ச் சொல்லிவிட்டோம் ஆண்சாதிநாலே"

- அகத்தியர் -

ஆண்களில் நான்கு வகையினர் இருப்பதாக தன் மாணவர் புலத்தியருக்கு கூறிடும் அகத்தியர், அந்த வகைகளின் பெயர்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

விதவஸ்தசுபசாதி
பயிரபதி சாதி
சாமசாதி
பிரகாசாதி

பதிவின் நீளம் கருதி ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷண விஷயங்களை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

பாலா said...

அன்புள்ள தோழியே ,

ஆரம்பமே அமர்க்களம் . அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கும்.

குருவருளினால்-

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

RAVINDRAN said...

தோழியே,
மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து சஸ்பென்ஸ்ஆக முடித்து விட்டீர்கள். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
நன்றி
வணக்கம்.

Pream Kumar /HSE -Engineer said...

VERY NICE FRIEND..FROM WHERE YOU ARE COLLECTING ALL THE DETAILS.. I HOPE ALL THE SITHTHARS ARE HELPING YOU IN ALL THE WAYS TO COLLECT THE DETAILS...
I`M ALSO HAVING BLOG ABOUT SITHTHARS...BUT AFTER SEEING YOURS ..I DONT KNOW HOE TO CONTINUE...NEED YOUR APPROVAL AND HELP TO CONTINUE..
MY BLOG"www.siththan.tamilblogs.com" .PLS SEE AND COMMENT...SITHTHAN

சுவாமிநாதன் said...

ஆரம்பமே அமர்க்களம், நாளைய விடியலுக்கா காத்திருக்கும் வாசகன் - சுவாமிநாதன். மோ, மதுரை

சுவாமிநாதன் said...

ஆரம்பமே அமர்க்களம், நாளைய விடியலுக்கா காத்திருக்கும் வாசகன் - சுவாமிநாதன். மோ, மதுரை

Unknown said...

நன்றி

Unknown said...

என் அன்புத் தமிழ் இனம் தந்த ,
அருமை தோழியே ,

"தும்பை" செடியினை எவ்வாறு சாபம் போக்கி
பிடுங்குவது;
அதற்கு மந்திரத்தை கூறுங்கள்!!!

curesure Mohamad said...

கலக்கிடீங்க மருத்துவரே ..

astrologyworld4u-team said...

உரோம ரிஷியின் ஒரு நூல் இருக்கிறது என்று ஞாபகம். உங்களுக்கு தெரியாதது அல்ல. அவர் சாமுத்திரிகா இலட்சணத்தை பற்றி கூறியுள்ளார்.

Anonymous said...

நன்று..

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் தொடக்க பதிவு அருமையாக அமைந்துள்ளது.ஆனால் இன்று ,அழகு நிலையத்திற்கு சென்று
அழகு படுத்தினால்தான் நாம் அழகு என்றும்,நம்மிடம் தான் சாமுத்திரிகா லக்ஷணம் பொரிந்தஈ இருக்கிறது என்று இறுமாப்பு அடைந்து கொள்கிறர்கள் .என்ன அறியாமை என்று பார்த்திர்களா?

--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Tamil said...

MIKAVUM ARUMAI..
PAYAN ULLA THAGAVAL..

Tamil said...

Migavum arumai..

SSP said...

very nice and useful to every one.every one shld readthis

Unknown said...

http://www.indiblogger.in/forum/topic.php?id=13019

Post a comment