”தசதீட்சை”......8,9,10 !

Author: தோழி / Labels:

தசதீட்சை வரிசையில் இன்று மீதமிருக்கும் மூன்று தீட்சைகளை பார்ப்போம்.

எட்டாம் தீட்சை

செய்யவே எட்டாந் தீட்சையைக் கேளு
பையவே பிரம பதியிட மாகிக்
கையது நெல்லிக்கனி யதுபோல
வையகந் தன்னிற் கம்மென நில்லே.

நில்லே நிலையில் நினைவுடன் நின்றால்
தொல்லைகள் அகலுஞ் சோதிகள் காணுந்
தில்லையில் வாழுந்த தெரிசனங் காணும்
நல்லது எட்டுச் சித்துகள் நன்மையே.

ஏழாவது தீட்சை செபித்து முடிந்ததும், எட்டாவது தீட்சையாக "கம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தொல்லைகள் எல்லாம் நீங்குமாம். மேலும் சோதி தரிசனமும், தில்லையில் வாழும் ஈசன் தரிசனமும் கிட்டுமாம். இந்த எட்டு சித்துக்களும் கைவரப் பெறுவது மிக்க நன்மையாகும் என்கிறார் மச்ச முனிவர்.

ஒன்பதாம் தீட்சை

நன்மையா மென்பதாந் தீட்சையைக்கேளு
உன்னமரும் மெனவே யுகந்துருக் கொண்டால்
சின்மயமான தெரிசனங் காணும்
தன்மை யீதெனவே சாந்திட முத்தியே.

எட்டாவது தீட்சை செபித்து முடிந்ததும் ஒன்பதாவது தீட்சையாக "ரூம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க சின்மயமான சிவனின் தரிசனம் கிட்டுமாம் அவ்வாறு கிட்டினால், முக்தியும் கைகூடும் என்கிறார்.

பத்தாம் தீட்சை

சாந்திடப் பத்தாந் தீட்சையைக்கேளு
கூர்ந்திடு மந்தக் குறியை நீபார்த்து
ஆர்ந்திடு மம்மென றனுதினம் நோக்கில்
தீர்ந்திடும் பிறவித் திருவு மாமே.

ஒன்பதாவது தீட்சை சிறப்பாக செபித்து முடிந்ததும் பத்தாவது தீட்சையாக "மம்" என்ற மந்திரத்தினை முழுமனதுடன் ஒருமண்டலம் செபிக்க மறுபிறவி நீங்கும் என்கிறார்.இதன் மூல பிறவா பேரின்பநிலை சித்திப்பதுடன், சொரூப சித்தியும் கைகூடுமாம்.

இத்துடன் தசதீட்சை விவரங்கள் நிறைவடைந்தன. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

very interesting.

Shiva said...

நன்று, இரண்டாவது தீட்சையும், ஒன்பதாவது தீட்சையும் , இரண்டும் ஒரேபோல் " உம்" என்று உள்ளதே? இது சரியா, கொஞ்சம் சொல்லுங்களேன்.
தீட்சை மந்திரத்துக்கும் " ஓம்" என்று முதலில் சேர்த்து சொல்லவேண்டுமா?

Unknown said...

i dont have words to thankyou.
i want your blessings so that i will give out all my bad habits and get into the world of siddhas.

Thankyou very much for your goodwork and there is no doubt that you will have the blessings of all siddhars so that only you can do all this work.

Thanks a lot.

With Love,
Raghu
raghusambath@yahoo.com

ravi j said...

GOOD DAY & GOOD LUCK

RAVI J

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் தச தீக்ஷை குறித்து ஒரு கருத்துரை வெளிய்ட்டால்,அனைவரது சந்தேகங்களும் தீரும்.
மிக்க நன்றி

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் தச தீக்ஷை குறித்து ஒரு கருத்துரை வெளிய்ட்டால்,அனைவரது சந்தேகங்களும் தீரும்.
மிக்க நன்றி

RAVINDRAN said...

நன்றி

Karikalan said...

அகத்தியர் தன்னை ஒரு சாருவகன் என்று கூறுகின்றார், சாருவகன் என்றால் பொருள் முதல் வாதி என்று பொருள். உலகில் தேல்ஸ் முதல் இன்று வரை உள்ள தத்துவ ஞானிகள் அனைவரும் கடவுளை பற்றியும் அவரின் படைப்பான உலகம் தோன்றியதை பற்றியும் பேசும்பொழுது, சித்தர்கள் மட்டும் தன்னை கொண்டு வின்னைகண்டார்கள், என் பாட்டி அவ்வை சொன்னாள் "அண்டத்தில் உள்ளது அணைத்தும் இப்பிண்டத்தில் உள்ளது" என்று எவ்வளவு சிறந்த அறிவு, இவ்வாறான பொருள் முதல் வாதியான சித்தர்கள் அனைவரும் மிகச் சிறந்த அறிவியல் மேதைகள் என்பது உண்மையே, பின் எப்போது வேதக் கொள்கைக்கு மாறினார்கள் ?

வேர்த்து மூச்சிரைகும்போது
வேதம் வந்து உதவுமோ?
நாதன் உள்ளிருக்கும்போது
நட்ட கல்லும் பேசுமோ ? என்று வேதத்தை சாடியவர்கள் சித்தர்கள்.
இவ்வாறான சித்தர்கள் கருத்து முதல் கொள்கைக்கு எப்படி மாறிஇருப்பார்கள் ?

சித்தர்கள் யாக குண்டம் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?

Post a comment