சதுரகிரி மலை தகவல் தொடர்.....தொடரும்!

Author: தோழி / Labels:

சதுரகிரி மலையின் மகத்துவங்களை வெறும் இருபத்திநாலு பதிவுகளில் அடக்கிவிட இயலாது. இதுவரை பகிரப் பட்ட தகவல்களை சதுரகிரி மலை பற்றிய ஓர் அறிமுகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

காலம் காலமாய் சதுரகிரி மலை ஒரு மர்ம பூமியாகவும், அங்கே அமானுஷ்யங்கள் குடி கொண்டிருப்பதைப் போன்றதொரு எண்ணப் போக்கு நிறுவப் பட்டிருக்கிறது. பகுத்தறிவுக்கு சற்றும் ஒவ்வாத பலநூறு புராணக் கதைகள் தந்த கிளர்ச்சியில் சதுரகிரி மலையின் நிஜமான சிறப்புகள் இன்றும் இலைமறை காயாகவே இருக்கிறது.

தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஆய்வுகளிலும், அதன் தெளிவுகளிலும் செலவழித்த மகத்தான மனிதர்களின் கண்டறிதல்கள் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைய தமிழில் ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது. அந்த ஆவணங்கள் இன்றைய தமிழில் ஆவணப் படுத்தப் படவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். இம் மாதிரியான ஒரு சூழலில் சதுரகிரி ம்லை பற்றி ஒரு நிதர்சனமான அறிமுகத்தை தர வேண்டுமென்பதே இந்த தொடரின் நோக்கமாய் இருந்தது. இது வரையில் அதனை ஆகக் கூடிய நேர்மையுடன் செய்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

துவக்கத்தில் நிறைய தயக்கத்துடனே இந்த தொடரினை எழுதிட முனைந்தேன். ஏனெனில் நான் முற்றிலும் பார்த்தறியாத ஒரு நிலப் பரப்பின் விவரங்களை எழுதுவதில் நிறையவே சிரமங்கள் இருந்தன. இது வரை சதுரகிரி மலை குறித்து ஆவணப் படுத்தப் பட்டுள்ள உரைநடைகள் பெரும்பாலும் நெகிழ்வு நிலையில் வர்த்தக காரணிகளை முன் வைத்து எழுதப் பட்டவை.அவற்றின் ஊடாக பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை,இதனை அறிமுகப் பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

இணையத்தில் சதுரகிரி மலை பற்றிய பெரும்பாலான தகவல்கள் தனி மனிதர்களின் பயண அனுபவங்களாகவே இருந்தன.எனக்கிருக்கும் ஒரே சாத்தியம் சித்தர்களின் பாடல்கள்தான். சித்தர் பாடல்களின் ஊடே சதுரகிரி பற்றிய தகவல்களை மட்டும் தேடி எடுப்பது திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன ஊசியை தேடுவதைப் போன்றதாகும். இவையெல்லாம் ஒரே நாளில் சாத்தியமில்லை.கடந்த பத்தாண்டுகால வாசிப்பனுபவத்தின் சேகரிப்புகளைத்தான் இந்த பதிவுகள்.

ஆரம்பத்தில் என்னுடைய கவலை எல்லாம் இந்த தகவல்கள் எல்லாம் இன்றைய நிஜத்தில் ஒத்துப் போகுமா என்பதாகவே இருந்தது. ஆனால் பின்னூட்டமிட்ட பல நண்பர்களும், தனி மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட நண்பர்கள் இந்த விவரங்கள் மிக நேர்த்தியாக பொருந்துவதாய் கூறிய வார்த்தைகளே தொடர்ந்து உற்சாகமாய் எழுதிட உதவியது. அந்த வகையில் ஊக்கமளித்த அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சதுரகிரி மலை பற்றி பகிர வேண்டியவை இன்னமும் நிறையவே பாக்கியிருக்கிறது.அதற்கு ஒரு வாழ்நாளின் உழைப்பு தேவைப்படும்.மிக நிச்சயமாய் ஒரு தனி மனிதரால் இவற்றை செய்திட முடியாது. ஆர்வமுள்ளவர்கள் அனைவருமாய் சேர்ந்து செய்திட வேண்டிய ஒரு முயற்சி அது.

தகவல்களை திரட்டிக் கொண்டே போவதை விட கிடைத்திருக்கும் தகவல்களை பிற கூறுகளுடன் பொறுத்திப் பார்த்து, அவற்றின் நம்பகத் தன்மையினை உறுதி செய்த பின்னர் மேலதிக ஆய்வுக்ளை செய்வதே சரியான பாதையாக இருக்கும் என நம்புகிறேன். இதுவரை இங்கே பகிர்ந்த் தகவல்களை வைத்து இத்தகைய முன்னெடுப்பினை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.குருவருள் அனுமதித்தால் என் வகைக்கு எதிர்காலத்தில் நானும் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவேன்.

இந்த பதிவுகளை அவற்றின் தகவல்களை ஆர்வமுள்ள நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள்.அத்தகைய ஒரு பரவலே சித்தர்கள் பற்றி தமிழ் சமூகமெங்கும் சிதறிக் கிடக்கும் பல்வேறு தகவல்களை ஒருங்கினைக்க உதவும். நமது முன்னோர்களின் ஆவணப் படுத்தப்படாத அறிவாற்றலை ஒரு புள்ளியில் குவித்து அவற்றை பயனுள்ளதாக்க முடிந்தால்,அத்தகைய ஒரு செயல் நாம் நமது சமகால சமூகத்திற்கும் செய்யும் பெரும் சேவையாக இருக்கும்.

சதுரகிரி மலை பற்றிய அறிமுகத்தினை பார்த்து விட்ட நிலையில் சிறிய இடைவெளிக்குப் பின்னர் இது வரை நாம் பார்த்த கூறுகள் ஒவ்வொன்றினைப் பற்றியும் விரிவாய் எழுதிட முயற்சிக்கிறேன்.தொடரும் ஒத்துழைப்பிற்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

சாமுத்ரிகா லட்சணம் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.அது உண்மையா?,சித்தர் பெருமக்கள் இது குறித்து என்னதான் சொல்லியிருக்கின்றனர்?

ஆம், அடுத்த தொடர் ”சாமுத்ரிகா லட்சணம்”தான். காத்திருங்கள்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

Netrikkan said...

அடுத்த பதிவிற்க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

என்றும்
அழகிரி

அகோரி said...

சதுரகிரி பதிவுகள் அனைத்தும் அருமை
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறான் தோழி

Guruvadi Saranam said...

தோழி,
உங்கள் பதிப்புகள் அனைத்தும் அருமை.
தங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

வாழ்க வளமுடன் !
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Elangai Tamilan said...

தோழி,
இந்த அளவுக்கு செய்திகள் தந்தது மிக்க மகிழ்ச்சி.மேலும் ,இதனை ஆக்க பூர்வமாக ஆய்வுகள் மேற்கொண்டால் ,சித்தர்கள் தரிசனம் கட்டாயம் கிடைக்கும்.இதுவரை உலகம் கண்ட யுகங்களில்
,எல்லா யுகங்களிலும் சதுரகிரி பற்றி ,செய்திகள் உள்ளதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால் ,சதுரகிரி என்பது சாஸ்துவனமான பூமி எந்தகாலத்திலும்.ஆதலால் ,சதுரகிரி செல்ல வாய்ப்புகளை அருளும்படி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் .
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Elangai Tamilan said...

தோழி,
இந்த அளவுக்கு செய்திகள் தந்தது மிக்க மகிழ்ச்சி.மேலும் ,இதனை ஆக்க பூர்வமாக ஆய்வுகள் மேற்கொண்டால் ,சித்தர்கள் தரிசனம் கட்டாயம் கிடைக்கும்.இதுவரை உலகம் கண்ட யுகங்களில்
,எல்லா யுகங்களிலும் சதுரகிரி பற்றி ,செய்திகள் உள்ளதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆதலால் ,சதுரகிரி என்பது சாஸ்துவனமான பூமி எந்தகாலத்திலும்.ஆதலால் ,சதுரகிரி செல்ல வாய்ப்புகளை அருளும்படி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம் .
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Sri Kamalakkanni Amman Temple said...

நன்றி

pugazh said...

thangalin pathivukaluku nandri..
matrum taangal oru pathipil noikal silavattrirku marrundhu koorineerkal ,
yaan venduvathu "theymal" noiku marundhu.
ithanai patri sitharkal yethenum solli irukaarkala.

Arunsiva said...

தோழி,
இன்றுவரையில் நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த பொக்கிசம், "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" - "சித்தரியல்"(சித்தர்கள் வாழ்வு) என்ற துறை தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது. உங்கள் பணீ சிறக்க என் வாழ்த்துக்கள்.

OHM SIVASAKTHINAGAMMAL said...

உங்கள் வலை பதிவு நன்றாக உள்ளது.
உங்களிடம் அல்லது உங்கள் வலை பதிவை பார்ப்பவர்களிடமோ 1.”ஒளவை ஞானம்” அல்லது 2.“கட்டளை கொத்து” என்ற புத்தகத்தின் பதிவு இருப்பின் தெரிவிக்க இயலுமா? கிடைக்கும் எனில் பலருக்கும் இது பயனுள்ள்தாக இருக்கும்.உதவுங்கள்.

நன்றி.

என்றும் அன்புடன்
ஆர்.கண்ணன்.
ஓம் சிவசக்தி நாகம்மாள் அறக்கட்டளை.

என்றும் உங்கள் வாழ்வில் நல்லதாய் நடக்கட்டும்.

Anonymous said...

தோழி அவர்களுக்கு , இதுவரையில் தாங்கள் அளித்த சதுரகிரி பற்றிய பதிவினை தவறாமல் படித்துவருகிறேன் , தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை , ஏனெனில் நான் வாழ்நாளில் போக நினைக்கும் இடங்களில் சதுரகிரியும் ஒன்று , அத்தகைய இடத்தை பற்றி தங்கள் எழுத போகிறேன் என்று சொன்ன போது , என் ,மகிழ்ச்சிக்கு அளவே இல்லை , மேலும் தாங்கள் கொல்லிமலை , அகத்தியர் மலை பதிவினை எழுதியபோது நான் தங்களை " சதுரகிரி மலை பற்றி ஏதேனும் இருந்தால் கூறுங்கள் " என்று கூறியது தங்களுக்கு நினைவுருக்கும் என்று எண்ணுகிறேன் , எதற்காக இதை கூறுகிறேன் என்றால் , சதுர்ரகிரி மீது எனக்கு பற்று அதிகம் , முடிவாக தாங்கள் எழுதிய இந்த சதுரகிரி தொடர் மிகவும் அற்புதம் , இதை எப்போதும் இந்த வலைப்பூவில் வைத்திருக்குமாறு கேட்டுகொள்கிறேன் . நன்றி நன்றி ...............

சுவாமிநாதன் said...

சதுரகிரி மலைப் பற்றி அருமையாக எழுதி இருந்தீர்கள் நன்றாக இருந்தது. மென்மேலும் உங்களுடைய இந்த பயணம் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

pugazh said...

anbu thozhi matrum thozharkaluku, yarenum nalla "tamizh agarathi"inayathalathai koorungalen!

satheesh said...

நாங்கள் அனைவரும் பெரும் பாக்ய சாலிகள்

சங்கர் குருசாமி said...

Expecting Eagerly about your next series...

VEry Nice work on Sathuragiri..

http://anubhudhi.blogspot.com/

vinayagame said...

தோழி !
தங்களின் சதுரகிரி ஆய்வுகள் மிக தெளிவாக அமைந்தது .என்னை போன்ற எளியோர்க்கும் புரிஉம்படியாக.
தங்களுடைய அடுத்த ஆராச்சி ""சாமுத்திரிக லச்சணம் "" .ஆவலாக உள்ளேன்

ANBE SIVAM said...

really it is very nice

ANBE SIVAM said...

it is really great

R.Ramalakshmi said...

hai very nice. i have visited this temple 5 times. one interesting thing is, a dog will follow you throught the way till you reach temple.

sasikumar said...

Hi thozhi.. did you covered all places in sathuragiri?

சிவஹரிஹரன் said...

சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்) திரு.சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், வெளியூரிலிருந்து வரும் அன்பகர்களுக்காக குளியல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வியாபார நோக்கமில்லாமல் முற்றிலும் இலவச சேவையானதால், தேவைப்படுவோர் 9443324583/9444492998/04563-201685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

maris said...

sathuragiri mahalingam temple heraditary trustee Mr.Raja @ Periyasamy Mob No:9626832131 Mr.Sampath 9843637301

Post a Comment