சாமுத்ரிகா லக்‌ஷணம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

சாமுத்ரிகா லக்‌ஷணம் என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆகையால் இந்த பெயருடனே இந்த தொடரினை துவங்குகிறேன். தெரிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்கிறேன்.

சாமுத்ரிகா லக்‌ஷனம் அல்லது அங்க லக்‌ஷணம் பற்றி இந்து மரபியலில் சமஸ்கிருதம்,தெலுங்கு,தமிழ் மொழிகளில் பழமையான நூல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றுள் தமிழில் சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மட்டுமே இந்த தொடரில் தொகுத்தளிக்க இருக்கிறேன்.

மனிதர்களின் குணாதிசயங்களை அவர்களின் ஜீன்கள் நிர்ணயிப்பதாக நவீன அறிவியல் கூறுகிறது.ஒருவரின் தோற்றம், இயல்பு,குணாதிசயங்கள் போன்றவைகளில் பரம்பரையின் பாதிப்புகள் தொடர்கிறது எனவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிறுவப் பட்டிருக்கிறது.நமது முன்னோர்கள் இதை இன்னமும் எளிமையாக் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்றார்கள்.

சாமுத்ரிகா லக்‌ஷணத்தை சோதிட இயலோடு தொடர்புடைய ஒரு கலையாகவே பலரும் கருதுகின்றனர். பழந் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு வாழ்வியல் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பிறப்பில் இருந்து இறப்பு வரையான அத்தனை அம்சங்களின் ஊடாக இந்த கலையின் பயன் பாட்டில் இருந்திருக்கிறது. மனித வளர்ச்சியில் ஊடாக உடலில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் என இவை ஏற்படுத்தும் தாக்கங்களை மிக விரிவாகவே சித்தர்கள் தங்களின் பாடல்களில் பதிந்து வைத்திருக்கின்றனர்.

அகத்தியர், தேரையர்,போகர் போன்றவர்களின் பாடல்களில் இந்த அங்க லக்‌ஷணம் பற்றிய விவரிப்புகள் நிறைய காணக் கிடைக்கின்றன. ஆண், பெண் என இரு பாலாருக்கும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். ஒருவரின் அங்க அமைப்பு அவரின் இயல்புகளையும், அவர்களுக்கான பலன்களையும் தீர்மானிப்பதாக கூறுகின்றனர். தாங்கள் சந்தித்த பல் வேறு மனிதர்களை அவர்களின் இயல்புகளை ஆய்ந்தறிந்தே இதனை எழுதியிருக்க வேண்டுமென நம்புகிறேன்.

நமக்கு கிடைத்திருக்கும் இந்த தகவல்களைக் கொண்டு மேலதிக ஆய்வுகளும், விவாதங்களும் இந்த கலையை மேலும் செம்மைப் படுத்த உதவும். என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பில் இந்த கலையை திருமண பொருத்தம், குழந்தை பிறப்பு, நோய்களுக்கான அறிகுறிகளை கண்டறிதல் போன்றவைகளில் சிறப்பாக பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

அநேகமாய் பழக்கத்தில் இருந்து மறைந்து விட்ட இந்த கலையினைப் பற்றி இனி வரும் நாட்களில் விரிவாக பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

14 comments:

Soundarraju said...

Nalla Pathivu ,
Ithan Thodarchikaka kathirukirom ,..

Vaalthukkal
Nandri

Saravanakumar Karunanithi said...

நன்றி, உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருகிறேன்

Guruvadi Saranam said...

ok thozi thodarungal ungal sevaiyai.

Nandri
S.Rajendran
Bangalore.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் புதிய தொடக்கமான சாமுத்திரிக லக்ஷணம் பற்றிய பதிவுகள் ,ஆண் மற்றும் பெண் தோற்ற்றம் பற்றி விளக்குவது அறிந்து மிக்க நன்றி.


Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

ramprakash said...

உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன், ஒரு மாறுபட்ட வலைத்தளம் என்றே சொல்வேன். சித்தர்களைப் பற்றியும், அவர்களின் விஞ்ஞானத்தை பற்றியுமான விஷயங்கள் பலவை காணமுடிகிறது, ஒரு மாற்றத்தை, ஆச்சர்யத்தை உடைய தளம் போல் இருந்தாலும் இறுதியில் ஒரு விசயம் நன்கு உணர்த்துகிறது. இதில் வரும் விசயங்களை நூல்களில் காணலாம். பலதரப்பட்ட விசயங்களை தொகுத்தி வழங்கிக் கொண்டிருக்கிறார். புத்தகத்தில் இருந்து எடுக்கப்படும் விசயங்களே அனைத்தும். இன்றைய தலைமுறை மக்களுக்கு இது வலைதளத்தில் படிக்க ஆச்சர்யமாக இருப்பது உண்மை. ஆனால், இவை அனைத்தும் ஒரு புரட்சியாகவோ, ஆராய்ச்சிக்கோ எடுத்துக்கொண்டால், இதில் இருந்து ஒரு இம்மி அளவும் உபகொயப்படாது. அவர் மேலோட்ட செய்திகளே பதிவு செய்திருப்பார். மிகைப்படுத்தியே எனக்கு சொல்லிவிட்டனர். இது வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

RAVINDRAN said...

தோழியே,
பதிவு மென் மேலும் சிறக்க வாழ்துக்கள்

பாலா said...

அன்புள்ள தோழியே ,

தங்களின் புதிய பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் . ஆயினும் இது ஒரு வகையான போதை என்பது எனது கருத்து. ஏனெனில் இதனை நான் கற்றபோது எனக்கு வயது 15 . மனிதனின் மனம் அலைபாயும் ,இந்த பதிவும் அப்படிதான் . இருந்தாலும் உங்களுடைய படைப்பு மிகவும் தெளிவாக இருக்கும் என்பதில் எமக்கு ரொம்ப நம்பிக்கை. இது சித்தர்களால் கூறப்பட்ட அங்க லட்சணங்கள் ஆகும்.

உங்களின் பதிவுக்காக...

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Praveen Kumar said...

நன்றி .

pugazh said...

thozhi enaku miga periya santhegam ,
athavuthu neengal koorum sithar paadal kalil vetru mozhi ezhuthukal kalanthu ullathu.
utharanathirku "ja" "she" "ju" "jala vithaikal"
"ravi"........ itharku neengal pathil azhithey aaga vendum!!!

சுவாமிநாதன் said...

ஆரம்பமே ஆவலை தூண்டுகிறது., நிச்சயம் மனதில் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்., நன்றி

curesure4u said...

உங்கள் பதிவுகளை எதிர்பார்த்தவனாக ...

♠புதுவை சிவா♠ said...

கருமையபதிவு அல்லது மறபு இயல் இக் கலையின் வல்லவர்கள் நமது சித்தர்கள்.

மூலமும் ஆதியும் அதனுல்
அடங்கி விடும்
நிழலிலும் தெரியும்
உள் வடிவம்
சாமானியன் சொல்லுவன்
தலை எழுத்து

நமது உடலில் உள்ள "பொறி"யட்ட"காயம்" இக் கலைக்கு முக்கிய பங்கு செய்கிறது.

அந்த மறபை மாற்றி அமைக்கும் வல்லமை சித்தர்களுக்கு உண்டு.

Rajeswari said...

நேர்முகத்தேர்வு நடத்துவதே இந்த சாமுத்ரிகா

லட்சணம் பிரயோகிப்பதற்காகத்தானோ?

p.balasundar said...

nalla muyarchi thodara en vaazhthukkal....!

Post a Comment