சமாதி நிலை - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: , ,

சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.

இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.

"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"

- திருமந்திரம் -

"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"


- திருமந்திரம் -

இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.

அவையாவன...

தத்துவல்ய சமாதி

சவிகற்ப சமாதி

நிருவிகற்ப சமாதி

அகண்டவிர்த்தி சமாதி

சஞ்சார சமாதி

ஆரூட சமாதி

இனிவரும் பதிவுகளில் இவற்றைத் தனித்தனியாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!

Author: தோழி / Labels: ,

ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.

முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.

இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.

இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.

"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே"

- திருமூலர்-

தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


"தன் வினைதான் தன்னைச் சுடும்."!!

Author: தோழி / Labels:

"எந்த ஒரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்பது நவீன அறிவியல் நமக்குத் தந்த நியூட்டனின் மூன்றாம் விதி. நமது மரபியலில் இந்த ”வினையின் எதிர் வினை” ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசப் பட்டு வருகிறது.ஆனால் அவை மதம் சார்ந்த அல்லது ஒருவரின் எண்ணம்,செயல்,சிந்தனை சார்ந்த நம்பிக்கையின் அங்கமாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஒருவர் தனது முந்தைய பிறவிகளில் செய்த நல்வினை, தீவினை பலன்கள் அவர்களையே வந்து சேரும்.அதே போல பெற்றவர்கள் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் அவர்களின் சந்ததிகளுக்கு வந்து சேரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.நம்மில் பலரும் இந்த கருதுகோளைத்தான் கொண்டிருக்கிறோம்.

ஆனால், குதம்பைச் சித்தர் வித்தியாசமான ஒரு கருத்தினை முன் வைக்கிறார். அதாவது பெற்றோர்கள் செய்த பாவ புண்ணிய பலன்கள் சந்ததியினருக்கு வந்து சேராது. அதே போல பிள்ளைகள் செய்த தரும பலன்கள் பெற்றோரைச் சென்றடையாது. அவரவர் செய்த, செய்கிற வினைகளின் பலன் அவரவரையே சாரும் என்கிறார்.

"தந்தைதாய் செய்தவினை சந்ததிக்குஆமென்பார்
சிந்தை தெளிந்திலரேகுதம்பாய்
சிந்தை அதளிந்திலரே."

- குதம்பைச் சித்தர் -

"பிள்ளைகள் செய்த தன்மம் பெற்றோர்ககு உறுமென்றால்
வெள்ளறிவு ஆகுமடிகுதம்பாய்
வெள்ளறிவு ஆகுமடி."

- குதம்பைச் சித்தர் -

“என்னுடைய பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னைக் காக்கவில்லையே" என்று யாராவது புலம்பினால் அது அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"என்னுடைய பெற்றோர் செய்த பாவத்தால் நான் துன்பங்களை அனுபவிக்கிறேன்" என்று யாரேனும் வருந்தினால் அதுவும் அவர்கள் அறியாமைக் குறிக்கும்.

"இது எனது வினையின் பயனே" என உணந்து தெளிவடைவதே அறிவுடையவர் செயலாகும் என்கிறார் குதம்பைச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முக்திக்கு நாலு வழி!, அவை....

Author: தோழி / Labels:

பிறவா பேரின்ப நிலையான முக்தி அடைதலே சித்த நிலை எனப் படுகிறது.இந்த முக்தி நிலையினை அடைய நான்கு வழிகள் இருப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்கின்றனர். இந்த நான்கு முறைகளைப் பற்றியும் அதனால் கிடைக்கப் பெறும் முக்தி நிலை பற்றியும் சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் நூலில் பின் வருமாறு கூறுகிறார்.

"தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்த நற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்த நல் யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே"

- சிவவாக்கியர் -

"சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே"

- சிவவாக்கியர் -

சரியை

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

கிரியை

சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

யோகம்

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.

ஞானம்

நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நன்றி நண்பர்களே!, நாம் இரண்டாம் ஆண்டில்...

Author: தோழி / Labels:

400 பதிவுகள், 6,50,000 த்துக்கும் அதிகமான பார்வையிடல்கள், 786 நண்பர்கள் பின் தொடர, இன்று சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவு தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என் மாதிரி மிகச் சாமான்யமான ஒரு பதிவருக்கு முதலாம் ஆண்டின் முடிவில் இவையெல்லாம் மிக பிரும்மாண்டமான புள்ளிவிவரங்கள். குருவருளின் துணை மற்றும் உங்கள் அனைவரின் மேலான ஆதரவோடுதான் இத்தனையும் சாத்தியமாயிற்று. நன்றி நண்பர்களே!

சினிமா விமர்சனம், அரசியல் வம்புகள், எமது மக்களின் வலியான பக்கங்கள் என சமகால கூறுகள் ஏதும் இல்லாமல், துறை சார்ந்து, ஒரே தலைப்பில் தினமும் தொடர்ந்து எழுதுவதில் நிறையவே நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கல்லூரி படிப்புக்கு பங்கம் வராமல், வார இறுதியில் அடுத்த வாரத்திற்கான பதிவுகளை யோசித்து, முழுமையாக தயார் செய்து பதிவேற்றுவது அநேகமாய் நான் மட்டுமாகத்தான் இருக்கும். இந்த இடத்தில்தான் குருவின் மேலான வழிகாட்டுதல் எனக்கு இருந்ததாக நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் என்னிடமிருந்த் தகவல்கள் அனைத்தையும் வலையேற்றி விடவேண்டும் என்கிற வேகம் மட்டுமே இருந்தது. அதன் பொருட்டே ஒரே நாளில் இரண்டு மூன்று பதிவுகளெல்லாம் வலையேற்றினேன். அப்போது இந்த பதிவுலக சூட்சுமங்கள் ஏதும் தெரியாவளாகவே இருந்தேன். ஆனந்த விகடன் பத்திரிக்கைதான் எனக்கான ஆரம்ப வெளிச்சத்தை காட்டினார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். அதன் பிறகே பலரும் தொடர்ந்து வாசிக்கவும், பின்னூட்டங்கள் இடவும் ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல நிறைய ஹிட்ஸ் வேண்டுமென ஆசைப் பட்டதால், இருக்கிற எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை இனைத்தேன். அதனால் கணிசமாக புதியவர்கள் பலருக்கு எனது பதிவுகள் அறிமுகமானது. ஒரு கட்டத்தில் பதிவுலக அரசியல் மற்றும் அதற்கான சமரசங்கள் எனக்கு சரிவராது என தோன்றிய போது அத்தனை திரட்டிகளில் இருந்தும் விலகிவிட்டேன்.எனது நோக்கமெல்லாம் நம் முன்னோர்களின் அரும்பெரும் தகவல்கள் நிறைய பேருக்கு போய் சேர்ந்திட வேண்டும் என்பதாகவே இருந்தது,இப்போதும் இருக்கிறது.

ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை மெனக் கெட்டு புத்தகங்களுக்கு கொண்டு வந்த பெரியவர்களை நமக்கு இன்று தெரியாது. ஆனால் அவர்கள் செய்த அந்த பணியின் மகத்துவம் எத்தகையது என்பதை இன்றைக்கு நம்மால் உணர முடிகிறது. அவர்கள் வழியில் இந்த தகவல்களை அடுத்த கட்ட ஊடகமான மின்னூடகத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்பதே என்னுடைய முதலும் கடைசியுமான நோக்கம். கடந்த வருடத்தில் சித்தர்களின் பாடல்களை ஒன்பது மின்னூல்களாய் தொகுத்து இங்கே பகிர முடிந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் மேலும் சில மின்னூல்களை பொதுவில் வைத்திட முயற்சிக்கிறேன்.

இலங்கை மண்ணை தாண்டியறியாத எனக்கு இந்த ஓராண்டில் உலகம் முழுவதும் அருமையான பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர் என்பதை இந்த கணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த நண்பர்கள் தரும் ஊக்கம், உற்சாகம்தான் தொடர்ந்து எழுதிட வைக்கிறது. இந்த பதிவின் வளர்ச்சியில் அவர்களின் அக்கறையும், ஆலோசனைகளும், கருத்துக்களும் பெரிய அளவில் பங்களித்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

மீண்டும் ஒரு முறை, எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியையும்,வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய தொடர்ச்சியான அன்பு,அக்கறை, ஆலோசனை,ஒத்துழைப்பு ஆகியவையே என்னை தொடர்ந்து எழுதிடச் செய்திடும்.

நட்புடன்,

தோழி.

கடந்த ஒரு வருடத்தில் இந்த வலைப்பூவின் வளர்ச்சியைக் காட்டிடும் வரை படம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நிலைக்காது நிலையற்ற இன்பம்!

Author: தோழி / Labels:

புற வாழ்க்கை தரும் சுகங்கள் யாவும் நிலையற்றவை என்றும், அத்தகைய இன்பங்கள் நம்மை மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல வைக்கும், எனவே நிலையற்ற இன்பங்களை எதுவென புரிந்து அவற்றை ஒதுக்கி பிறவா பேரின்ப நிலையினை பெற முயற்சிக்க வேண்டும் என்பதை அநேகமாய் எல்லா சித்தர்களும் தங்கள் சீடர்களுக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் பாம்பாட்டி சித்தர் அருளிய பாடலொன்றினை இன்று பார்ப்போம்.

"மணக்கோலம் கண்டுமிக மன மகிழ்ந்து
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலம் கண்டுபின்னும் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே!"

- பாம்பாட்டிச்சித்தர் -

இரு மனம் இணையும் திருமணம் என்பது எப்போதுமே கொண்டாட்டமான ஒரு துவக்கம்தான், ஆனால் அந்த கொண்டாட்டத்தின் தொடர் விளைவுகள் இன்பமயமாகவே இருக்கிற்தா?. பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்வித்து பேரன், பெயர்த்திகளைப் பார்த்து வீடு கட்டி, வாகனம் வாங்கி தோட்டம் துரவுகளின் மூலம் செல்வம் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன், வேறென்ன வேண்டும் எனச் சொல்லும் மனிதர்களே!

இறந்து போனவனின் பிணத்தைக் கண்டு, நாமும் ஒரு நாள் இது போலாவோம் என்பதை உணர்ந்து, நிலையற்ற இந்த இன்பங்களை துறந்து பேரின்ப பெருவாழ்வினை தேடாடதவர்கள் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல்வதற்கான அமைப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.

இவர்களின் நிலை இதுதான் என்பதை தெரிந்து தெளிந்து விட்டோமென்று ஆடு பாம்பே என முடிக்கிறார்.

நாளைய பதிவு இந்த வலைப்பூவின் மிக முக்கியமான பதிவு!! :)

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”கபாலதீட்சை” என்றால் என்ன?

Author: தோழி / Labels:

மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.

"சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு
நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்
சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு
கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே"

- மச்சமுனி -

"மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று
வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு
சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்
பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே"

- மச்சமுனி -

சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும்.

இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார்.

"பொருந்திய தீட்சையைப் புனிதம தாக
வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு
திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்
இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"

- மச்சமுனி -

"ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"

- மச்சமுனி -

மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம்.

மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”தசதீட்சை”......8,9,10 !

Author: தோழி / Labels:

தசதீட்சை வரிசையில் இன்று மீதமிருக்கும் மூன்று தீட்சைகளை பார்ப்போம்.

எட்டாம் தீட்சை

செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு
பையவே பிரம பதியிட மாகிக்
கையது நெல்லிக்கனி யதுபோல
வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்
தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்
தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்
நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ஒன்பதாம் தீட்சை

நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு
உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்
சின்மயமான தெரிசனங் காணும்
தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

பத்தாம் தீட்சை

சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு
கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து
ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்
தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார்.இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.

இத்துடன் தசதீட்சை விவரங்கள் நிறைவடைந்தன. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”தசதீட்சை”......5,6,7 !

Author: தோழி / Labels:

தசதீட்சை வரிசையில் இன்று ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாவது தீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.இவை ஒவ்வொன்றாக செய்து சித்தியடைந்த பின்னரே அடுத்தடுத்த தீட்சையை முயற்சிக்க வேண்டும். இந்த வரிசையை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாதென்கிறார் மச்சமுனிவர்.

ஐந்தாம் தீட்சை

தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு
ஆனது தம்மென் நன்புட னீயும்
வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்
ஊனுடன் தேகம் உறுதியு மாமே.

நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர்,ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.

ஆறாம் தீட்சை

உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு
நெறி தவறாமல் நேர்மையில் நின்று
சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்
பருதி போல் தேகம் பக்குவமாமே.

ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.

ஏழாம் தீட்சை

பக்குவ மேழாந் தீட்சையைக் கேளு
திக்கும் பொருளாய்த் தானேரம் மென்று
சிக்குமிடந் தன்னில் சென்றுரு செபித்தால்
திக்கு விசையஞ் செய்யலு மாமே.

ஆறாவது தீட்சை முறையாக செபித்து முடிந்ததும், ஏழாவது தீட்சையாக "ரம்" என்ற மந்திரத்தை முழு மனதுடன் ஒருமண்டலம் செபிக்க அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வல்லமை சித்திக்குமாம்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

அடுத்த பதிவில் மிச்சமிருக்கும் மூன்று தீட்சைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். காத்திருங்கள்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


"தசதீட்சை"......2,3,4!

Author: தோழி / Labels:

தசதீட்சை வரிசையில் இரண்டாம்,மூன்றாம் மற்றும் நான்காம் தீட்சைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த முதல் தீட்சையை முடித்த பின்னர் குருவருளை வேண்டி வணங்கி இரண்டாம் தீட்சையை செய்திடல் வேண்டும்.இதே வகையில் ஒவ்வொரு தீட்சையாக செய்துமுடிக்க வேண்டுமென்கிறார் மச்சமுணிவர்.

இரண்டாம் தீட்சை

தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு
ஆனது உம்மென் றள்புட னீயும்
வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்
கோனவ னருள்தான் குடியிருப்பாமே.

இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.

மூன்றாம் தீட்சை

குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு
முடியினில் சென்று முழுமனதாக
அடியினில் சிம்மென் றன்புட னீயும்
வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.

இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.

நான்காம் தீட்சை

முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு
அத்த னருளை யன்புட நோக்கி
உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்
சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.

மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.

அடுத்த மூன்று தீட்சைகளைப் பற்றி நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


”தசதீட்சை” - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

இந்த வலைப் பதிவினை புதிதாக வாசிக்க துவங்கியுள்ள நண்பர்கள் இந்த இனைப்பை வாசித்த பின்னர் இந்த பதிவுகளை அணுகினால் புரிதல் எளிதாக இருக்கும்.பிறவா பேரின்ப நிலையை நோக்கிய நெடிய பயணம் அத்தனை எளிதானதில்லை.ஆனால் குருவருளின் வழி காட்டுதல் இந்த பாதையில் தடையின்றி பயணித்து இலக்கினை அடைந்திட உதவும்.

ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில் நடைபெறுதல் அவசியம் என்கின்றனர் சித்தர்கள். இதனையே பொதுவில் தீட்சைகள் என கூறியிருக்கின்றனர்.இது தொடர்பாக முன்னர் பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் இனி வரும் பதிவுகளில் மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர்.இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.

தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..

திரமான தீட்சை செப்புவேன் கேளு
கரமான நெல்லிக்கனி யதுபோல
சரமான வாசி சங்கர கெவுரி
வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.

இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.

இன்றைய பதிவில் முதலாவது தீட்சையைப் பற்றி பார்ப்போம்.

கேளு அம்மென்று கெடியாக மண்டலம்
நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்
சேலுடன் தேகந் திரமது வாகும்
மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.

முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறுமாம்.

நாளைய பதிவில் அடுத்தடுத்த தீட்சை வகைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:

இன்றைய பதிவில் பெண்களின் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி தொகுக்கப் படாத தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 • இயல்பைக் காட்டிலும் குட்டையாகவோ,அல்லது அளவுக்கு அதிகமான உயரமாகவோ இருக்கும் பெண்கள் நீதிக்குப் புறம்பான காரியங்களை செய்யத் தயங்காதவர்களாக இருப்பார்களாம்.
 • உருண்டையான வடிவமும்,செழுமையான முடிகள் இல்லாத இடுப்பையுடைய பெண்கள் மிகுந்த அழகிகளாக இருப்பார்களாம்.
 • முடியில்லாத சன்னான கூர்மையுள்ள மார்பகங்களை உடைய பெண் எல்லாப் பாக்கியங்களும் பெற்றவளாக இருப்பாளாம்.
 • சாய்வாய் வக்கிரமாய் பார்க்கும் தன்மை கொண்ட பெண் விபச்சாரியாக இருப்பாளாம்.
 • யானையின் துதிக்கை போன்ற அமைப்புடைய தொடையும், அத்தகைய தொடைகள் சமனாகவும் இருந்தால் அவள் செல்வச்சீமாட்டியாக இருப்பாளாம்.
 • நேர்த்தியான உடல் அங்கங்களையும்,தாமரை மொட்டுப்போல குவிந்த மார்பகங்களாஇயும்,பூரணமான தொடைகளைக் கொண்டு பெண்யானைப் போல நடையும் கொண்ட பெண் அழகிய கண்களுடன் சிறந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களாம். எந்த ஆடவரும் இவர்கள் அழகில் மயங்கிவிடுவார்களாம்.
 • மார்பகங்கள் வற்றி இருந்தாலும், ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் இருந்தால் அத்தகைய பெண் வறுமையால் வாடுவாளாம்.
 • ஒரு பெண்னின் வயிறானது புள்ளிமானுடைய வயிறு போலிருந்தால் அவள் புமியை ஆளும் சக்தி கொண்ட பிள்ளையைப் ஈன்றெடுப்பாளாம்.
 • குயிலின் ஓசையை ஒத்த குரலில் பேசிச் சிரிப்பவர்கள் அதிக அதிர்ஷ்டம் உடையவர்களாம்.
 • பளபளக்கும் எண்ணெய்ப் பசையையுடைய பாதங்களையுடைய பெண்களிடம் நில புல்கன்கள், வாகனங்கள் போன்ற சொத்துக்கள் எப்போதும் நிறைந்திருக்குமாம்.
 • பாதங்களை திடும் திடும் என்று வைத்து நடந்தாலும், காலடிகள் நீண்டிருந்தாலும் கெடுதல் என்கின்றனர்.
 • பாதத்தின் விரல் நகங்கள் சிவந்து கண்ணாடி போன்றிருந்தால் நன்மை என்றும்,நகம் பிளந்து வெளிறிப் போயிருந்தால் துக்கம்தான் விளையுமாம்.
 • குளிர்ச்சியாகவும் சமமாகவும் உள்ள உள்ளங்கால்களையும், குவிந்த உள்ளங்கைகளைக் கொண்ட பெண் அரசியாவாளாம்.அவலை திருமணம் செய்கிறவன் பாக்கியவான் என்கின்றனர்.
 • தாமரை மொட்டை ஒத்த கணுக் கால்களும்,மிருதுவாகவும் வியர்வையில்லாத உள்ளங்கைகளும் அமையப்பெற்றிருந்தல் அவள் கல்வியறிவிலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவாளாம்.
இத்துடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றிய தொடர் நிறைவுக்கு வருகிறது. பொதுவில் பகிர இயலாத மேலும் பல தகவல்களையும் உள்ளினைத்து இந்த தொடரை ஒரு மின்னூலாக்கி பொதுவில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

நாளைய பதிவில் சித்தர்கள் அருளிய புதியதோர் தகவல் ஒன்றுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் நலமும், வளமும்!

Author: தோழி / Labels:

இந்த சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் அனைத்தும் அருட் சித்தர்களான அகத்தியர், போகர், தேரையர் ஆகியோரின் நூல்களில் இருந்து சேகரிக்கப் பட்டவை. பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி பாடல்களை தவிர்த்திருக்கிறேன்.இந்த வரிசையில் இன்றைய பதிவில் தொகுக்கப் பட்ட, மேலும் சில தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஒரு பெண்ணின் ஐந்து விரல்களின் நீளத்தினை அளந்து, அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அந்த கயிறு/நூல் துல்லியமாய் அந்த பெண்ணின் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால், அவள் கணவனுடன் பல வருடங்களுக்கு மேல் இணைந்து மகிழ்வுடன் வாழ்வாளாம். அவளது கணவன் உயர் பதவி வகிப்பானாக இருப்பான் என்கின்றனர்.
 • ஒரு வேளை அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நிற்குமாயின்,அத்தகைய பெண் அறிவிற் சிறந்த, நீண்ட ஆயுளுடன் கூடிய பிள்ளைகளை ஈன்றெடுப்பாளாம்.
 • பெண்ணின் கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவள் ஓவியம் , நாட்டியம், இசை போன்ற கலைகள் ஏதேனும் ஒன்றில் சிறப்பான தேர்ச்சி உள்ளவளாக இருப்பாளாம்.
 • பெண்ணின் விரல்கள் பார்த்த மாத்திரத்தில் தாமரை மோட்டுக்கள் போல் இருந்தால் அத்தகைய பெண் மிகுந்த புத்திசாலியாகவும், தன் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்குவதில் மந்திரி போலவும் இருப்பாளாம்.
 • பெண்ணின் கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடல் நலம் மிக்கவர்களாகவும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
 • பெண்ணின் மணிக்கட்டுகள் செம்மையாய் அமையப் பெற்றிருந்தால் அத்தகைய பெண்ணால் கணவனுக்கு செல்வம் பெருகுமாம்.
 • பெண்ணின் கைகள் தாமரை மலரைப் போலிருந்தால் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவளாக இருப்பாளாம்.
 • பெண்ணின் உள்ளங்கைகள் அதிகக் குழியில்லாமலும் அதிக உன்னதமில்லாமலும் இருப்பது நன்மை அளிக்காதாம்.
 • உள்ளங்கை வரிகள் அல்லது உள்ளங்கையில் அதிக ரேகைகளையுடைய பெண்கள் விதவையாகாமல் நலத்துடன் வாழ்வார்களாம்.

மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.நாளையுடன் இந்த சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர் நிறைவுக்கு வருகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - மெய்க்கர்பம்?, பொய்க்கர்பம்?

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பது உடற்கூறியல் சார்ந்த கலை என்பதை முந்தைய பதிவுகளில் ஓரளவு பார்த்து விட்டாலும், பெண்களுக்கான மிக முக்கியமான உடல் நல கவனிப்பு தொடர்பான தகவல் ஒன்றினையே இன்று பார்க்க இருக்கிறோம். பெண்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல் இது.

பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.

சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
 • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
 • பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
 • மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
 • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
 • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
 • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
 • மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
 • பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.

மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...

இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.

சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் குறித்த மேலதிக விவரங்களுடன் நாளை சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் முறை!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷண்ம் என்பது அழகியல் சார்ந்த கலை என்பதான கருத்தோட்டமே நம்மில் பதிவாகி இருக்கிறது. அடிப்படையில் சாமுத்ரிகா லல்ஷணம் என்பத் உடலியல் மற்றும் உடற்கூறியல் சார்ந்த ஓர் அறிவியலாகவே பழம் தமிழகத்தில் நிலவியிருந்திருக்கிறது.ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரிடம் இருக்கும் குறைபாடுகள் அல்லது நோய்களை அவதானித்துச் சொல்லும் பரம்பரை வைத்தியர்கள் இனறைக்கும் நம்மிடம் இருக்கின்றனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் அருகி வருவது வேதனையான நிதர்சனம்

இந்த வகையில் இன்றைய பதிவில் பெண்கள் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நவீன அறிவியலில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது எளிதான காரியம்.ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ந்மது முன்னோர்கள் கருவுற்ற பெண்ணின் தேக லக்‌ஷணங்களை வைத்தே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை எளிதாக கண்டறிந்திருக்கின்றனர்.

கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால்...

 • கருத்தரித்த பெண்ணுக்கு வலப்பக்க மார்பகமானது இடதுபக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
 • வலது பக்க மார்பகத்தை கசக்கினால் அதிலிருந்து வெண்மையான திரவம் வெளியேறுமாம்.
 • வயிற்றினுள் குழந்தையானது வலதுபக்கமாகச் சாய்ந்திருப்பது போல தோன்றுமாம்.
 • ஒவ்வொரு தவவையும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரானது ஒருவித மாற்றத்துடன் இருக்குமாம்.
 • இத்தகைய பெண்கல் உட்கார்ந்து எழுந்திருக்கும் எழுந்திருக்கும் போதும் வலதுகையையே உன்றிக் கொள்வார்களாம்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று அறியலாமாம்.


கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால்...

 • கருத்தரித்த பெண்ணுக்கு இடதுபக்க மார்பகமானது வலப்பக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
 • உட்கார்ந்து எழுந்திருக்கும் போது இடதுகையை உன்றிக் கொள்வார்களாம்.
 • முகத்தின் நிறத்தில் சிறிய மாற்றம் தென்படுமாம்.
 • அதிக சோம்பல் ஏற்படுவதுடன், சிற்றுண்டிகளில் அதிகம் பிரியம் ஏற்படுமாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறியலாமாம்.

நாளைய பதிவில் மெய் கர்பம், பொய் கர்பம் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.....காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர்பாக பல்வேறு மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன.இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்,கறிக்கு உதவாது என்பது மாதிரியான கருத்துக்களே பரவலாக உள்ளன.எனக்கு தெரிந்த வரையில் இந்த துறையில் முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரியவில்லை.எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவ முன் வருமானால் அரிய பல தகவல்களை நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, விலங்குகள், மரங்களுக்கு என தனித் தனியே சாமுத்ரிகா லக்‌ஷண நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.உதாரணம் சொல்வதானால் வராகமிகிரர் தனது நூலில் குதிரைகளுக்கும், யானைகளுக்குமான சாமுத்ரிகா லக்‌ஷண்ங்களைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.

இன்று பெண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர்கள் கூறியதன் தொடர்ச்சியினை பார்ப்போம்.

கண்கள்

 • கண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.

 • கலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.

 • மீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

வாய்

 • நாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.

 • நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.

 • குவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.

காதுகள்

 • அளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.

 • சரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

 • விசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.

 • முகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.

 • கரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.

கூந்தல்

 • சுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.

 • மிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.


 • கரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.

 • கட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.

பற்கள்

 • எண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம்.

கழுத்து

 • குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.

இத்துடன் பெண்களின் முகம் தொடர்பான சாமுத்ரிகா லக்‌ஷண குறிப்புகள் முடிவடைந்தன. நாளைய பதிவில் பெண்களின் பிற பாகங்கள் தொடர்பாக சித்தர் பெருமக்கள் அருளியுள்ள குறிப்புகளை காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் உடலும், முகமும்

Author: தோழி / Labels:

அங்க இலக்கணம் என்பது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் கலைகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் இது அழகியல் சார்ந்த ஒன்றாக மாறியிருக்கலாம்.ஒருவரின் புறத் தோற்றத்தை மட்டுமே கொண்டு அவர்தம் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த இயல்புகளை அவதானித்து அறிவது எளிதானதல்ல. வாருங்கள் இன்றைய பதிவில் பெண்களின் உடலியல் மொழியினை சித்தர்கள் எவ்வாறு வகுத்துக் கூறியிருக்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

உடல்

 • பெண்களின் உடலானது பூவினைப் போன்று மென்மையாக இருக்குமானால் அவள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்களாம். எல்லா வளங்களுட்ம் நிறைந்திருக்குமாம்.இங்கே வளங்கள் என்பது உடல் நலமாக இருக்கக் கூடும்.
 • பெண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு சிறப்பையும் மேன்மையையும் அடைவாளாம்.
 • பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, எலுமிச்சை வாசனை, தாமரைப்பூ வாசனை உடம்பில் வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம் செய்வாராம்.
 • பெண்ணின் முகம் தங்கத்தைப் போல பொலிந்து சிவந்து முகத்தினை உடையவளிடம் எப்போதும் தர்ம சிந்தை மேலோங்கி இருக்குமாம்.
 • பூரண சந்திரனைப் போல் முகவசீகரமும், சூரியன் உதிக்கும் காலத்தில் உள்ளதைப் போல பிரகாசமான தேஜஸும், பெரிய கண்களையும் உடையவள் எப்போதும் மகிழ்வாக இருப்பதுடன் அவளை சூழ இருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருப்பாளாம்.

புருவம்

 • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்.
 • வளைந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவர்களின் கன்ன கதுப்பு மலர்களைப் போல பளபளப்புடன் இருக்குமாம்.

நெற்றி

 • ஒரு பெண்ணின் நெற்றியில் ஐந்து ரேகைகள் இருந்தால் அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், சிறப்பான சிந்தனை வளமும் கொண்டவளாக இருப்பாளாம்.

உதடுகள்

 • பொதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.என்ன மாதிரி நன்மைகள் என்பது பற்றி தகவல்கள் இல்லை.தேடிப் பார்க்க வேண்டும்.
 • உருண்டை வடிவமாகவம் சதைப்பிடிப்புடன் கூடிய உதடுகளைக் கொண்ட பெண்களின் வாழுவு சிறப்பாக அமையுமாம்.
 • ஒரு மங்கையின் மேல்உதடு பெரிதாயிருப்பின் அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், சண்டைக் கோழிகளாகவும் இருப்பார்களாம்.
 • உதடுகள் சிவந்து தாமரை இதழ் போல இருக்கும் பெண்கள் அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், பிறரை வழிநடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

பெண்களின் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.











சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - பெண்களின் வகைகள்!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் இனி வரும் பதிவுகளில் பெண்கள் குறித்து சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை பார்ப்போம்.ஆண்களைப் போலவே பெண்களிலும் நான்கு வகையினர் இருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார்.அந்த பெண்களைப் பற்றியும் அவர்களை அடையாளம் காணும் வகையினை பின் வருமாறு விளக்குகிறார்.

பெருகுவதற்குப் பெண்ணிடச் சாதி நாலும்
பிறித்து நாம் ஒவ்வொன்றாய்ப் பேசக்கேளு
வருவதற்கு வத்தினிதான் பிற்குலமாகும்
யடவானிச் சங்கினிதான் சத்திரிய குலமாகும்
வறுவதற்கு வசியாளே சித்தினிதானாகும்
வசனித்தோம் பத்மினிதான் சூத்திர குலமாகும்
நறுவதற்கு நால்சாதி குலமே சொன்னோம்

- அகத்தியர் -

காணப்பா புலத்தியனே பெண்சாதி நாலும்
கருவறிந்து சொல்லுகிறோம் வரணங்கேளீர்
பேணப்பா அத்தினி ஸ்தான்கேரும்
பேணிப்பார் வெளுமை வரணம் பேதமில்லை
நாணப்பா சங்கினி தான் மஞ்சள் நிறமாகும்
நலமான சித்தினி தான் செழுமை நிறமாகும்
ஆணப்பா பத்மினிதான் கருப்பு வாரணமாகும்
அருளினோம் நால்சாதி வரணம் இதுவாமே.

- அகத்தியர் -

பெண்களில் நான்கு வகையினர் இருப்பதாகவும், அவர்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அழைக்கிறார் அகத்தியர்.இந்த வகை பெண்களை பின் வருமாறு இனம் காணலாம் என்கிறார்.

அத்தினி

பெண்களில் இவர்களை உயர்ந்த வகையினர் என்கிறார்.வெளிர்மையான நிறத்தை உடையவர்களாம். அழகியகண்களும், மென்மையான தலை முடியையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

சங்கினி

நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உடைய இந்த வகை பெண்களுக்கு சங்கு போன்ற கழுத்து அமைந்திருக்குமாம்.அழகான மற்றும் அளவான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்களாம் சங்கினி வகைப் பெண்கள்.

சித்தினி

மெலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர உடலமைப்பைக் கொண்ட இந்த வகைப் பெண்டிர் செழுமை நிறமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் மேனி கதகதப்பாக இருக்குமாம்.

பத்மினி

இந்த வகைப் பெண்கள் தடித்து உயர்ந்த உதடுகளையும், செம்பட்டை நிற கூந்தலையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் கரிய நிறம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பகங்கள், தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், தொடை, பெண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து சித்தர்கள் பலன் கூறியிருக்கின்றனர்.

இனி வரும் பதிவுகளில் ஆண்களைப் போல பெண்களின் அங்கங்களை தனித் தனியே விரித்து விவரிக்காமல், பொதுவில் பகிரக் கூடிய தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களுக்கான நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

பத்து முதல் பதினைந்து பதிவுகளுக்குள் சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரை முடித்து விடுகிற திட்டத்தோடுதான் துவங்கினேன்.ஆனால், சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தேடத் தேட அதன் எல்லைகள் விரிவாகிக் கொண்டே போகின்றது.

ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவிலான தகவல்களை பத்திருபது பக்கங்களில் முடித்து விடுவதில் நிறையவே சிரமங்கள் இருக்கின்றன. எனினும் தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி இன்றுடன் ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷண விரவங்களை நிறைவு செய்திட இருக்கிறேன்.

இன்றைய பதிவில் ஆண்களின் நகங்கள், மார்பகங்கள்,தொப்புள், முதுகு பற்றி சித்தர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

நகங்கள்

 • விகாரமாகவும் நிறமற்ற நகங்களைக் கொண்டவர்கள் எப்போதும் மற்றவர்களிடத்தில் அடிமைத்தொழில் செய்வார்களாம். கரடுமுரடான உடைந்த நகங்களையுடையவர்கள் ஏழையாக இருப்பார்களாம்.
 • பெருவிரல் நகத்தின் மேல் பாகத்தில் கோதுமை போன்ற அடையாளத்தை உடையவர்கள் பெரும் செல்வந்தராக இருப்பார்களாம்.அகண்ட நகங்களையுடையவர்கள் கூச்சமுடையவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • நகங்களின் முனைப்பாகத்தில் வெள்ளைப் புள்ளியிருந்தால் அவர்கள் கண்ணியமுடையவர்களாகவும் நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • நகங்களின் ஆரம்பத்தில் சிவப்பு கலந்த பலவித வர்ணமான புள்ளிகள் இருந்தால் அவர்கள் அதிக கோபமுடையவர்களாகவும், சண்டை கோழிகளாய் இருப்பார்களாம்.
 • நகங்களில் முனையில் கருப்பு நிறமிருந்தால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களாம்.கோணலான நகங்களையுடையவர்கள் மோசக்காரர்களாக இருப்பார்களாம்.சிறியதாகவும், உருண்டை வடிவமாகவும் உள்ள நகங்களை உடையவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம்.

மார்பு

 • சந்திரனுடைய பிறையை போல் எடுப்பான மார்பை உடையவர்ன் வசீகரிப்பவனாய் இருப்பானாம்.அத்தனை எடுப்பான மார்பு இல்லாது இருப்பவன் எடுத்ததெல்லாம் வெற்றி பெருமாம்.
 • உன்னதமாகவும் ,சதை பிடிப்போடும், சுருக்கமோ,அதிர்வோ இல்லாத மார்பை உடையவர்கள் அரசாள்வார்களாம்.மேலும் அவர்கள் நரம்பு மயமான சதைபிடிப்புள்ள பலமான மயிர்கள் கீழ்நோக்கி அமையப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • தட்டையான சமமான மார்பினை உடையவன் தனவந்தனாக இருப்பானான். இலந்தைப் பழத்தைப் போல மார்பை உடையவன் அதிக சக்தியுடைய்வனாக இருப்பானாம். சமமில்லாத மார்பினை உடையவர்கள் தரித்திரர்களாகவும்,ஆயுதங்களால் கொல்லப் படுபவர்களாகவும் இருப்பார்களாம்.

தொப்புள்

 • தொப்புள் பெரியதாக இருப்பவன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டமுடையவனாக இருப்பானாம்.மீனை போன்ற தொப்புள் உடையவர்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்களாம்.
 • தாழ்ந்த தொப்புள் உடையவன் அகால மரணமடைவான் .ஒரு பக்க மடிப்பு இருக்குமானால் நீண்ட ஆயுளை உடையவன். இரு மடிப்புகள் காணப்பட்டால் பெரும் செல்வந்தர்களாகவும், எப்போதும் மன நிறைவோடும் காணப்படுவார்கள்.
 • தொப்புளில் காணப்படும் ஒற்றை மடிப்பு நடுவில் அமையாமல் பிறிதொரு பக்கத்தில் அமைந்திருந்தால் நீண்ட காலம் நலமாக வாழ்வார்கள்.
 • தாமரை உள்ளிருக்கும் விதையின் மேல் தோலை போலிருந்தால் அவன் அரசனாவான்.மூன்று மடிப்புகள் இருந்தால் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஆசானாக வருவான்.
 • விரிவாகவும் உன்னதமாகவும் தொப்புள் ஏழைகளுக்குண்டு, உன்னதமான தொப்புளை உடையவர்கள் அற்ப ஆயுளை உடையாவர்கள்.
 • தொப்புளில் இருக்கும் மடிப்பு நேராயிருக்குமாயின் அவன் மகிழ்ச்சி அடைவான். மடிப்பு விலகியிருக்குமாயின் அவன் பெண்களுக்கு பிரோஜனமற்றவனாக இருப்பான். தாம்பத்திய சுகம் அனுபவிக்க லாயிக்கற்றவன்.

முதுகு

 • மயிர் முளைக்கப் பெற்ற முதுகையுடையவன் சிற்றின்ப பிரியனாக இருப்பான். ஆமையின் முதுகை போல் இருந்தால் அரசனாவான்.
 • குதிரையின் முதுகை போல் இருப்பின் பெண்ணாசை அதிகமாயிருக்கும். முடி இல்லாமல் பளிங்கு போன்ற வழுவழுப்பான முதுகையுடையவர்கள் சுகவாசியாக இருப்பார்கள்.

இத்துடன் ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷணம் நிறைவு செய்து நாளையபதிவில் பெண்களுக்கான தகவல்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்ஷணம்-ஆண்களின் கைகள் - விரல்கள் - உள்ளங்கை...!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணத்தில் ஆண்களின் கைகள்,விரல்கள்,உள்ளங்கை ஆகியவற்றின் அமைப்புகளை வைத்து அவர்தம் இயல்பினை சித்தர்கள் எவ்வாறு வரையறுத்து கூறியிருக்கின்றனர் என்பதைப் இன்று பார்ப்போம். இந்த தகவல்கள் அனைத்தும் அகத்தியர்,போகர் மற்றும் தேரையர் அருளிய நூல்களில் இருந்து திரட்டப் பெற்றவை.

கைகள் - விரல்கள் - உள்ளங்கை

 • கைகள் தடித்தும் சதைப்பிடிப்போடும், முழங்கால் வரை நீண்டு இருந்தால் அவர்கள் அரசர்களாக ஆவார்களாம்.
 • கட்டையான மயிர் முளைத்த கைகளையுடையவர்கள் தரித்திரகளாக இருப்பார்களாம்.
 • மணிக்கட்டில் உண்டான ரேகை நடுவிரலோடு கலந்தாக அமைந்திருப்பவர்கள்ஏராளமான நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்களாம்.
 • கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடம்புக்குச் சிறப்பையும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
 • குழியான உள்ளங்கையும், மிக நெருக்கமான விரல்கள் இருந்தால் ஏராளமான பொருள்களுக்கு சொந்தகாரனாக இருப்பானாம்.
 • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஐந்து விரல்களையும் அளந்து அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அது துல்லியமாய் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால் அவன் நூறாண்டுக்கு மேல் வாழ்வானாம்.
 • அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நின்றால் அவன் நல்ல புத்திரர்களையும் சிறந்த செல்வத்தையும் கொண்டவனாக இருப்பானாம்.
 • கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவன் ரகசிய சாஸ்திரங்களை கற்றறிந்தவனாக இருப்பானாம்.
 • விரலின் நுனிப்பகுதி மெத்தமாயும் பருத்தும் இருந்தால் அவன் திருடனாக இருப்பானாம்.
 • விரல்களைப் பார்த்த மாத்திரத்தில் புலியின் விரல்களைப் போன்ற விரல்களைக் கொண்டவர்கள் மிகுந்த பலசாலிகளாக இருப்பார்களாம்.

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடர்பான மேலதிக தகவலுடன் நாளைய பதிவில் சந்திப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் - ஆண்களின் முகம்...நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷ்ணம் தொடரில் முகமே பிரதானமாய் கருதப் படுவதால்,அது தொடர்பான தகவல்களை விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.அந்த வகையில் இந்த பதிவு ஆண்களின் முகம் தொடர்பான தகவல்களின் நிறைவுப் பதிவு.

ஆண்மை மற்றும் அதிகாரத்தின் சின்னமாக கருதப் படும் மீசையும்,தாடியும் ஒரு மனிதனின் இயல்புகளை கண்டறியும் குறியீடுகளாக இருந்திருக்கின்றன.

மீசை, தாடிகள்

 • மெல்லியதாகவும், மென்மையாகவுமுள்ள மீசை தாடியுடையவர்கள் மெலிந்த தோற்றத்தோடும் பயந்த சுபாபம் உள்ளவர்களாகவும் இருப்பார்களாம.
 • தேவையான அளவு அடர்த்தியுடனும்,நேர்த்தி மிக்கதுமான மீசை தாடியை உடையவர்கள், நல்ல குணமுள்ளவர்களாகவும், நியாயமிக்கவர்களாகவும், தாங்கள் சொல்வதைச் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம்..
 • மீசை தாடியின் ரோமங்கள் கருத்தும் மிகுந்த அடர்த்தியுடன் சிங்கத்தின் பிடரியைப் போன்று அமைந்திருப்பின் அவர்கள் தீர்க்க ஆயுளுடன், புத்தியின் துணைகொண்டு எதிரிகளை வென்றெடுக்கும் ஆற்றல் பொருந்தியவர்களாகவும் இருப்பார்களாம்.


மோவாய்
 • சிறிய குறுகிய மோவாயை உடையவர்கள் பொறாமை கொண்டவர்களாகவும் எண்ணத்தில் சுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பபார்களாம்.
 • சதுரமான முகவாய்கட்டு அமையப் பெற்றவர்கள் துணிச்சலான மிக்க வலிமையுடையவர்களாக இருப்பார்களாம்.
 • சதைப்பிடித்தமுள்ள மோவாயையுடையவர்கள் செல்வந்தவர்கள் இருப்பார்களாம்.
 • ஒட்டிப்போன முகவாய்கட்டையுடையவர்கள் பொறாமை குணமுடையவர்களாக இருப்பார்களாம்.

நாளைய பதிவில் ஆண்களின் கைகள், விரல்கள்,உள்ளங்கை பற்றி சித்தர்கள் அருளியதை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷனம் - ஆண்களி ன் முகம் தொடர்ச்சி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணத்தின் வரையறைகள் ஒரே நாளில் உருவாகி இருக்க முடியாது. பல நூறு ஆண்டுகளாய் தொடர்ந்த அனுபவ ஆய்வுகளின் தொகுப்பாகவோ அல்லது தெளிவுகளாக இருக்கலாம்.

மனிதனின் எண்ணம், செயல், சிந்தனைகள் எல்லாம் மிகவும் வளர்ந்த் விட்ட சூழழுக்கு இனையாக இந்த கலையும் மேம்படுத்தப் பட்டிருக்கிறதா என்கிற கேள்விக்கு நம்மிடையே பதில் இல்லை. அநேகமாய் அழிந்து கொண்டிருக்கும் பல நூற்றாண்டுத் தகவலை மீட்டெடுக்கும் பணியையே நாம் இன்னமும் செய்து கொண்டிருக்கிரோம்.எனவே ஆர்வமுள்ளோர் இனைந்து இந்த கலையின் வார்ப்புகளையும், தரவுகளையும் மேம்படுத்த் வேண்டியது அவசியம்.

இன்றைய பதிவில் ஆண்களின் காது மற்றும் நாக்கினை வைத்து அவர்தம் இயல்புகளை சித்தர்கள் எவ்வாறு வரையறுத்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

காது

 • விசாலமானதாகவும், முகத்துக்கு பொறுத்தமில்லாத பெரிய காதுகளை உடையவர்கள் சக்தியற்றவர்களாகவும் சோம்பேறிகளாகவும் இருப்பார்களாம்.
 • சிறிய காதுகளை உடையவர்கள் எதிலும் பொறுமை காட்டி, சாதுர்யமான காரியங்களை முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்களாம். ஆனால் மிகவும் சிறிய காதுகளை உடையவர்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பார்களாம்.
 • சிவந்த காதுகளைக் கொண்டவர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வார்களாம்..
 • சிறப்பாகவும் முகத்துக்கு மிகவும் பொருத்தமான காதுகளையுடையவர்கள் புத்திசாலிகளாகவும் எதையும் செம்மையாகச் செய்யக்கூடிய விழிப்புடனும் இருப்பார்களாம்.அத்துடன் அவர்கள் சிறந்த தைரியசாலியாகவும் இருப்பார்களாம்.
 • கொஞ்சம் நீளமான காதையுடையவர்கள் அதிக பலமுள்ளவர்களாகவும் நாணமில்லாதவர்களாகவும் இருப்பதுடன்,அதிக சுவையான உணவை விரும்பி
 • உண்பவர்களாகவும், போஜனப் பிரியர்களாகவும் இருப்பார்களாம்.
 • காதின் கீழ்பகுதி விசாலமாக காணப்படுபவர்கள் பணம் படைத்தவர்களாக இருப்பார்களாம்.இவர்களிடம் செல்வம் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்குமாம் .
 • காதுகள் மேடு பள்ளங்களோடும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அமையப் பெற்றவர்களுக்கு புகழ் தானாக வந்து சேருமாம். த்துடன் அவர்கள் ஞானிகளாகவும் விளங்குவார்களாம்.
நாக்கு

 • நாக்கு நீளமாய் இருப்பது மேன்மையைத் தருமாம். மேலும் நீல வர்ணமாக இருந்தால் அதுவும் அதிக மேன்மையைத் தருமாம்.
 • நாக்கு வெண்மையான தகடுபோன்றிருந்தால் நல்லதல்ல. எத்தனை செல்வமிருந்தாலும் அழிந்துவிடுமாம்.
 • நாக்கின் நுனி கூர்மையுடையதாகவும் நுண்ணியதாகவும் அமையப்பெற்றிருந்தால் சிறந்த மதியூயாகியாகவும், ஞானியாகவும் இருப்பார்களாம்.
 • வறண்டு, வெளுத்துப்போன நாக்கையுடையவர்கள் சொத்துக்கள் விரயம் செய்பவர்களாக இருப்பார்களாம். இவர்களுக்கும் உழைப்பில் ஆர்வமில்லாது இருப்பதுடன் சோம்பேறித்தனமும் வந்துவிடுமாம்.
 • சிவந்த நாக்கினையுடையவர்கள் சிறப்புக்குரியவர்களாக இருப்பார்களாம் இவர்களுக்குச் சிறந்த வாக்குச்சாதுரியமும், பிறரை ஈர்க்கும் தன்மையுடைய பேச்சும் இருப்பதுடன் கவர்ச்சிகரமான பேச்சுக்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பார்களாம்.
 • சொரசொரப்பான நாக்கை உடையவர்கள் நல்ல சுவையை விரும்புவார்களாம் அதாவது போஜனப் பிரியர்களாக இருப்பார்களாம்.
நாளைய பதிவில் மோவாய், மீசை,தாடி பற்றி சித்தர்கள் கூறியதை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் முகம்...தொடர்ச்சி!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் ஆண்களின் முகம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் இருந்து திரட்டப் பெற்ற தகவல்கள் இன்றும் தொடர்கின்றன. பாடல்களை தட்டச்சு செய்வதில் உள்ள சிரமம் மற்றும் பதிவின் நீளத்தினை கருத்தில் கொண்டு தகவல்களை மட்டும் இங்கே தொகுத்தளிக்கிறேன்.இந்த தகவல்களைக் கொண்டு ஒரு மனிதனை பார்த்த மாத்திரத்தில் அவரது குணாதிசயங்களையும், இயல்புகளையும் சற்றேறக் குறைய கணித்து விட முடியுமென்றே தோன்றுகிறது.

வாருங்கள்!, ஆண்களின் மூக்கு,வாய்,உதடு,பற்கள் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

மூக்கு
 • பெரிய மூக்கை உடையவர்கள் பொய்மையுடையவர்களாகவும், கலகக் காரர்களாகவும், பெண்பித்தர்களாகவும் இருப்பார்களாம்.
 • பெரியதாகவும்,தொங்கிக் கொண்டிருப்பதைப் போலவும் காணப்படும் மூக்கை உடையவர்கள் பேராசை கொண்டவர்களாகவும், தாங்கள் செய்யும் செயல்களை இரகசியமாகப் பேணுபவர்களாகவும் இருப்பார்களாம்.
 • முகத்திற்க்குப் பொருத்தமாவும்,அளவில் பெரியதான மூக்கை உடையவர்கள் உற்சாகமும் அமைதியும் கொண்டவர்களாகவும், பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்..
 • புள்ளிகள் அதிகம் உள்ளமூக்கை உடையவர்கள் அதிகம் கர்வம் கொண்டவர்களாகவும் வீணர்களாகவும் இருப்பார்களாம்.மூக்கின் நுனிப்பகுதியில் உரோமம் கொண்டவர்கள் வாழ்வில் எந்தசிறப்பும் அடைய முடியாதவர்களாக இருப்பார்களாம்.
 • மூக்கு நீண்டு நுனி கிளியின் மூக்குப் போல வளைந்தும் இருந்தால் அதி புத்தி சாலிகளாகவும், அத்துடன் உலக அனுபவங்களில் சிறந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
 • தடிப்பு குறைந்த மூக்கை உடையவர்கள் ஆயுள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.நீண்ட மூக்கை உடையவர்கள் நல்ல அதிஷ்டம் உள்ளவர்களாகவும் வளமான வாழ்வு வாழ்பவர்களாகவும் இருப்பார்களாம். தட்டையான மூக்கை உடையவர்கள திருடர்களாக இருப்பார்களாம்.
 • சதைப்பாங்குடன் அழுத்தமான மூக்கை உடையவர்கள் உயர் பதவிகள் வகிப்பார்களாம்.மூக்கின் நுனிப்பகுதி சப்பையாக இருந்தால் அவர்களுக்கு காம உணர்ச்சிக் குறைவும் ஆண்மைத் தன்மையும் இல்லாதிருக்குமாம்.


வாய்

 • வாய் பெரிதாகவும் அகலமாகவும் இருப்பவர்கள சாப்பாட்டுப் பிரியர்களாக இருப்பார்களாம்.சிறியவாயை உடையவர்கள பயந்த சுபாவமும், நிதானமானவர்களாகவும் இருப்பார்களாம்..
 • குவிந்த அழகிய வாயை உடையவர்கள் பொய்பேசுபவர்களாகவும், வாயாடியாகவும் இருப்பார்களாம்.சிவந்த வாயை உடையவர்கள் சுக போகங்களை அனுபவிப்பார்களாம்.

உதடு

 • உதடு சிவப்பு நிறமாகவும், தாமரை இழழ்போன்றுமிருந்தால் அரசன் போல் வாழ்வார்களாம்.மேடு பள்ளமான உதடுகள் இருந்தால் தரித்திர வாழ்வு இருக்குமாம்.
 • கீழ் உதடு கோவைப் பழத்தைப்போல இயற்கையாகவே செம்மையாக அமையப்பெற்றவர்கள் பொன், பொருள், வீடு, நிலம் தனமுடையவர்களாகவும், நல்ல மரபினைச் நெர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
 • கீழ் உதடு அதிகப் பருமனாக அமைந்திருப்பவர்கள் அளவுக்கு மீறிய கற்பனை சக்தியுடையவர்களாகவும், இனிமையாகப் பெசும் ஆற்றல் படைத்தவர்களாகவும் இருப்பார்களாம்.
 • பிளவுப்பட்டிருக்கும் உதடுகளையுடைவர்கள் குற்றமனம் உடையவர்களாகவும், வலுச்சண்டையிடும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
 • லேசாகவும், மிருதுவாகவும், சிறியனவாகவும், உதடு அமைந்திருந்தால் அவர்கள் வாயாடிகளாகவும் பேச்சுத்திறன் பெற்றவர்களாகவும் இருப்பார்களாம்.

பற்கள்

 • சிறியனவாகவும், கெட்டியாகவும் பற்கள் இருந்தால் சிறப்பு.கூர்மையாகவும் சமனாகவும் பற்கள் அமைந்திருந்தாலும் சிறப்புத்தான்.
 • சங்கைப்பொல அதிக வெண்மையாகவும், நுனி கூர்மை பெற்றும் இருந்தால் அவர்கள் சுகவாசிகளாகவும், சத்தியம் தவறாதவர்களாகவும் இருப்பார்கள்.
 • நீளமாகவும் ஒரு பக்கம் குட்டையாகவும், மறுபக்கம் நீண்டும் பற்கள் அமைந்திருந்தால் அவர்கள் எதற்க்கும் கவலை கொள்ளாதவர்களாக இருப்பார்களாம்.
 • அகலமான, நெருக்கமில்லாமல் பற்கள் அமைந்திருப்பின் இவர்கள் நிதானமில்லாதவர்களாகவும், அவசரப்புத்திக்காரர்களாக இருப்பார்களாம்.

மேலதிக தகவல்களுடன் நாளைய பதிவில் சந்திப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் முகம்!

Author: தோழி / Labels:

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார்கள்,இன்று அந்த முகத்தின் அங்கங்களைப் பற்றி சித்தர்களின் பாடல்களில் எவ்வாறு கூறப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். இன்றைய தகவல்கள் அனைத்தும் ஆண்களுக்கானவை.

இந்த பதிவுகளின் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன். சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கும் சாமுத்ரிகா லக்‌ஷணத்தின் தகவல்களை ஒரு புள்ளியில் குவிப்பதே இந்த தொடரின் நோக்கம்.இந்த தகவல்கள் அனைத்துமே மேலதிக விவாதம் மற்றும் ஆய்வுகளுக்கானவை.

நெற்றி

 • அகலமான பரந்த நெற்றியை கொண்டர்கள் மன்னர்களும் பணிந்து வணங்கிடக் கூடிய திறமைபெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • அரைச் சந்திரனைப் போல நெற்றி யிருந்தால் செல்வந்தனாகவும், உயரமாகவும், சங்கு போன்ற கரடு முரடான நெற்றியுடைவர்கள் தரித்திரர்களாகவும், தசைப்பிடிப்பான நெற்றியுடையவர்கள் பாவிகளாவும் இருப்பார்களாம்.
 • உயர்ந்த, முக்கோண வடிவமுள்ள நெற்றியுடையவர்களிடத்தில் செல்வம் எப்போதும் குடிகொண்டிருக்குமாம். மேலும் உருண்டை வடிவமான நெற்றி உடையவர்கள் பிறக்கு ஈயாதவர்களாக இருப்பார்களாம்.
 • வியர்வை இல்லாமலும், உலர்ந்துள்ள நெற்றி உடையவர்கள் மிகுந்த துர்பாக்கிய சாலிகள் எனவும், போதுமான வியர்வையுடன், கொஞ்சம் மேடு பள்ளமும் உள்ள நெற்றியுடையவர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பார்களாம்.
 • கீழ்நோக்கிய நெற்றியுடையவர்கள் அரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். சதுரமான நெற்றியை உடையவர்கள் வீரதீரச் செயல் செய்யக்கூடியவர்களாக திகழ்வார்களாம்.
 • சுருக்கம் நிறைந்த நெற்றியை உடையவர்கள் கவனக் குறைவுடன் கீழ்த்தர எண்ணமும் உடையவர்களாகவும், ரேகை ஓடிய நெற்றிக்குச் சொந்தக்காரர்கள் அற்ப ஆயுளைக் கொண்டவர்கள் என்பதையும் பார்த்தவுடன் அறிந்துகொள்ள வேண்டுமாம்.
 • நெற்றியில் இரு ரேகைகள் மட்டும் இருப்பின் அவனது ஆயுட்காலம் அறுபதிலிருந்து எழுபது வரை மதிப்பிடலாமாம். அத்துடன் நெற்றியில் நான்கு ரெகைகள் மட்டும் ஓடுமாயின் அவன் அரசனாவானாம்.
 • நெற்றியில் ஐந்து ரெகைகள் மட்டும் ஓடுமாயின் மிகக்குறைந்த வயதே(45 முதல் 55 வருடம் வரை) உயிர்வாழ்வான் என்றும் அறிந்துகொள்ளலாமாம். மெலும் பல ரேகைகள் நெற்றியில் ஒடிக்கொண்டிருந்தால் அவன் மிகுந்த செல்வத்தொடும், 60 வயதுக்குமேல் சுகமாக வாழ்வானாம்.

புருவங்கள்

 • கண் புருவத்தின் முடிகளானது நீண்டதாக இருப்பின் சாதாரண மனிதர்களாகவும், தீமை பயக்கும் எண்ணத்தை உடையவர்களாகவும் இருப்பார்களாம்..
 • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்..
 • புருவங்களில் இயற்கையாகவே மடிப்புகள் விழுந்திருந்தால் அவன் மரியாதையில்லாதவனாகவும், பொறாமை உடையவனாகவும் இருப்பானாம்.
 • எவனொருவன் கண்களின் மேல் முடிகள் குட்டையாகவும்,சிறியதாகவும் அமையப் பெற்றிருக்கிறானோ, அவன் சிறந்த அறிவாளியாகவும், இரகசியம் காப்பவனாகவும் இருப்பானாம்.
 • கண்களின் இமைகளில் நீளமாக இருந்தால் அவன் சட்ட வல்லுநராக இருப்பானாம். இமைகளில் அதிக ரோமம் இருப்பின் புத்தி மந்தமாக இருக்குமாம்.
 • விசாலமாகவும், விரிவாகவும் உள்ள புருவங்களை உடையவன் ஏழையாக இருப்பானாம்.
 • இமைகள்நீளமாகவும், ஒன்றோடொன்று பொருந்தாமலும் இருப்பவன் செல்வந்தனாக இருப்பானாம்.அரைச் சந்திரனைப் போன்ற புருவங்களையுடையவர்களும் செல்வர்கள் போல் வாழ்வார்களாம். இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் வெட்டுடையவர்கள் வறியவர்களாக இருப்பார்களாம்.
 • புருவங்கள் கீழ் நோக்கிச் சரிந்திருந்தாலும், அமுக்கப்பட்ட புருவங்களை உடையவர்களும் பெண் சுகத்தை அனுபவிக்கத் தகுதியில்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களால் பெண்ணைத் திருப்தி செய்ய இயலாதென்றும், ஆண்மை குன்றியிருக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்களாம்.

கண்கள்

 • பெரிய கண்களை உடையவர்கள் இயல்பில் சோம்பேறிகளாகவும், சிறந்த மதியுகம் உடையவர்களாகவும், செயல்வீரர்களாகவும், தீரர்களாகவும், நடத்தை கெட்டவர்களாகவும், கடவுள் பக்தி இல்லாதவர்களாகவும் இருப்பார்களாம்.
 • ஆழமான கண்களை உடையவர்கள் பெரிய மனதை உடையவர்களாகவும், சந்தேக எண்ணங் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.
 • கூர்மையும், தீர்மான கண்களையும், சாய்வான கண் இமைகளையுடையவர்கள் போக்கிரிகளாகவும், அநியாயம் செய்யும் எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • கோவெறு கழுமையைப் போன்ற சிறிய கண்களை உடையவர்கள் மந்தப் புத்தி உடையவர்களாகவும், பிறர் சொல்வதை உடனே நம்பிவிடக் கூடிய மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
 • தாமரை இதழ் பொன்ற கண்களையுடையவர்கள் அறிவு ஜீவிகளாக, ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம். சிறிய கண்களை உடையவர்கள் யானையைப் போன்ற பலசாலியாகவும் போர் வீரனாகவும் இருப்பார்களாம். பூனையின் கண்களைப் போன்று உடையவர்கள் பாவம் உடையவராவார்களாம்.
 • வெண்மை கலந்த கண்களையுடையவர்கள் கலை, இலக்கிய ஈடுபாடும், சமூக மாற்றத்திற்குப் போராடும் குணங்களைக் கொண்டவர்கள் என்பதை அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டுமாம்.சித்திரத்தை நினைவூட்டும் கண்களை உடையவர்கள் அரசராகத் தகுதிப்பெற்றவர்களாக இருப்பார்களாம்.
 • உருண்டை வடிவமான கண்களையுடையவர்கள் பாவச்செயல்களைச் செய்வதில் தேர்ச்சி பெற்றிருப்பார்களாம். இவர்களிடம் பழகுதல் கூடாதாம்.
 • செங்கழுநீர்ப் பூ போன்ற கண்களை உடையவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவராகவும், நீதிக்கம் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குவார்களாம்.
 • கலைமானின் கண்களைப் போன்ற கண்களையுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்களாகவும், தந்திரம் உடையவர்களாகவும் இருப்பார்களாம்.

நாளைய பதிவில் ஆண்களின் மூக்கு, வாய், பற்கள் தொடர்பாக சித்தர்கள் கூறியுள்ள தகவல்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஆண்களின் வகையும், தலை முடியும்!

Author: தோழி / Labels:

ஆண்களின் உடல் அமைப்பினை வைத்து அவர்களை நான்கு வகையாக அகத்தியர் அருளியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இவர்களை இனம் காண்பதைப் பற்றியும் அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கின்றார். பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு பாடல்களை தவிர்த்து பாடலின் கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

விதவஸ்தசுபசாதி

இந்த வகை ஆண்கள் தங்களின் உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் வாகுடன் நேர்த்தியான அங்கங்களை கொண்டு, அழகிய உடற்கட்டினை கொண்டிருப்பார்கள் என்றும்,எப்பொழுதும் சூடான உணவையே விரும்பி உண்பவர்களாக இருப்பர் என்கிறார். பொதுவில் தூய்மையான நல்லொழுக்கமும் எப்போதும் உண்மையையே பேசும் இயல்பினராக இருப்பர் என்கிறார் அகத்தியர்.

பயிரபதி சாதி

இந்த வகை ஆண்களின் தலையானது உயர்ந்தும்,அகன்ற தடித்த நெற்றியினை கொண்டிருப்பர் என்கிறார்.மேலும் இவர்களின் காதுகள் வழக்கத்தை விட பெரியதாக இருக்குமாம். இத்தகையவர்கள் சூடான உணவை வெறுப்பவர்களாக இருப்பர். பொதுவில் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.

சாமசாதி

இந்த வகையான ஆண்கள் தோற்றத்தில் முரட்டுத் தனமாக தென் பட்டாலும் மனதளவில் மென்மையானவர்களாகவும், நல்ல இயல்பினராகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பர் என்கிறார். மேலும் சூடான உணவினை சிறிது சிறிதாய் ரசித்து உண்ணும் தன்மையுடைவர்கள் என்கிறார்.

பிரகாசாதி

இந்த வகையான ஆண்கள் செம்மையான முகமும் நீண்ட வெண்மையான பற்களும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும். பொதுவில் இத்தகையவர்கள் கபடத்தனம் நிறைந்தவர்களாக, பொய் பேசும் இயல்பினராகவும் இருப்பர் என்கிறார்.

இது தவிர சித்தர்கள் மனிதர்களின் அவயங்களின் அமைப்பினை வைத்து அவர்தம் இயல்பினை கணித்தும் கூறியிருக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரையில் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மீசை, தாடிகள், மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பு, தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், விந்து, பீஜங்கள், ஆண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து பலன் கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் சில அவயங்களைப் பற்றிய குறிப்புகளை இனி பார்ப்போம்.

தலை முடி

 • தொடுவதற்கு மிருதுவாகவும்,அதே நேரத்தில் உறுதியான முடியையுடையவர்கள் மிகுந்த ஆண்மையுடையவர்களாம், இத்தகையவர்கள் குளிர்ச்சியுள்ள சரீரத்தையுடையவர்களாக இருப்பார்களாம்.
 • தொடுவதற்கு மிருதுவாகவும்,கீழே தொங்கிக் கொண்டிருக்கும் முடியுள்ளவர்கள் இரத்த பிடிப்புயுடையவர்களாயும்,உஷ்ண உடம்பை உடையவர்களாகவும் இருப்பார்களாம்.
 • அதிக அளவில் அடர்த்தியுடன், விரைந்து வளரும் இயல்புடைய முடியுடையவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படுவார்களாக இருப்பார்களாம்.
 • அடர் கருப்பு நிறமாகவும், அதே நேரத்தில் சுருள் சுருளாயுமிருக்கிற முடி உடையவர்கள் அதிக உஷ்ணமுடையவர்களாக இருப்பார்களாம்.
 • நேராகவும், முடிவில் முள்ளம்பன்றியின் சிறு முள்ளைப் போலும் உள்ள முடியையுடையவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்களாம்.
 • வழவழப்பானதும், வளைந்த முடி உள்ளவர்கள், நேர்மையானவர்களாயும், விஷய விவகாரங்களை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையுடைவர்களாக இருப்பார்களாம்.
 • பளிச்சென பஞ்சு போல மிருதுவான முடி உடையவர்கள் பலவீனமானவர்களாகவும், நோயாளிகளாயுமிருப்பார்களாம்.

ஆச்சர்யம்தானே!, பதிவின் நீளம் கருதி மிகுதியை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாமுத்ரிகா லக்‌ஷணம் -ஆண்களின் வகைகள்!

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பழமையான நூல்கள் இருந்தாலும் காலத்தால் சித்தர்களின் பாடல்களில் காணப் படும் தகவல்களே மிகப் பழமையானதாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளில் சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றி தனி நூல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் தமிழில் இம்மாதிரி தனி நூல்கள் ஏதும் நமக்கு கிடைக்க வில்லை. சித்தர்களின் பாடல்களின் ஊடே சாமுத்ரிகா லக்‌ஷணம் பற்றிய தகவல்கள் விரவியிருக்கிறது. இந்த பதிவுகளில் நான் பகிர இருக்கும் தகவல்கள் அனைத்தும் அகத்தியர், போகர், தேரையர் ஆகியோரின் நூல்களில் இருந்து திரட்டப் பட்டவை. அந்த நூல்களின் பெயர்கள் பின் வருமாறு...

அகத்தியர் அருளிய “அகத்தியரின் ஏம தத்துவம்”

அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000”

போகர் அருளிய “போகர் 12000”,

தேரையர் அருளிய “தேரையர் நயனவிதி”


ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பெரும் பிரிவாக வைத்து சாமுத்ரிகா லக்‌ஷணம் கூறப்பட்டிருக்கிறது. இரு பாலினத்தவரிலும் வெவ்வேறு வகைகள் இருப்பதாக துவங்கி அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கான இயல்புகளை பட்டியலிட்டிருக்கின்றனர்.இந்த வகையில் துவக்கத்தில் ஆண்களைப் பற்றி பார்ப்போம்.அகத்தியர் ஆண்களை பின் வருமாறு வகைப் படுத்துகிறார்.


"சித்தியென்ற ஆண்சாதி நாலுண்டுகேளு
செப்புகிறேன் பாலகா புலத்தியனேகேள்
வித்தியென்னும் விதவஸ்தசுபசாதி யென்றுபேரு
விவேகமுள்ள பயிரபதி சாதியென்றும்பேரு
சுத்தியெனும் சாமசாதி யென்றும்பேரு
சைதன்ய பிரகாசாதி யென்றும்பேரு
முத்தியெனு ஆண்சாதி நான்கின்பேர்கள்
முக்கியமாய்ச் சொல்லிவிட்டோம் ஆண்சாதிநாலே"

- அகத்தியர் -

ஆண்களில் நான்கு வகையினர் இருப்பதாக தன் மாணவர் புலத்தியருக்கு கூறிடும் அகத்தியர், அந்த வகைகளின் பெயர்களை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

விதவஸ்தசுபசாதி
பயிரபதி சாதி
சாமசாதி
பிரகாசாதி

பதிவின் நீளம் கருதி ஆண்களுக்கான சாமுத்ரிகா லக்‌ஷண விஷயங்களை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...